அரவிந்த் சச்சிதானந்தம்
-
தி எலிக்சிர் (The Elixir-2025)- கொஞ்சம் திரைக்கதை
இது நெட்பிளிக்சில் வெளியாகியிருக்கும் இந்தோனேஷிய திரைப்படம். ஜாம்பி ஹாரர் வகையை சார்ந்தது. ஜாம்பி படங்கள் அனைத்திற்கும் பொதுவான கதையம்சம் ஒன்று உண்டு. அமைதியான ஊரில் முதலில் ஒரு ஜாம்பி உள்ளே நுழையும் அல்லது யாரோ ஒருவர் ஜாம்பியாகிடுவார். அதன் பின் அவர் தாக்க இன்னொருவர் ஜாம்பியாக, அந்த தொடர் சங்கிலி நீண்டு கொண்டே போகும். ஒரு கட்டத்தில் வெகு சிலரை தவிர்த்து மற்ற எல்லோருமே ஜாம்பியாக மாறிவிட, அந்த வெகு சிலர் எப்படி தப்பித்தார்கள் என்பதே மீதி Continue reading
-
John Lennonism
ஜான் லெனான் தான் பல்வேறு காலங்களிலும் வாழ்வின் அழுத்தங்களிலிருந்து காத்து வந்திருக்கிறார். அவர் பாடல்கள் பித்து பிடிக்காமல் பார்த்துக் கொள்ளும் என்பார்கள். விளையாட்டாக சொல்ல வேண்டுமெனில் அவர் பாடல்கள் பேய் பிடிக்காமலும் என்னைப் பார்த்துக் கொண்டது என்பேன். அது நான் பொறியாளராக வேலைப் பார்த்துக் கொண்டிருந்த காலம். இருபத்தியிரண்டு வயது. ஆசியாவிலேயே அளவில் பெரிய ஒரு ஸ்டீல் உற்பத்தி நிறுவனத்தில் வேலை. உற்பத்தி தொடங்கியிருக்காத நேரம். சோதனை முயற்சியாக இரவில் ஒரு கம்ப்ரசர் மட்டும் ஒடும். நான் Continue reading
-
பதினைந்தாவது ஆண்டில்…

இன்றோடு என்னுடைய இணையதளம் தொடங்கி பதினான்கு ஆண்டுகள் நிறைவடைகிறது என்பதை பகிர்வதில் மகிழ்கிறேன். என்னுடைய பெரும்பான்மையான படைப்புகள் இந்த தளத்தில் நேரடியாக எழுதப்பட்டவையே. அந்த வகையில் இந்த தளம் தான் எனக்கான சிற்றிதழ், இணைய இதழ், மாத இதழ் எல்லாமே. தொடர்ந்து எழுத வேண்டும் என்கிற உத்வேகத்தில் 2011 இல் தொடங்கப்பட்ட இந்த தளம், நோக்கத்திலிருந்து பிறழாமல் பயணிப்பதற்கும் பல புதிய முயற்சிகளை மேற்கொள்வதற்கும் உறுதுணையாக இருந்திருக்கிறது. பல வகையான கதைகள், மொழிபெயர்ப்புகள், திரைக்கதை கட்டுரைகள், புத்தக Continue reading
-
தட்பம் தவிர்- பதினொரு ஆண்டுகள்
ஓஷோ சொல்லியிருப்பார், ‘The real fight is not between good and evil but between the good and the greater good’. தட்பம் தவிர் நாவலுக்கான ஐடியா இதுதான். இரண்டு நல்லவர்கள். ஒருவன் போலீஸ்காரன் இன்னொருவன் சீரியல் கில்லர்… நான் David fincher யின் ரசிகன். Zodiac-யில் நாயகனால் கொலைகாரனை இறுதி வரை பிடிக்கவே முடியாது. அது போலவே இதன் முடிவும் இருக்க வேண்டும் என்பது முதல் அத்தியாயத்திலேயே முடிவு செய்துவிட்ட ஒன்று. Continue reading
-
சினிமா புத்தகங்கள் – நிழல் இதழில்
இந்த மாதம் (மார்ச் 2025) நிழல் இதழில் என்னுடைய கட்டுரை ஒன்று வெளியாகி இருக்கிறது என்பதை பகிர்வதில் மகிழ்கிறேன். சில முக்கிய சினிமா (திரைக்கதை மற்றும் இயக்கம்) புத்தகங்கள் பற்றிய அறிமுகங்கள் கொண்ட கட்டுரை. நன்றி நிழல். Continue reading
-
வல்லான்- திரைப்படம்
நண்பர் மணி சேயோனின் இயக்கத்தில் ‘வல்லான்’ திரைப்படம் நேற்று (24.01.2025) வெளியாகி இருக்கிறது. இதில் நானும் திரு. மணி சேயோனோடு இணைந்து வசனம் எழுதி இருக்கிறேன் என்பதை பகிர்வதில் மகிழ்கிறேன். நண்பர் மணி சேயோனுக்கு நன்றிகள் வல்லான் குழுவிற்கு வாழ்த்துகள். Continue reading
-
லக்கி பாஸ்கர் – கொஞ்சம் திரைக்கதை
குடும்பத் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக தவறான வழியில் பணம் ஈட்ட நினைக்கும் ஒரு சாதாரணன், பேராசையால் ஆட்கொள்ளப்பட்டு ஒருகட்டத்தில் பணம் ஈட்டுவதை மட்டுமே தன் நோக்கமாக மாற்றிக் கொள்கிறான். இது பிரேக்கிங் பேட்டின் ஒன்லைன். லக்கி பாஸ்கர் படத்தின் ஒன் லைன்னும் இதுவே. பிரேக்கிங் பேட்டின் வால்ட்டர் வைட், தன் திறமைக்கான அங்கீகாரம் தனக்கு கிட்டவில்லை என்கிற ஆதங்ககத்திலேயே வாழ்பவன். ஒரு தருணத்தில் அந்த ஆதங்கம் கோபமாக மாற, தன் திறமையை தவறான வழியில் செலுத்தி பணம் Continue reading
-
அநிருத்தன்-மேடை நாடகம்
என்னுடைய ‘ஏப்ரல் இரவில், ராக் மியூசிக் இசையில், அநிருத்தன் செய்த மூன்று கொலைகள்’ சிறுகதை, மேடை நாடகமாக அரங்கேற இருக்கிறது என்பதை பகிர்வதில் மகிழ்கிறேன். படைப்பு குழுவிற்கு நன்றியும் வாழ்த்துக்களும் இடம்: Alliance Francaise, Nungambakkam நாள்: நவம்பர் 17, 2024 இயக்கம்: முருகானந்தம் எழுத்து: அரவிந்த் சச்சிதானந்தம் நன்றி Continue reading
