புத்தக விமர்சனம்
-
சினிமா புத்தகங்கள் – நிழல் இதழில்
இந்த மாதம் (மார்ச் 2025) நிழல் இதழில் என்னுடைய கட்டுரை ஒன்று வெளியாகி இருக்கிறது என்பதை பகிர்வதில் மகிழ்கிறேன். சில முக்கிய சினிமா (திரைக்கதை மற்றும் இயக்கம்) புத்தகங்கள் பற்றிய அறிமுகங்கள் கொண்ட கட்டுரை. நன்றி நிழல். Continue reading
-
மைக்ரோ பார்வை- 1- அப்பம் வடை தயிர்சாதம்- பாலகுமாரன்
இதன் ஆரம்ப அத்தியாயங்களில் ஒரு தொடர்பற்ற தன்மை இருக்கிறது. அது இந்நாவல் தொடர்கதையாக எழுதப்பட்டதால் இருக்கலாம். ஆனால் இறுதியில் எல்லா புள்ளிகளும் மிக அழகாக இணைகின்றன. ஒரு தலைமுறைக்கு நிகழ்ந்ததே அடுத்தடுத்த தலைமுறைகளுக்கும் நிகழ்வதே இதன் சுவாரஸ்யம். சுதந்திரத்திற்கு முந்தைய காலகட்டத்தில் புரோகித தொழிலை விட்டுவிட நினைக்கிறது ஒரு பிராமண குடும்பம். வைதீகத்திற்கு மதிப்பு இல்லை, வருங்காலம் இல்லை என்று கருதுகிறார் அந்த குடும்பப் பெரியவர். கும்பகோணத்தில் தற்காலிகமாக சிறிய சுண்டல் கடை தொடங்கி அதற்கு பெரும் Continue reading
-
சில புத்தகங்கள் சில அனுபவங்கள்
கடந்த ஆண்டு (2023), வாசிப்பிற்கான ஆண்டாக இருந்திருக்கிறது. புனைவுகள், அபுனைவுகள் மற்றும் ஆலோசனை சொல்வதற்காக வாசித்த திரைக்கதைகள் என நிறைய வாசிக்க முடிந்தது. குறிப்பாக பல சிறுகதைத் (நெடுங்கதை) தொகுப்புகளை தொடர்ந்து வாசித்தது தனியொரு அனுபவம். சில தொகுப்புகளில் சில கதைகள் பெரிதும் பாதித்தன. சல்மாவின் ‘விளிம்பு’ (தொகுப்பு: சாபம்), ஜா. தீபாவின் ‘குருபீடம்’ (தொகுப்பு: நீலம் பூக்கும் திருமடம்) , அழகியபெரியவனின் ‘அம்மா உழைப்பதை நிறுத்திக் கொண்டார்’ ‘ தன்னுள்ளே சஞ்சரிப்பவள்’ (தொகுப்பு:’அம்மா உழைப்பதை நிறுத்திக் Continue reading
-
திரைக்கதையின் முக்கிய தருணங்கள்- Todd Klick-சினிமா புத்தகங்கள்- 6
Beat By Beat- Todd Klick-சினிமா புத்தகங்கள்- 6 திரைக்கதையில் குறிப்பிடத்தகுந்த மாற்றங்களை சாத்தியப்படுத்தும் தருணங்களை (Moments) ‘பீட்(கள்)’ (Beat)’ என்பார்கள். திரைக்கதையை பீட்களாக அணுகியதில் முக்கியமானவர் ப்ளேக் ஸ்னைடர். அவர் தன்னுடைய ‘Save the cat’ புத்தகத்தில், ஒரு திரைக்கதையில் பதினைந்து முக்கியமான ‘பீட்’கள் இருக்க வேண்டும் என்று குறிப்பிட்டு, அதற்காக Beat Sheet என்கிற டெம்பிளேட்டையும் உருவாக்கி இருப்பார். பீட் பை பீட் புத்தகத்தில், இதன் ஆசிரியர் டாட் க்ளிக் இன்னும் ஒரு படி Continue reading
-
ராபர்ட் மெக்கீயின்‘கதை’ -3
3 க்ளீச்சே (Cliche) Creativity means creative choices of inclusion and exclusion- Robert Mckee ஒரு சுவாரஸ்யமற்ற திரைக்கதையை எழுதிவிட வேண்டும் என்ற கொள்கையோடு யாரும் திரைக்கதையை எழுதத் தொடங்கமாட்டார்கள். மிகச் சாதரணமான, எளிமையானதொரு கதையாக இருந்தாலும் எல்லோரும் விரும்பும் விதத்தில் திரைக்கதையை அமைத்துவிட வேண்டும் என்பதே ஒவ்வொரு திரைக்கதையாசிரியரின் எண்ணமாக இருக்கும். அப்படி இருந்தும் ஏன் பல படங்கள் சுவாரஸ்யமற்று தோன்றுகின்றன! ‘சுவாரஸ்யம்’ என்றதுமே பெரும் மாயங்களை காட்சிகளில் நிகழ்த்திவிட வேண்டும் என்று Continue reading
-
ராபர்ட் மெக்கீயின் ‘கதை’ -1
