கட்டுரை
-
சில புத்தகங்கள் சில அனுபவங்கள்
கடந்த ஆண்டு (2023), வாசிப்பிற்கான ஆண்டாக இருந்திருக்கிறது. புனைவுகள், அபுனைவுகள் மற்றும் ஆலோசனை சொல்வதற்காக வாசித்த திரைக்கதைகள் என நிறைய வாசிக்க முடிந்தது. குறிப்பாக பல சிறுகதைத் (நெடுங்கதை) தொகுப்புகளை தொடர்ந்து வாசித்தது தனியொரு அனுபவம். சில தொகுப்புகளில் சில கதைகள் பெரிதும் பாதித்தன. சல்மாவின் ‘விளிம்பு’ (தொகுப்பு: சாபம்), ஜா. தீபாவின் ‘குருபீடம்’ (தொகுப்பு: நீலம் பூக்கும் திருமடம்) , அழகியபெரியவனின் ‘அம்மா உழைப்பதை நிறுத்திக் கொண்டார்’ ‘ தன்னுள்ளே சஞ்சரிப்பவள்’ (தொகுப்பு:’அம்மா உழைப்பதை நிறுத்திக் Continue reading
-
திரைக்கதையின் முக்கிய தருணங்கள்- Todd Klick-சினிமா புத்தகங்கள்- 6
Beat By Beat- Todd Klick-சினிமா புத்தகங்கள்- 6 திரைக்கதையில் குறிப்பிடத்தகுந்த மாற்றங்களை சாத்தியப்படுத்தும் தருணங்களை (Moments) ‘பீட்(கள்)’ (Beat)’ என்பார்கள். திரைக்கதையை பீட்களாக அணுகியதில் முக்கியமானவர் ப்ளேக் ஸ்னைடர். அவர் தன்னுடைய ‘Save the cat’ புத்தகத்தில், ஒரு திரைக்கதையில் பதினைந்து முக்கியமான ‘பீட்’கள் இருக்க வேண்டும் என்று குறிப்பிட்டு, அதற்காக Beat Sheet என்கிற டெம்பிளேட்டையும் உருவாக்கி இருப்பார். பீட் பை பீட் புத்தகத்தில், இதன் ஆசிரியர் டாட் க்ளிக் இன்னும் ஒரு படி Continue reading
-
திரைக்கதை எனும் நெடும்பயணம் -3
3 All drama is conflict. Without conflict, there is no action. Without action, there is no character. Without character, there is no story. And without story, there is no screenplay.- Syd Field முரண் ஒரு திரைக்கதை ‘கதை’யிலிருந்து (Concept) உருவாகலாம் என்றோம். அல்லது கதாபாத்திரத்திலிருந்து (Character) உருவாகலாம் என்றோம். ஆனால் உண்மையில் கதை, கதாபாத்திரம் இரண்டுமே ஒன்றோடொன்று பின்னிப்பிணைந்தவை. கதையின்றி கதாபாத்திரம் இல்லை. கதாபாத்திரமின்றி Continue reading
-
திரைக்கதை எனும் நெடும்பயணம் -2
2 The characters in my novels are my own unrealised possibilities. That is why I am equally fond of them all and equally horrified by them. Each one has crossed a border that I myself have circumvented. ― Milan Kundera கதாபாத்திரம் ஒரு கதாபாத்திரத்தை ஆதாரமாக கொண்டு ஒரு கதை எழுத முடிவு செய்கிறோம். முதலில் என்னென்ன சிந்திப்போம்! எளிய உதாரணமாக, Continue reading
-
Everything Everywhere All at Once- கொஞ்சம் திரைக்கதை

எவிலின் வாங் ஒரு சீன பெண்மணி. அவளும் அவர் கணவன் வேமாண்டும் தங்கள் குடும்பத்தின் எதிர்ப்பை மீறி காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள். அமெரிக்காவில் ஒரு லாண்ட்ரி நிறுவனம் நடத்தி வருகிறார்கள். பல ஆண்டுகள் சேர்ந்து வாழ்ந்ததற்கு பிறகு திருமண வாழ்க்கை கசக்கத் தொடங்குகிறது. வியாபாரத்தில் வரி ஏய்ப்பு செய்ததாக வருமான வரித்துறையிடமிருந்து நோட்டீஸ் வருகிறது. தகுந்த ஆவணங்களை சமர்பிக்காவிட்டால் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படும் சூழல். மறுபுறம் பல ஆண்டுகள் கழித்து எவிலின் வாங்கின் தந்தை அவளை Continue reading
