aravindh sachidanandam stories
-
அடுத்த நாவல்
என்னுடைய அடுத்த நாவல், லட்சியம் நோக்கி ஓடும் இளைஞன், லட்சியம் தொலைத்து midlife crisis-யில் சிக்கிக்கொள்ளும் நடுத்தரவயது மனிதன் இருவரின் வாழ்க்கை, காதல், அவர்களைமீட்டெடுக்கும் பெண்களைப் பற்றியது. இழந்த ஒவ்வொன்றையும் வாழ்க்கை வேறு வடிவில் தரும் என்ற தீம் தான் நாவலின் அடிநாதம். பெருநகர வாழ்வின் அழுத்தங்களை பின்னணியாக கொண்டநல்ல (காதல்) நாவலாக வந்திருக்கிறது என்கிறான் என்னுள் உள்ள வாசகன். ஒருநாள் நல்ல படமாகலாம். அதன் பாத்திரங்களுக்குAI பொருத்தமான முகங்களை கொடுத்திருக்கிறது. நாவலின் மாந்தர்களின் வாழ்வு போல், Continue reading
-
கொரோனா நாட்கள்- நெடுங்கதை

அலுவலகத்தில் நான் வேலைக்கு வந்தே ஆகவேண்டும் என்று சொல்லிவிட்டார்கள். குரோம்பேட்டையிலிருந்து செல்லும் நண்பர் எம்.வியின் வண்டியில் ஏறிக்கொள்ளலாம் என்று பார்த்தேன்.“சோசியல் டிஸ்டன்சிங் ப்ரோ. சாரி ப்ரோ” என்று சொல்லிவிட்டார்.“மாஸ்க் க்ளவுஸ்லாம் போட்டுகிட்டு தான் ப்ரோ வருவேன்”அவர் சமாதானம் ஆகவில்லை.“வீட்ல குழந்தைங்கலாம் இருக்கு ப்ரோ. எனக்கு வந்தா நான் தாங்குவேன். ஆனா என் மூலமா அவங்களுக்கு வந்திரக் கூடாது! நீங்க வேற உங்க எதிர்வீட்டுக்காரு வெளிநாட்ல இருந்து வந்திருக்காருன்னு சொல்றீங்க…” என்றார்.“எதிர்வீட்டுகாரு வெளிநாட்ல இருந்து வரல ப்ரோ. அவர் Continue reading
-
ஏப்ரல் இரவில், ராக் மியூசிக் இசையில், அநிருத்தன் செய்த மூன்று கொலைகள்- சிறுகதை
“As soon as you’re born they make you feel small By giving you no time instead of it all”- John Lennon தான் மூன்றுபேரை கொடூரமாக கொன்றுவிட்டதாக, இருபத்தி எட்டு வயது, அநிருத்தன் அண்ணா நகர் மேற்கு V5 காவல் நிலையத்தில் சரணடைந்த போது மணி இரவு 9.10. ஹெட் கான்ஸ்டபிள் கன்னியப்பன் ட்யூட்டி முடிந்து வீட்டுக்கு கிளம்பிக் கொண்டிருந்தார். திருமங்கலம் சிக்னலில் நடந்த திடீர் மாணவப் போராட்டத்தை கலைத்து Continue reading
-
பூங்காவை ஒட்டியிருந்த வீடு- சிறுகதை
‘காந்தி பூங்கா’, அவன் வீட்டிலிருந்து மூன்று தெருக்கள் தள்ளி இருந்தது. ராஜாஜி தெரு, பட்டேல் தெரு, நேதாஜி தெரு, இந்த மூன்றையும் கடந்தால் அந்தப் பூங்காவை அடைந்துவிடலாம். இதில் பட்டேல் தெரு மட்டும் மிக சிறியது. அதில், வலது புறம் மூன்று வீடுகள், இடது புறம் மூன்று வீடுகள் என்று மொத்தம் ஆறு வீடுகள் தான் இருந்தன. இப்போது ஒரு வீட்டை இடித்து அடுக்குமாடி குடியிருப்பு ஒன்று கட்டிக் கொண்டிருப்பதால் வீடுகளின் எண்ணிக்கை அதிகரிக்கலாம். ஆனாலும் அதை Continue reading