பொது
-
பதினைந்தாவது ஆண்டில்…

இன்றோடு என்னுடைய இணையதளம் தொடங்கி பதினான்கு ஆண்டுகள் நிறைவடைகிறது என்பதை பகிர்வதில் மகிழ்கிறேன். என்னுடைய பெரும்பான்மையான படைப்புகள் இந்த தளத்தில் நேரடியாக எழுதப்பட்டவையே. அந்த வகையில் இந்த தளம் தான் எனக்கான சிற்றிதழ், இணைய இதழ், மாத இதழ் எல்லாமே. தொடர்ந்து எழுத வேண்டும் என்கிற உத்வேகத்தில் 2011 இல் தொடங்கப்பட்ட இந்த தளம், நோக்கத்திலிருந்து பிறழாமல் பயணிப்பதற்கும் பல புதிய முயற்சிகளை மேற்கொள்வதற்கும் உறுதுணையாக இருந்திருக்கிறது. பல வகையான கதைகள், மொழிபெயர்ப்புகள், திரைக்கதை கட்டுரைகள், புத்தக Continue reading
-
உலக புத்தக தின அன்பளிப்பு
என்னுடைய எழுத்து பயணத்திற்கு ஆதரவு அளித்து வரும் அனைவருக்கும் அன்பும் நன்றியும். உலக புத்தக தினத்தை முன்னிட்டு என்னுடைய கீழ்கண்ட புத்தகங்களை இன்றிலிருந்து அடுத்த மூன்று நாட்களுக்கு கிண்டிலில் இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். சிறுகதைத் தொகுப்பு: 1.3BHK வீடு நாவல்கள்: 1.தட்பம் தவிர்2.ஊச்சு3.ஒரு வைரம் ஒரு காரிகை மற்றும் சில கயவர்கள் குறுநாவல்/நெடுங்கதைகள்: 1.இரண்டு கலர் கோடுகள்2.நனவிலி சித்திரங்கள்3.கடைசி நாள் Click here to download நன்றிஅரவிந்த் சச்சிதானந்தம்23.04.2025 Happy World Bookday Continue reading
-
பதின்மூன்று ஆண்டு பயணம்

இன்று இந்த இணையதளம் தன்னுடைய பதின்மூன்றாம் ஆண்டை நிறைவு செய்கிறது என்பதை பகிர்வதில் மகிழ்கிறேன். Consistency தான் ஒரு படைப்பாளிக்கு இருக்க வேண்டிய முக்கிய quality என்று நினைக்கிறேன். அந்த வகையில் தொடர்ந்து பதிமூன்று ஆண்டுகள் இந்த தளத்தில் இயங்க முடிந்திருக்கிறது, எழுத முடிந்திருக்கிறது என்பதில் கூடுதல் மகிழ்ச்சி. எழுத தொடங்கிய ஆரம்ப காலகட்டங்களில் முக்கியமாகப்பட்ட பல விஷயங்கள் பின்னாளில் முக்கியமற்று போய்விட்டன. பிடித்ததை தொடர்ந்து எழுத முடிகிறது என்பதே இப்பொதெல்லாம் முக்கியமான விஷயமாக இருக்கிறது. சொல்வதற்கு Continue reading
-
பன்னிரண்டு ஆண்டு பயணம்
Pic courtesy: Sven Vee இன்று இந்த இணையதளம் தன்னுடைய பன்னிரண்டாம் ஆண்டை நிறைவு செய்கிறது என்பதை பகிர்வதில் மகிழ்கிறேன். என்னுடைய முதல் பிளாக்கை 2007-யில் கல்லூரி இரண்டாமாண்டு படிக்கும்போது தொடங்கினேன். விளையாட்டாக ஏதேதோ எழுத ஆரம்பித்து, பின் சிறுகதை எழுத இயலும் என்ற நம்பிக்கை வந்தபோது இந்த தளம் தொடங்கப்பட்டது. 2011-யில் இதே நாளில் இந்த தளத்திற்காகவே ஒரு சிறுகதையை எழுதி பதிவிட்ட போது இருந்த அதே மகிழ்சசி இத்தனை ஆண்டுகளில் ஒவ்வொரு பதிவை பதிவேற்றும்போதும் Continue reading