உலகம் முழுக்க ஏராளமான கதைகள் சொல்லப்படுகின்றன. நாவலாக, படமாக, நாடகமாக என வெவ்வேறு வடிவங்களில் வெவ்வேறு வகையான கதைகள் தொடர்ந்து சொல்லப்பட்டுக் கொண்டே வருகின்றன. அத்தகைய கதைகளின் புறத்தோற்றத்தில் வேறுபாடு இருந்தாலும் அந்த கதையின் ஆன்மாவில் ஒரு பொதுத்தன்மையை கண்டுகொள்ள முடியும் என்கிறார் ராபர்ட் மெக்கீ. இதை அவர் ‘யூனிவெர்சல் பார்ம்’ Continue reading
-
The Silence of the White City- நாவல், திரையாக்கம், கொஞ்சம் திரைக்கதை
உலக அளவில் ஸ்பானிய மொழியில் நல்ல த்ரில்லர் படங்கள் எடுக்கப்படுவது போலவே, அங்கே மிகச்சிறப்பான திரில்லர் நாவல்களும் எழுதப்படுகின்றன. விறுவிறுப்பான, சுவாரஸ்யமான ஸ்பானிஷ் நாவல்களின் வரிசையில் Eva Garcia Saenz எழுதிய Silence of the White City (ஆங்கிலத்தில், Nick Caistor) நாவலுக்கு ஒரு முக்கியமான இடம் உண்டு. Silence of the lambs கதையில் வருவது போல, பல ஆண்டுகளுக்கு முன்பு நடந்த பாணியில் ஒரு குற்றச்செயல் (கொலை) மீண்டும் நடக்க, ஜெயிலில் இருக்கும் Continue reading
-
திரைக்கதையின் பிரதான கேள்வி- லிண்டா சீகர்- சினிமா புத்தகங்கள் 5
ஒரு திரைக்கதையை எழுதி முடித்தபின், நம் திரைக்கதை சரியாக இருக்கிறதா, சுவாரஸ்யமாக இருக்கிறதா அல்லது ஏதாவது குறைகள் உள்ளதா என்பன போன்ற சந்தேகங்கள் எழுவது சகஜம் தான். Making a Good Script Great புத்தகத்தில் லிண்டா சீகர் (Linda Seger) சொல்லும் சில திரைக்கதை உத்திகள் நிச்சயம் அத்தகைய சந்தேகங்களைப் போக்க உதவும். எந்த வகையான கதையிலும் ‘ஒரு பிரதான கேள்வி’ (Central Question) இருக்கிறது என்று சொல்லும் லிண்டா, திரைக்கதையின் நோக்கமே அந்த கேள்விக்கான Continue reading
-
சாக்ரட் கேம்ஸ்- நாவல், திரையாக்கம், கொஞ்சம் திரைக்கதை
உலக சினிமாவில் நாவல்கள் படமாக்கப்படுவது ஒன்றும் புதிதல்ல. ஆனால் சமகால இந்திய சினிமாவில் நாவல்கள் திரையாக்கம் செய்யப்படுவது அரிதாகவே நடக்கிறது. இங்கே எழுதப்பட்ட சில நாவல்களை மிக எளிதாகவே திரைக்கதையாக மாற்றி விடமுடியும். ஆனாலும் இந்தியாவில் நாவலுக்கும் சினிமாவிற்கும் ஒரு பெரும் இடைவெளி இருந்துகொண்டே தான் இருக்கிறது. எப்போதாவது ஒரு நாவல் சினிமாவாக உருப்பெற்றால், அதுவும் சிறந்த முறையில் திரையாக்கம் செய்யப்பட்டால் அதை கவனிப்பது நிச்சயம் நல்லதொரு திரைக்கதைப் பயிற்சியாக இருக்கும். நெட்பிலிக்ஸ் சீரியலாக வந்திருக்கும் விக்ரம் Continue reading
-
The Writer’s Journey- Christopher Vogler – சினிமா புத்தகங்கள்- 4
உலகம் முழுக்க தொன்று தொட்டு சொல்லப்பட்டுவரும் தொன்மங்கள், புராணங்கள், பழங்கதைகள் எல்லாவற்றிலும் ஒரு ஒற்றைத் தன்மை இருப்பதாக சொல்கிறார் அறிஞர் ஜோசப் கேம்பல். இதை அவர் ‘Monomyth’ என்கிறார். எல்லாக் கதைகளும் அடிப்படையில் ஒரு ஹீரோவின் பயணமாக இருப்பதால் தான் அந்த ஒற்றைத் தன்மை வெளிப்படுகிறது என்பது அவரது கூற்று. ‘Hero with thousand faces’ என்ற புத்தகத்தில் அவர் விவரித்திருக்கும் இந்த கூற்று ஒரு முக்கியமான திரைக்கதை உத்தி என்று சொல்கிறார் திரைக்கதையாசிரியர் கிறிஸ்டோபர் வாக்லர். Continue reading