sarcasm
-
லேடி போலீஸ்- நகைச்சுவைக் கதை
அந்த புத்தகத்தை வாங்கியே ஆகணுமென்று எங்கெங்கோ தேடுனேன். அந்த புத்தகத்திற்க்கு பின்னாடி ஒரு காதல் கதை ஒளிஞ்சிருக்கு. எங்கேயும் கிடைக்காத அந்த புத்தகம் கண்ணிமேரா நூலகத்தில கிடைக்கும் என்கிற நம்பிக்கையில டிரைன் ஏறினேன். நானும் இந்தியா முழுக்க சுத்தியிருக்கேன். பம்பாய் ரயிலில் எல்லாம் முட்டி மோதி ஏறியிருக்கேன். ஆனால் அங்கெல்லாம் டிரைன் கூட்டமா இருந்தாதான் தொங்கிக்கிட்டு போவாங்க. சென்னையில மட்டும்தான், எனக்கு விவரம் தெரிஞ்ச நாள்ல இருந்து பாக்குறேன், ஒரு நாலு பேரு தொங்கிக்கிட்டே பயணம் செய்வானுங்க. Continue reading
-
தமிழ் எழுத்தாளனின் மரணம்
அந்த தமிழ் எழுத்தாளன் மாண்டுவிட்டான் அழுவதற்கு யாருமில்லை சாகும்வரை பலஆயிரம் பக்கங்களை சில நூறுப் பேர்களுக்காக மட்டும் எழுதியவன் மாண்டுவிட்டான் தமிழ்நாட்டில் தமிழில் எழுதும் கீழ்த்தரமான செயலை இறுதிவரை செய்தவன் மாண்டுவிட்டான் நீசன் எனக்கூறி பலர் அவனை ஒதுக்கிவிட்டனர் சபையில் ஆபாசம் பேசுகிறான் எனக்கூறி அறிவிலிகள் பலர் ஒதுங்கிநின்றனர் ஒதுக்கியவர்களாலோ ஒதுங்கியவர்களாலோ ஒடுக்கமுடியவில்லை அவனை இறுதிவரை வளையா முதுகெலும்புடன் எழுதியவன் மாண்டுவிட்டான் பக்கத்துக்கு பக்கம் சார்த்தர் பாரதி என பிதற்றினான்-அவனுக்காக அழுவதற்கு சார்த்தரோ பாரதியோ இல்லை அழ நினைத்த நண்பர்களோ-ஏனோ Continue reading