-
குறுநாவலுக்காக ஓர் பரிசு- புகைப்படங்கள்
கடந்த வாரம் (14.03.2023) மதுரையில் நடந்த திருமதி. செண்பகம் ராமசுவாமி அவர்களது இருபத்தைந்தாவது ஆண்டு நினைவு நாளில், கணையாழி குறுநாவல் போட்டியில் – மூன்றாம் பரிசு பெற்ற “கடைசி நாள்’ என்கிற குறுநாவலுக்காக எனக்கு பாராட்டுச் சான்றிதழ் வழங்கப்பட்டது என்பதை பகிர்வதில் மகிழ்கிறேன். நன்றி மு.ராமசுவாமி மற்றும் கணையாழி Continue reading
-
புத்தகப் பரிந்துரை எனும் மாயை
புத்தகக் காட்சியின் போது புத்தக பட்டியல்களும் பரிந்துரைகளும் தவறாமல் வெளியாவது தவிர்க்க முடியாத சம்ரதாயமாகிவிட்டது. சமூக வலைத்தளங்களின் ஆதிக்கத்திற்கு பிறகு வருடாவருடம் பட்டியல்களின் எண்ணிக்கையும் ‘நான் வாங்க விரும்பும் புத்தகங்கள்’ அல்லது ‘கவனிக்க வேண்டிய புத்தகங்கள்’ போன்ற பட்டியல்களை வெளியிடும் எழுத்தாளர்கள்-விமர்சகர்கள்-அதிதீவிர வாசகர்களின் எண்ணிக்கையும் கூடிக் கொண்டே போகிறது. அவர்கள் அந்த புத்தகங்களை வாங்குகிறீர்களா அல்லது வாசித்துவிட்டுதான் அடிக்கோடிட்டு காண்பிக்கிறார்களா என்பது அவர்களுக்கே வெளிச்சம். பலதரப்பட்ட புத்தகங்களை வாசகர்களுக்கு அறிமுகப்படுத்துவது தான் பட்டியல்களின் நோக்கம் என்றால் பிரச்சனை Continue reading
-
பத்தாண்டு பயணம்
இன்று இந்த இணையதளம் தன்னுடைய பத்தாம் ஆண்டை நிறைவு செய்கிறது என்பதை பகிர்வதில் மகிழ்கிறேன். இது என் வாழ்வின் மிக முக்கியமான பத்தாண்டுகள். தொடர்ந்து சிறுகதைகள் எழுத வேண்டும் என்ற நோக்கத்தில் தான் இந்த தளம் தொடங்கப்பட்டது. ஆனாலும் மனம் விரும்பும் எல்லாவற்றையும் எழுதிடும் உந்துதலையும் வாய்ப்பையும் இந்த தளம் தான் கொடுத்து வருகிறது. ஆதரவு அளித்துவரும் அனைவருக்கும் நன்றி. இன்னும் எழுதுவோம். நன்றி அரவிந்த் சச்சிதானந்தம் Continue reading
-
தினமணி-சிவசங்கரி சிறுகதைப் போட்டி
தினமணி-சிவசங்கரி சிறுகதைப் போட்டியில் என்னுடைய 3 பிஹெச்கே வீடு என்ற சிறுகதை இரண்டாம் பரிசு பெற்றிருக்கிறது என்பதை பகிர்வதில் மகிழ்கிறேன். இன்றைய (27.06.2021) தினமணி கதிரில் கதை வெளியாகி இருக்கிறது நன்றி அரவிந்த் சச்சிதானந்தம். Continue reading
-
சென்னை புத்தகத் திருவிழா
அந்தாதி வெளியீடாக வந்துள்ள என்னுடைய தட்பம் தவிர், ஊச்சு, கொஞ்சம் திரைக்கதை மற்றும் ஆக்சன் திரைக்கதை எழுதுவது எப்படி ஆகிய புத்தகங்கள் சென்னை புத்தகத் திருவிழாவில் பனுவல் அரங்கில் கிடைக்கும். நன்றி அரவிந்த் சச்சிதானந்தம். Continue reading