மதிப்புரை
-
சில புத்தகங்கள் சில அனுபவங்கள்
கடந்த ஆண்டு (2023), வாசிப்பிற்கான ஆண்டாக இருந்திருக்கிறது. புனைவுகள், அபுனைவுகள் மற்றும் ஆலோசனை சொல்வதற்காக வாசித்த திரைக்கதைகள் என நிறைய வாசிக்க முடிந்தது. குறிப்பாக பல சிறுகதைத் (நெடுங்கதை) தொகுப்புகளை தொடர்ந்து வாசித்தது தனியொரு அனுபவம். சில தொகுப்புகளில் சில கதைகள் பெரிதும் பாதித்தன. சல்மாவின் ‘விளிம்பு’ (தொகுப்பு: சாபம்), ஜா. தீபாவின் ‘குருபீடம்’ (தொகுப்பு: நீலம் பூக்கும் திருமடம்) , அழகியபெரியவனின் ‘அம்மா உழைப்பதை நிறுத்திக் கொண்டார்’ ‘ தன்னுள்ளே சஞ்சரிப்பவள்’ (தொகுப்பு:’அம்மா உழைப்பதை நிறுத்திக் Continue reading
-
The Invisible Guardian- நாவல், திரையாக்கம், கொஞ்சம் திரைக்கதை- Baztan Triology பகுதி 1

எந்தவகையான துப்பறியும் கதையாக இருந்தாலும், நாயகன் ஏதோ ஒரு உண்மையை தான் தேடிக் கொண்டு இருக்கிறான். கொலை செய்தது யார், காணாமல் போனது யார் என அந்த உண்மை என்னவாக வேண்டுமானாலும் இருக்கலாம். நாயகன் அந்த உண்மையை கண்டடையும் பாதை எவ்வளவு சுவராஸ்யமாக இருக்கிறதோ அவ்வளவு சுவராஸ்யமாக திரைக்கதை இருக்கும். Continue reading
-
முன்னுரை: அந்த ஆறு நாட்கள்- ஆரூர் பாஸ்கர்
நண்பர் ஆரூர் பாஸ்கரின் ‘அந்த ஆறு நாட்கள்’ குறுநாவலுக்காக எழுதிய முன்னுரையிலிருந்து… புயலுக்கு முன்… கடல் கடவுள் போசிடானின் கோபமே புயலாக, சூறாவளியாக வெளிப்படுகிறது என்ற பண்டைகால கிரேக்கர்களின் நம்பிக்கைக்கும், கடலின் மேற்பரப்பில் ஏற்படும் காற்றழுத்த தாழ்வு நிலையே புயலாக உருவெடுக்கிறது என்ற புரிதலுக்குமிடையே மனித இனம் பெரிதும் வளர்ந்துவிட்டது. மனிதன் கண்டுகொண்ட தொழிநுட்பமும் பெரிதாக வளர்ந்துவிட்டது. ஆனால் இயற்கை இயற்கையாகவே சீரிய காலம் போய், கடந்த அறைநூற்றாண்டில் மனிதனின் பேராசைகள் இயற்கையை அதிகமாகவே சீண்டி (சுரண்டி)விட்டதால்தான், இயற்கை Continue reading
-
சாக்ரட் கேம்ஸ்- நாவல், திரையாக்கம், கொஞ்சம் திரைக்கதை
உலக சினிமாவில் நாவல்கள் படமாக்கப்படுவது ஒன்றும் புதிதல்ல. ஆனால் சமகால இந்திய சினிமாவில் நாவல்கள் திரையாக்கம் செய்யப்படுவது அரிதாகவே நடக்கிறது. இங்கே எழுதப்பட்ட சில நாவல்களை மிக எளிதாகவே திரைக்கதையாக மாற்றி விடமுடியும். ஆனாலும் இந்தியாவில் நாவலுக்கும் சினிமாவிற்கும் ஒரு பெரும் இடைவெளி இருந்துகொண்டே தான் இருக்கிறது. எப்போதாவது ஒரு நாவல் சினிமாவாக உருப்பெற்றால், அதுவும் சிறந்த முறையில் திரையாக்கம் செய்யப்பட்டால் அதை கவனிப்பது நிச்சயம் நல்லதொரு திரைக்கதைப் பயிற்சியாக இருக்கும். நெட்பிலிக்ஸ் சீரியலாக வந்திருக்கும் விக்ரம் Continue reading
-
The Writer’s Journey- Christopher Vogler – சினிமா புத்தகங்கள்- 4
உலகம் முழுக்க தொன்று தொட்டு சொல்லப்பட்டுவரும் தொன்மங்கள், புராணங்கள், பழங்கதைகள் எல்லாவற்றிலும் ஒரு ஒற்றைத் தன்மை இருப்பதாக சொல்கிறார் அறிஞர் ஜோசப் கேம்பல். இதை அவர் ‘Monomyth’ என்கிறார். எல்லாக் கதைகளும் அடிப்படையில் ஒரு ஹீரோவின் பயணமாக இருப்பதால் தான் அந்த ஒற்றைத் தன்மை வெளிப்படுகிறது என்பது அவரது கூற்று. ‘Hero with thousand faces’ என்ற புத்தகத்தில் அவர் விவரித்திருக்கும் இந்த கூற்று ஒரு முக்கியமான திரைக்கதை உத்தி என்று சொல்கிறார் திரைக்கதையாசிரியர் கிறிஸ்டோபர் வாக்லர். Continue reading
-
Save the Cat- Blake Snyder- சினிமா புத்தகங்கள் 3
திரைக்கதை என்பது ஒழுங்கான ஒரு களம், ஒழுங்கற்று பின் மீண்டும் அந்த ஒழுங்கு நிலைக்கு திரும்புவது எனலாம். இதை தான் Beginning, Middle, end என்ற மூன்று நிலை கட்டமைப்பின் மூலம் சொல்கிறோம். ஆரம்பம், பின் கதையில் நிகழும் ஒரு திருப்பம் (கதாப்பாத்திரத்தின் வாழ்க்கையில் நிகழும் திருப்பம்). அதனால் நிகழும் போராட்டம். பின் அதற்கானதொரு தீர்வு. இதை பற்றியெல்லாம் பேசும் புத்தகங்கள் ஆங்கிலத்தில் ஏராளம் உண்டு. நல்ல திரைக்கதை புத்தகங்களை பின்பற்றினால் நல்ல திரைக்கதைகளை உருவாக்கிவிட முடியும் Continue reading