அரவிந்த் சச்சிதானந்தம்
-
பதின்மூன்று ஆண்டு பயணம்

இன்று இந்த இணையதளம் தன்னுடைய பதின்மூன்றாம் ஆண்டை நிறைவு செய்கிறது என்பதை பகிர்வதில் மகிழ்கிறேன். Consistency தான் ஒரு படைப்பாளிக்கு இருக்க வேண்டிய முக்கிய quality என்று நினைக்கிறேன். அந்த வகையில் தொடர்ந்து பதிமூன்று ஆண்டுகள் இந்த தளத்தில் இயங்க முடிந்திருக்கிறது, எழுத முடிந்திருக்கிறது என்பதில் கூடுதல் மகிழ்ச்சி. எழுத தொடங்கிய ஆரம்ப காலகட்டங்களில் முக்கியமாகப்பட்ட பல விஷயங்கள் பின்னாளில் முக்கியமற்று போய்விட்டன. பிடித்ததை தொடர்ந்து எழுத முடிகிறது என்பதே இப்பொதெல்லாம் முக்கியமான விஷயமாக இருக்கிறது. சொல்வதற்கு Continue reading
-
Manjummel Boys- கொஞ்சம் திரைக்கதை
உருவாக்கத்தில் செய்நேர்த்தி, ஆங்காங்கே வெளிப்படும் ஹாஸ்யம், கதை கருவில் உள்ள விறுவிறுப்பு இதெல்லாம் இத்திரைப்படத்தை வெற்றி படமாக்கி இருக்கலாம். ஆனால் திரைக்கதை கலையின் மீது காதல் கொண்டவர்கள் ஒரு படத்தின் வெற்றி தோல்வியை கடந்து, அதன் திரைக்கதை போக்கை ஆராய்வது அவசியம் ஆகிறது. மிகவும் நல்ல படம் என்கிற மாய தோற்றத்தை நம் மனதில் உருவாக்கிவிடும் இது போன்றதொரு படத்த்தின் திரைக்கதையை ஆராய்வது உண்மையிலேயே நல்ல திரைக்கதை எழுத விரும்புவோற்க்கு வழிகாட்டியாக பயன்படும் என்பதாலே நாம் இதை Continue reading
-
குறுங்கதை-10- தாத்தாவும் பாட்டியும் காதலித்த கதை
தாத்தாவும் பாட்டியும் காதலித்த கதை அநிருத்தனுக்கு சப்பாத்தி மீது பெருங்காதல். எல்லா நாளும் எல்லா வேலையும் சப்பாத்தி கொடுத்தால் கூட சாப்பிடும் அளவிற்கு சப்பாத்தி பித்து அவனுக்கு. குறைந்தபட்சம் இரவு உணவிற்காவது சப்பாத்தி இருக்க வேண்டும். அவன் மனைவி அனுராதாவிற்கு சப்பாத்தி மீது தனிக் காதலோ வெறுப்போ இல்லை. அவளுக்கு பிடித்த உணவு முட்டை தோசை. அவன் சப்பாத்தி உண்பதில் அவளுக்கு எந்த எதிர்ப்பும் இல்லை என்றாலும், அதை மெனக்கெட்டு செய்வதில் அவளுக்கு ஈடுபாடு இருந்ததில்லை. அதனால் Continue reading
-
குறுங்கதை-9- கோபம்கொண்டு நாவலிலிருந்து தொலைந்துபோன ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் கதாப்பாத்திரம்
கோபம்கொண்டு நாவலிலிருந்து தொலைந்துபோன ஒரு ஆண் மற்றும் ஒரு பெண் கதாப்பாத்திரம் கோமதி சங்கர் பிரபலமாகாத ஒரு நல்ல எழுத்தாளன். பல வருடங்களுக்குமுன்பு அவன் எழுதிய க்ரைம் கதையில் வரும் வில்லன் கதாபாத்திரத்திற்கும் அவனுக்கும் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு தான் அந்த பிரச்சனை வெடித்தது. ஆனந்த் என்கிற அந்த வில்லன் கதாபாத்திரம் ஒரு மிசோஜினிஸ்ட் (misogynist). பெண்களை அறவே வெறுக்கும் அவன், ரயிலில் தனியாக பயணிக்கும் அழகான பெண்களை கடத்தி கொலை செய்வதை வழக்கமாக கொண்டிருந்தான். Continue reading
