சிறுகதை
-
மேடம்- சிறுகதை
நான் மேடமை முதல் முதலில் சந்தித்தது சிசிடிவி திரையில் தான். சந்தித்தது என்று சொல்வதை விட பார்த்தது அல்லது எனக்கு மேடமின் அறிமுகம் கிட்டியது என்று சொல்வது தான் பொருத்தமாக இருக்கும். அது ஒரு வியாழக்கிழமை. ஒவ்வொரு வியாழக்கிழமையும் குறைந்தது ஒரு வாகனக் கடனாவது கொடுக்க வேண்டும் என்று எங்களுடைய பிராந்திய மேலாளர் உத்தரவிட்டிருந்தார். அனுதினமும் ஏதாவது ஒரு இலக்கு இருந்தது. திங்கட்கிழமை என்றால் வாராக்கடனை வசூலிக்க வேண்டும். செவ்வாய் கிழமை புதிய காப்பீடுகளை இணைக்க வேண்டும்.… Continue reading
-
3 BHK வீடு- சிறுகதை
பிறந்ததிலிருந்து முப்பத்தி சொச்சம் ஆண்டுகளாக வாடகை வீட்டிலேயே இருந்துவிட்ட எனக்கு சொந்தமாக ஒரு வீடு வாங்கிவிட வேண்டும் என்பது தான் வாழ்வின் பெரும் கனவு. அப்பா அம்மாவின் கனவும் அது தான். எனக்கு முன்பிருந்தே அந்தக் கனவுகளை சுமந்து வருகிறார்கள் அவர்கள். கால் நூற்றாண்டுக்கு மேலாக அப்பாவுக்கு பல்லாவரத்தில் ஒரு லெதர் கம்பெனியில் தான் வேலை. அதனாலேயே பொழிச்சலூர், பம்மல் என பல்லாவரம் சுற்றியே குடியிருந்து விட்டோம். ஐம்பத்தைந்து வயதில், நுரையீரலில் பிரச்சனை வரவே வேலையிலிருந்து நின்று… Continue reading
-
சாமுராயின் வாள்- சிறுகதை
தலை குனிந்து நடந்தாலும் கண் கூசச் செய்யும் வெயில். தெருவில் யாருமில்லை. ஞாயிறு மதியம் என்பதால் வீட்டிற்குள் முடங்கிய உலகம். எங்கிருந்தோ ஆங்கில இசைப் பாடல் காதில் கேட்கிறது. Into this house, we’re bornInto this world, we’re thrown வியர்வை வழிகிறது. வெயில் சோர்வை தருவதால் அடுத்த அடி எடுத்து வைக்க கடினமாக இருக்கிறது. இன்னும் கொஞ்ச தூரத்தில் என் வீடு. நடக்கிறேன். தொலைவில் நாய்கள் குரைத்துக் கொண்டே இருக்கின்றன. நிமிர்ந்து பார்க்கிறேன். டிரான்ஸபார்மர்… Continue reading