விமர்சனம்
-
வழக்கு எண் 18/9
சினிமா என்பது 24 lies per second (24 பொய்கள்) என்று ஒரு பெரிய இயக்குனர் குறிப்பிட்டார்.அவ்வாறிருக்கவேண்டிய அவசியமில்லை, சினிமாவில் சினிமாத்தனம் கலக்காத எதார்த்தமும் சாத்தியம் என்பது உலக சினிமா அறிந்தவர்களின் கருத்து. அந்த கருத்து மீண்டும் ஒரு முறை தமிழ் சினிமாவில் நிரூபிக்கப் பட்டிருக்கிறது, வழக்கு எண் 18/9 என்ற ஒரு உன்னத படைப்பின் மூலம்…. திரைக்குப் பின் பணிப்புரிந்திருக்கும் தேர்ந்த படைப்பாளிகள், திரையில் வெறும் புது முகங்களை உலாவவிட்டு ஒவ்வொரு காட்சிகளையும் செதுக்கி இருக்கிறார்கள். Continue reading
-
அரவான்
விமர்சனம் என்ற பெயரில் ஒரு திரைப்படத்தின் முழு கதையையும் விவரிப்பது, உலக சினிமாவின் உன்னத ரசிகனாகிய நான், என்னைப் போன்ற ரசிகர்களுக்கு செய்கிற துரோகம். அதே சமயத்தில் சில முக்கிய காட்சிகளை விவரிக்காமல் விமர்சனம் எழுதிவிடமுடியாது… அருமையான ஒளிப்பதிவு ,படத்தொகுப்பு, கலைஇயக்கம், அருமையான நடிகர்கள் என்று பல அனுகூலமான விடயங்களிருந்தும் பல காரணங்களால் ‘ அரவான்’ ஒரு சராசரி படமாகவே விளங்குகிறது. உங்கள் நேரத்தை நான் வீணடிக்க விரும்பாததால், இதை சராசரி படம் என முன்னமே சொல்லிவிடுகிறேன். வலுவற்ற திரைக்கதையால், Continue reading
-
மயக்கம் என்ன
மயக்கம் என்ன தமிழ் சினிமாவில் தனிமனித உணர்வுகளை மையப்படுத்தி எடுக்கப்பட்ட படங்கள் மிகக் குறைவு. ஒரு மனிதனின் வாழ்கையை நேர்கோட்டு சித்திரமாக காட்ட யாரும் அதிகம் முயற்சித்ததில்லை. தமிழ் சினிமாவுக்கென எழுதப்பட்ட இலக்கணம் அவ்வாறான படங்களை ஆதரித்ததில்லை. இங்கு காதலை, காதலியை துரத்திப் பிடிக்கும் மனிதர்களைப் பற்றிய படங்களே அதிகம். தன் லட்சியத்தை துரத்திப் பிடிக்கும் மனிதர்களைப் பற்றி யாரும் படப் பிடிக்க விரும்பியதில்லை. ஒவ்வொருவரும் வாழ்கையில் ஏதோ ஓர் லட்சியத்தை அடைய போராடிக் கொண்டிருக்கிறோம், அவ்வாறான போராட்ட களங்களை படம் பிடிக்க தமிழ் சினிமா ஏதோ ஒரு வகையில் அஞ்சிக்கொண்டிருக்கிறது. “ஆறில் இருந்து அறுபது வரை” படத்திற்கு பின் எந்த ஓர் படமும் தனி மனித உணர்வினை பேசிடவில்லை. இங்கு குறிப்பிடப்படுவது மெல்லிய உணர்வுகளை. போலீஸ் ஆவதை லட்சியாமாக கொண்டு ஆக்ரோசமாக பயணிக்கும் கதாநாயகனைப் பற்றிய படங்கள் நிறைய வந்துள்ளது. அந்த படங்களில் மசாலாத்தன்மையே அதிகம் இருந்ததேயன்றி உணர்வுகளின் காட்சியமைப்பு மிகக் குறைவு. அப்படி மசாலா காட்சிகளை அதிகம் தவிர்த்து, எதார்த்தத்தோடு பயணிக்கும் படமே ‘ மயக்கம் என்ன’ வனவிலங்கு புகைப்படக்காராரக வர விரும்பும் ஓர் சராசரி இளைஞன் தன் வாழ்வில் சந்திக்கும் போராட்டங்களே இப்படம். பல போராட்டங்களுக்கு பின் அவன் இறுதியில் தன் லட்சியத்தை அடைகிறான். ஆங்கிலத்தில் வந்த Pursuit of happiness, Cinderalla man, Beautiful Mind போன்று இதுவும் உங்களை எந்த வகையிலும் ஏமாற்றாத ஓர் அருமையான படம். ‘வறுமையின் நிறம் சிவப்பு’ படத்திலும் கதாநாயகன் இலட்சியத்திற்காக போராடுவார். ஆனால் அதில் வரும் கதாநாயகன் சித்தாந்தம் பேசும் ஓர் மனிதனாக காட்டபட்டிருப்பார். ஆனால் மயக்கம் என்ன படத்தின் கதாநாயகன் ஓர் சாதரணமானவன். உங்களையும் என்னையும் போன்று. அதுவே இந்த படத்தின் மிகப்பெரிய பலம். ஒரு காட்சில் கதாநாயகன் கண்ணீர் வடிப்பார் , Continue reading
-
7 ஆம் அறிவு
7 ஆம்அறிவு முன்குறிப்பு இந்த படத்திற்கு விமர்சனம் எழுத வேண்டும் என்ற அவசியம் எனக்கில்லை..ஆனால் ஓர் தவறான முன் உதாரணமாக இத்திரைப்படம் அமைந்து விடக்கூடிய வாய்புகள் அதிகமுள்ளதால் இதை எழுதுகிறேன்.. கல்லாவை நிரப்ப கோயபெல்ஸ் (Goebbels) வேலையை நன்றாகவே செய்துள்ளனர்.. மரியான அசுயேல (Mariana Azuela ) எழுதிய ஓர் நாவலில் (Underdogs), எதுக்கு போராடுகிறோம் என்று தெரியாமலேயே ஓர் கூட்டம் போராடும்.(அண்ணா ஹசாரே கூட்டம் போல்! ) அதுபோல் இந்த படம் பார்த்த சிலர் திடிரென தமிழ் Continue reading