black humour

  • ஒரு இலக்கிய விமர்சகர்

    இன்று தமிழின் பிரபல இலக்கிய விமர்சகராக அறியப்படும் ரகு ஒருகாலத்தில் ரஹோத்தமன் என்ற பெயரில் புனைவுகள் எழுதினார் என்பது இன்றைய இணைய சமூகத்தில் நிறைய பேருக்கு தெரிந்திருக்க வாய்ப்பில்லை. தொண்ணூறுகளின் ஆரம்பத்தில் அவர் எழுதிய மூன்று புனைவுகளிலும் புனைவுத் தன்மை துளிக் கூட இல்லை என்று அப்போதைய பிரபல டெல்லி விமர்சகர் குற்றம் சாட்ட, “அது பின்நவீனத்துவ புனைவு உனக்கெல்லாம் புரியாது” என்று ரஹோத்தமன் மூன்று சந்தாதாரர்கள் கொண்ட இரும்பு யானை (தனி சுற்றிற்கு மட்டும்) இலக்கிய Continue reading

  • கும்பிடுசாமி- நகைச்சுவைக் கதை

    ‘கும்பிடுசாமி’ என்றதும் ஏதோ ஊர் பக்கம் இருக்கும் காவல் தெய்வம் என்றே பலரும் நினைத்துக் கொள்கின்றனர். கும்பிடுசாமி என்பவர் என்னுடைய சித்தப்பா. அவருடைய உண்மையான பெயர் என்ன என்பது யாருக்கும் நினைவிலில்லை. எனக்கு விபரம் தெரிந்ததிலிருந்து அவரை ‘கும்பிடுசாமி’ என்றே அனைவரும் அழைக்கின்றனர். அதற்கு முன்பிருந்தே அவர் கும்பிடுசாமிதானாம்.  நாங்களும் அப்படிதான் அழைப்போம். அவரை யாரும் உறவுமுறை சொல்லி, அப்பா என்றோ, மாமா என்றோ, சித்தப்பா என்றோ அழைக்கமாட்டார்கள். அவருடைய மகனே அவரை ‘கும்பிடுசாமி’ என்று தான் அழைப்பான். Continue reading

  • லாலாகதைகள் 1- நான்கு பிரதிகள் விற்ற புத்தகம்

    “இது தமிழின் ஆகச்சிறந்த நாவல்..” பிரபல்ஆஆஆஆ எழுத்தாளர் சொல்லிக்கொண்டிடுருக்கும்போதே அவர் காதை கடித்தார் அந்த புத்தகத்தை எழுதிய பிரபல்அ எழுத்தாளர், “ஐயா அது சிறுகதைத் தொகுப்பு நாவல் இல்ல” சுதாரித்துக் கொண்ட ஆஆஆஆ “நாவல் அளவிற்கு ஆழமான சிறுகதைகளை கொண்ட தொகுப்பு” என்று சொல்லி முடித்தார். ‘ஆஆஆஆ’வின் தீவிர பக்தர்கள் முன்னூறு பேரும் முந்நூற்றியொரு புத்தகங்களை வாங்கி தங்கள் வீட்டில் அடுக்கிக் கொண்டனர். சில மாதம் கழித்து அதில் ஒரு பக்தர், “ஒரே நாள்ல 300 பிரதி Continue reading

  • ஓடிப்போனக் கடவுள்

    நான் எப்படி இங்கு வந்தேன் என்பது இன்னும் விளங்கவில்லை.இது ஒரு பெரிய கோவில். மிக உயர்ந்த மதில் சுவர்கள். நிச்சயம் ஏதோ ஒரு மிகப்பெரிய அரசனால் கட்டப்பட்ட கோவிலென்பது திண்ணம். சிற்றரசர்கள் பெரியக் கோவில்களை உருவாக்கியதில்லை.பிரகாரம் முழுக்க ஏதேதோ குட்டிக் கடவுள்களின் சிதிலமடைந்த சிலைகள். அனைத்தையும் கடந்து நான் மூல ஸ்தானத்தை நோக்கி சென்றேன். மூலமே என் நோக்கு வெருச்சோடிக் கிடந்த கோவில் காணவில்லை கடவுள்; இது என்ன கோவில் என்பது விளங்கவில்லை. கற்பக்ரஹத்தில் மூலவர் சிலையை Continue reading