-
திரைக்கதை எனும் நெடும்பயணம் – 1

1 கதை “We are, as a species, addicted to story. Even when the body goes to sleep, the mind stays up all night, telling itself stories.” Jonathan Gottschall ‘கதை’ என்ற சொல் சிறுவயதிலிருந்தே நமக்கு மிகமிக பரிட்சயமானதாக இருக்கிறது. கதை என்றால் என்ன என்கிற தத்துவங்கள் எல்லாம் புத்திக்கு எட்டுவதற்கு முன்பே, கதை கேட்பது நம் மனதிற்கு பிடித்த ஒன்றாக இருந்திருக்கிறது. ஒரு ஊரில் ஒரு Continue reading
-
திரைக்கதை எனும் நெடும்பயணம் – புதியதொடர்
FADE IN: நாம் ஒரு படம் பார்க்கிறோம். முதல் பகுதி சரியாக இல்லை, இரண்டாவது பகுதி சுவாரஸ்யமாக இருந்தது என்கிறோம். இந்த காட்சி தேவை இல்லாத ஒன்று என்கிறோம். முதல் பாதியில் இருந்த விறுவிறுப்பு இரண்டாவது பாதியில் இல்லை என்கிறோம். அந்த கதாபாத்திரம் செய்யும் சாகசம் நம்பும் படியாக இல்லை என்கிறோம். இன்னொரு கதாப்பாத்திரம் ஆயுதம் தாங்கிய நூறு பேரை ஒற்றை ஆளாக எதிர்த்து அடித்தாலும் ஏற்றுக் கொள்கிறோம். இவன் தான் கொலைகாரன் நான் முன்னரே யூகித்தேன் Continue reading
-
மார்ட்டின் ஸ்கோர்செஸி ஓர் உரையாடல்
மார்ட்டின் ஸ்கோர்செஸி ஓர் உரையாடல்-ரிச்சர்ட் சிக்கேல் ரிச்சர்ட் சிக்கேல் மார்ட்டின் ஸ்கோர்செஸியுடன் உரையாடி எழுதிய புத்தகத்தின் ஒரு சிறு பகுதி. தமிழாக்கம்: அரவிந்த் சச்சிதானந்தம் *** படத்தொகுப்பு ரிச்சர்ட் சிக்கேல்: உங்களின் ஆரம்பகாலங்களில் படத்தொகுப்பிலும் உங்களுடைய பங்களிப்பு இருந்தது என்று அறிவேன். ஆனால் உங்களுடைய பல படங்களுக்கு நீங்களே படத்தொகுப்பு செய்திருக்கிறீர்கள் என்பது. நாம் பேசத் தொடங்கும் வரை எனக்கு தெரியாது. எப்படி படத்தொகுப்பை கற்றுக் கொண்டீர்கள்? படத்தொகுப்பு செய்து அதை பழகிக் கொண்டீர்களா? மார்ட்டின் ஸ்கோர்செஸி: Continue reading
-
ராபர்ட் மெக்கீயின் ‘கதை’ – இறுதிப் பகுதி
7 Screenwriting is like ironing. You move forward a little bit and go back and smooth things out- Paul Thomas Anderson ‘திரைக்கதை’ வடிவமைப்பு கடந்த அத்தியாயங்களில் கதாப்பாத்திரம், கான்பிளிக்ட் மற்றும் பிளாட் பற்றியெல்லாம் பேசினோம். இந்த புரிதோலோடு ஒரு திரைக்கதையை எங்கிருந்து தொடங்குவது? ஒரு கதையோ கருவோ கதாப்பாத்திரமோ எந்த புள்ளியில், தருணத்தில் திரைக்கதையாக வளர்கிறது? Inciting Incident என்பதை இதற்கு பதிலாக சொல்லலாம். அதாவது கதை ஏதோ Continue reading
-
Notes on the Cinematographer- ராபர்ட் ப்ரெஸ்ஸான்.
“ஐடியாக்கள் அதுவாகவே தான் உருவாகும். எப்படி என்றெல்லாம் யாராலும் சொல்ல முடியாது. ஒரு ஐடியா உருவாகும் போது அதை வைத்து என்ன செய்யப் போகிறோம் என்றும் நமக்கு தெரியாது.இந்த படத்தை பொறுத்தவரை எனக்கு ஒரு கழுதையின் தலை தான் ஐடியாவாக பிறந்தது. கழுதையின் தலையில் இருக்கும் ஒருவகையான அசைவற்ற அழகு என்னை எப்போதுமே ஆச்சர்யப்படுத்தும். கழுதையின் கண்களை விட ரசிக்கத்தக்க ஒரு விஷயம் உலகில் உண்டா!” – Au Hasard Balthazar படம் பற்றி ராபர்ட் ப்ரெஸ்ஸான். Continue reading