உலக சினிமா

  • தொடரும் சினிமா (free e-book)

    கடந்த ஓர் ஆண்டில் பல்வேறு நேரங்களில் பல்வேறு களங்களில் வெளியான திரைக் கட்டுரைகளின்  தொகுப்பு இது. தொடரும் சினிமா – சினிமா கட்டுரைகள்- அரவிந்த் சச்சிதானந்தம் Cover Photography©  Premkumar Sachidanandam கூகிள் ப்ளே ஸ்டோரில் free download  செய்ய இங்கே கிளிக் செய்யவும்   நேரடியாக PDF download செய்ய இங்கே கிளிக் செய்யவும்    Continue reading

  • ஸ்பைடர் மேன்

    உலகின் மிக பிரபலமான சூப்பர் ஹீரோக்கள் வரிசையில் ஸ்பைடர் மேனுக்கென்று தனி இடம் இருக்கிறது. அனைவரையும் கவரக் கூடிய வகையில் ஸ்பைடர் மேன் செய்யும் பல விஷேச சாகசங்கள் தான் அதற்கு காரணம். விரல் நுனியை பயன்படுத்தி சிலந்தி வலை பின்னும் ஸ்பைடர் மேனை யாருக்குதான் பிடிக்காது? 1962 ஆண்டு காமிக் உலகிற்கு அறிமுகமான ஸ்பைடர் மேன், 1977-ஆம் ஆண்டு தான் வெள்ளித்திரையில் முதன்முதலில் தோன்றினார். காமிக் புத்தக ஹீரோக்களின் மவுசு, திரையில் குறைந்து கொண்டிருந்த கால Continue reading

  • ஆஸ்கார் 2014

    நன்றி ஆழம் ஏப்ரல் 2014 ஆஸ்கார் போட்டியின் மீது ஏராளமான விமர்சனங்கள் எழுந்தாலும், ஆஸ்கார் விருதுக்கு இருக்கும் மவுசுமட்டும் குறைவதில்லை. அந்த வகையில், இந்த ஆண்டு அதிக எதிர்பார்ப்புகளுக்கிடையே நடந்து முடிந்த ஆஸ்கார் போட்டியில் எந்தெந்த படங்கள் எந்தெந்த பிரிவுகளில் விருதுகளை வென்றன என்பதை இங்கே பார்ப்போம். கிராவிட்டி இந்த ஆண்டு அதிக விருதுகளை வென்றுள்ள படம், கிராவிட்டி. சிறந்த இயக்குனர், சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த படத்தொகுப்பு, சிறந்த இசை உட்பட மொத்தம் ஏழு விருதுகளை இந்த Continue reading

  • ஹாலிவுட் ஓநாய்-மார்டின் ஸ்கார்ஸேஸி

    அமெரிக்க புதுஅலை சினிமாவின் முக்கிய படைப்பாளியாக கருதப்படும் மார்டின் ஸ்கார்ஸேஸியின் இயக்கத்தில், அண்மையில் வெளிவந்திருக்கும் படம் வொல்ஃப் ஆஃப் வால் ஸ்ட்ரீட்.  ஜோர்டான் பெல்ஃபோர்ட் என்கிற பங்குசந்தை தரகருடைய வாழ்க்கையை பற்றி இந்த படம் பேசுகிறது. தொண்ணூறுகளில் அமெரிக்க பங்குசந்தையை கலக்கியவர் பெல்ஃபோர்ட். பல புதுவித மோசடிகளை செய்து பங்குச்சந்தையில் பல கோடி ரூபாய் லாபம் ஈட்டிய அவர் தன்னுடைய அனுபவங்களை புத்தகமாக எழுதினார். அந்த புத்தகம் தான் இப்போது படமாக வந்திருக்கிறது. படத்தில், ஜோர்டான் பெல்ஃபோர்ட்டாக நடித்திருக்கிறார் Continue reading

  • கிராவிட்டியும் ஆஸ்காரும்

    கடந்த ஆண்டு வெளியான லைஃப் ஆப் பை படத்திற்கும் இந்த ஆண்டு வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் கிராவிட்டி படத்திற்கும் ஒரு ஒற்றுமை உண்டு. நடுக்கடலில் தன்னந்தனியாக தத்தளிக்கும் சிறுவனை பற்றிய படம் லைஃப் ஆஃப் பை. விண்வெளியில் உயிருக்கு போராடும் பெண்ணை பற்றிய சயின்ஸ் பிக்ஷன் படம், கிராவிட்டி. இரண்டு படங்களுமே, தன்னம்பிக்கை இருந்தால் எத்தகைய ஆபத்தான சூழலையும் எதிர்கொள்ளலாம் என்ற கருத்தையே முன்வைக்கின்றன. லைஃப் ஆப் பை பல ஆஸ்கார் விருதுகளை குவித்தது போல கிராவிட்டி Continue reading