-
குறுங்கதை-8 – ஒரு தற்கொலை செய்தி
ஒரு தற்கொலை செய்தி விஷயம் கேள்வி பட்டதுமே நான் ஜன்னல் அருகே ஓடினேன். என் அலுவலகம் இருந்தது மூன்றாவது மாடியில். கீழே நிறைய பேர் குழுமி இருந்தார்கள். “செவென்த் ஃபுளோர்ல இருந்து ஒருத்தன் குதிச்சிட்டானாம்” ஏ.ஜி எம்மின் கார் டிரைவர் குமார் தான் முதலில் செய்தியை சொன்னது. நான் என் பக்கத்தில் வந்து நின்ற கோபிகிருஷ்ணன் சாரை பார்த்தேன். ‘கீழே போகலாமா’ என்னுடைய பதிலுக்கு எதிர்பார்ப்பது போல் அவர் பார்வை இருந்தது. எப்போதுமே லிப்ட் வர தாமதமாகும். Continue reading
-
குறுங்கதை-7 -பால்கனியுடன் கூடிய வீட்டை விரும்பும் ஒரு பெண்
பால்கனியுடன் கூடிய வீட்டை விரும்பும் ஒரு பெண் பிரியங்கா யாதவ் டெல்லியின் புறநகரில் பிறந்து, வளர்ந்து அங்கேயே ஒரு வங்கி கிளையில் உதவி மேலாளராக பணியாற்றினாள். வாழ்க்கை நிம்மதியாக போய்க்கொண்டிருந்த இருபத்தியேழு வயதில் மேலாளராக பதவி உயர்வு கிடைத்தது. ஒரே நாளில் அந்த சந்தோசத்தை பறிக்கும் விதமாக சென்னைக்கு மாற்றல் வந்தது. இரண்டு வருட காலம் சென்னையில் தாக்கு பிடித்து விட்டால், மீண்டும் ஊருக்கோ அல்லது ஊருக்கு பக்கத்தில் இருக்கும் மாநிலத்திற்கோ மாற்றல் வாங்கி போய்விடலாம் என்கிற Continue reading
-
குறுங்கதை-6 – விட்னஸ்
சுப்பு என்றழைக்கப்பட்ட சுப்பிரமணி ஒரு பிரபலமான ‘விட்னஸ்’. கோர்ட் படி ஏறி, குற்றத்தை கண்ணால் கண்டேன் என்று சாட்சி சொல்லும் விட்னஸ் உங்கள் நினைவிற்கு வந்தால் அந்த எண்ணத்தை நீக்கி விடுங்கள். அவர் ஒரு சாதாரண ஆள். அவருக்கு போலீஸ், கோர்ட் போன்ற விசயங்கள் அலர்ஜி தரக் கூடியவை. என்ன ஆனாலும் வாழ்நாளில் போலீஸ் ஸ்டேஷன் படியை மிதித்துவிடவோ தாண்டிவிடவோ கூடாது என்கிற குறிக்கோளோடு அறுபது வயதை தொட்டுவிட்டார். மூன்று பெண்களில், கடைசி பெண்ணை இன்னும் கரை Continue reading
-
குறுங்கதை-5 – அவள், அவன் மற்றும் கடல்
அவள், அவன் மற்றும் கடல் இரவு. மெரினா கொஞ்சம்கொஞ்சமாக அடங்கிக் கொண்டிருந்த வேலை. பெரும்பாலான வியாபாரிகள் கடையை அடைத்திருந்தார்கள். மிச்சமிருந்த ஓரிரு உணவகங்கள் விளக்கை அணைத்துவிட்டு கடைசி வாடிக்கையாளர்களுக்கு உணவு பரிமாறிக் கொண்டிருந்தன. கடற்கரையை ஒட்டியிருந்த சாலையில் போலீஸ் வாகனம் சைரனை இயக்கி வியாபார நேரம் முடிந்துவிட்டதை தெரியப்படுத்திக் கொண்டிருந்தது. அவள் ஹெல்மெட்டை மணலில் போட்டுவிட்டு கடலை நோக்கி நடந்தாள். கடல், எப்போது சென்றாலும் யாரையும் வஞ்சனையின்றி வரவேற்கும். நீரில் கால் பட்டதும் காரணமேயின்றி கண்களில் நீர் Continue reading