  • தி காஞ்ஜூரிங்

    நன்றி ஆழம்  உண்மை சம்பவங்களை அடிப்படையாக கொண்டு எடுக்கப்படும் பேய் படங்களுக்கு எப்பொழுதுமே மவுசு அதிகம். அந்த வகையில், அமெரிக்காவில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தின் திரை வடிவமே, அண்மையில் வெளியான, தி காஞ்ஜூரிங். உலகளவில் பெரும் வரவேற்ப்பை பெற்றுவரும் இந்த படத்தில் அப்படி என்ன தான் இருக்கிறது என்று பார்த்துவிடுவோம். பெரோன் தம்பதியர், தங்கள் ஐந்து மகள்களுடன் புது வீட்டிற்கு குடி புகுகிறார்கள். ஆனால் அவர்களின் செல்ல நாய் மட்டும் வீட்டிற்குள் காலடி எடுத்து வைக்க Continue reading

  • சூப்பர் மேன்-75

    உலகின் மிக பெரிய சூப்பர் ஹீரோவாக கருதப்படும் சூப்பர்மேன், முதன்முதலில் வில்லனாகதான் உருவாக்கப்பட்டார் என்றால் நம்பமுடிகிறதா? ஆம். 1933-யில், ஒரு ஆங்கில சிறுகதையில் வில்லனாக அறிமுகமான சூப்பர் மேன் மிக வேகமாக வளர்ந்து ஹீரோவான கதையை பார்க்கும் முன்பு, அண்மையில் வெளியான மேன் ஆப் ஸ்டீல் படத்தை பற்றி பார்த்துவிடுவோம். மேன் ஆப் ஸ்டீல், சூப்பர் மேனின் சாகசங்களை மட்டும் மையப்படுத்தி எடுக்கப்பட்ட படமன்று. அனைவரும் அறிந்த சூப்பர் மேன் வரலாற்றை புதிய பாணியில் சொல்லும் படம் Continue reading

  • சினிமா மேட் இன் சீனா

    உலகிலேயே அதிக படங்கள் தயாரிக்கும் நாடுகளின் பட்டியலில் மூன்றாவது இடத்தில் இருக்கும் நாடு சீனா. அமெரிக்காவும் இந்தியாவும் முறையே முதல் மற்றும் இரண்டாம் இடத்தில் இருக்கின்றன. சீனாவில் படைப்பு சுதந்திரம் குறைவு என்பதால், சீன ரசிகர்களின் எதிர்பார்ப்பை சீன படைப்பாளிகளால் பூர்த்திசெய்ய முடியவில்லை. அதனால் சீனர்கள் ஹாலிவுட்டை ஆதரிக்கத் தொடங்கிவிட்டனர். விளைவு, சீனாவில் ஆண்டுக்கு பல நூறு படங்கள் தயாரிக்கப்பட்டாலும், சீனா அதிகம் கல்லாக் கட்டுவது ஹாலிவுட் படங்களின் மூலமே.. 1960-களில் சீனாவில் நடந்த கலாச்சார புரட்சியின் Continue reading

  • ஆஸ்கார் 2013

    நன்றி, ஆழம். ஏப்ரல் 2013 இதுவரை இல்லாத அளவிற்கு ஆஸ்கார் விருதுகளுக்கு இந்தாண்டு எதிர்பார்ப்பு அதிகமாயிருந்தது. விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டவர்களில் பெரும்பாலனோர் இதற்க்கு முன் ஆஸ்கார் விருதுகளை வாங்கியவர்கள் என்பதே அதற்க்கு காரணம். தேர்ந்தெடுக்கப்பட்ட அனைத்து படங்களும் ஏதோ ஒருவகையில் சிறந்த படங்கள் எனினும், சில படங்கள் அதிக பாராட்டுகளைப் பெற்றது. அவை இங்கே.. ஆர்கோ (ARGO) சிறந்த திரைப்படமாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஆர்கோவை இயக்கியர் பென் அஃப்லெக். இந்தப்படத்தின் கதாநாயகனும் இவரே. நடிகர், திரைக்கதையாசிரியர், இயக்குனர் என பன்முகம் Continue reading