அரவிந்த் சச்சிதானந்தம்
-
முதல் பிரசுரம்
பதிமூன்று ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில் தான் முதல் கட்டுரை அச்சில் வெளியானது. இத்தனை ஆண்டுகளில் புனைவு, அபுனைவு அனைத்திலும் எழுதும் ‘Process’ தான் மிகவும் மகிழ்ச்சி தருவதாக இருக்கிறது. அது சென்றடையும் தூரத்தை காலம் பார்த்துக் கொள்ளட்டும். இந்த ஆண்டு ஒரு நாவலையும், ஒரு துப்பறியும் குறுநாவலையும் எழுதி முடித்துள்ளேன். அடுத்து chritsopher vougler- யின் Writer’s Journey-ஐ மையப்படுத்தி கட்டுரைகள் எழுத தொடங்கி இருக்கிறேன். வாழ்வின் அழுத்தங்களுக்கிடையே,பிடித்த ஒன்றை தொடர்ந்து செய்துகொண்டுருப்பதை விட சந்தோஷம் Continue reading
-
John Lennonism
ஜான் லெனான் தான் பல்வேறு காலங்களிலும் வாழ்வின் அழுத்தங்களிலிருந்து காத்து வந்திருக்கிறார். அவர் பாடல்கள் பித்து பிடிக்காமல் பார்த்துக் கொள்ளும் என்பார்கள். விளையாட்டாக சொல்ல வேண்டுமெனில் அவர் பாடல்கள் பேய் பிடிக்காமலும் என்னைப் பார்த்துக் கொண்டது என்பேன். அது நான் பொறியாளராக வேலைப் பார்த்துக் கொண்டிருந்த காலம். இருபத்தியிரண்டு வயது. ஆசியாவிலேயே அளவில் பெரிய ஒரு ஸ்டீல் உற்பத்தி நிறுவனத்தில் வேலை. உற்பத்தி தொடங்கியிருக்காத நேரம். சோதனை முயற்சியாக இரவில் ஒரு கம்ப்ரசர் மட்டும் ஒடும். நான் Continue reading
-
பதினைந்தாவது ஆண்டில்…

இன்றோடு என்னுடைய இணையதளம் தொடங்கி பதினான்கு ஆண்டுகள் நிறைவடைகிறது என்பதை பகிர்வதில் மகிழ்கிறேன். என்னுடைய பெரும்பான்மையான படைப்புகள் இந்த தளத்தில் நேரடியாக எழுதப்பட்டவையே. அந்த வகையில் இந்த தளம் தான் எனக்கான சிற்றிதழ், இணைய இதழ், மாத இதழ் எல்லாமே. தொடர்ந்து எழுத வேண்டும் என்கிற உத்வேகத்தில் 2011 இல் தொடங்கப்பட்ட இந்த தளம், நோக்கத்திலிருந்து பிறழாமல் பயணிப்பதற்கும் பல புதிய முயற்சிகளை மேற்கொள்வதற்கும் உறுதுணையாக இருந்திருக்கிறது. பல வகையான கதைகள், மொழிபெயர்ப்புகள், திரைக்கதை கட்டுரைகள், புத்தக Continue reading
-
உலக புத்தக தின அன்பளிப்பு
என்னுடைய எழுத்து பயணத்திற்கு ஆதரவு அளித்து வரும் அனைவருக்கும் அன்பும் நன்றியும். உலக புத்தக தினத்தை முன்னிட்டு என்னுடைய கீழ்கண்ட புத்தகங்களை இன்றிலிருந்து அடுத்த மூன்று நாட்களுக்கு கிண்டிலில் இலவசமாக பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். சிறுகதைத் தொகுப்பு: 1.3BHK வீடு நாவல்கள்: 1.தட்பம் தவிர்2.ஊச்சு3.ஒரு வைரம் ஒரு காரிகை மற்றும் சில கயவர்கள் குறுநாவல்/நெடுங்கதைகள்: 1.இரண்டு கலர் கோடுகள்2.நனவிலி சித்திரங்கள்3.கடைசி நாள் Click here to download நன்றிஅரவிந்த் சச்சிதானந்தம்23.04.2025 Happy World Bookday Continue reading
-
சினிமா புத்தகங்கள் – நிழல் இதழில்
இந்த மாதம் (மார்ச் 2025) நிழல் இதழில் என்னுடைய கட்டுரை ஒன்று வெளியாகி இருக்கிறது என்பதை பகிர்வதில் மகிழ்கிறேன். சில முக்கிய சினிமா (திரைக்கதை மற்றும் இயக்கம்) புத்தகங்கள் பற்றிய அறிமுகங்கள் கொண்ட கட்டுரை. நன்றி நிழல். Continue reading
-
தாத்தாவின் கதை
தாத்தா எப்போதுமே என் மீது பெரிய நம்பிக்கை வைத்திருந்தார். முயற்சிகள் எல்லாமுமே ஜெயமாகும் என்பார். மணிரத்னம் படைப்புகளை முழுவதுமாக வாசித்துவிட்டு ‘நல்லா பண்ணிருக்க’ என்றார். தொண்ணூற்றி ஐந்து வயதில் அவர் அதை வாசித்திருக்க வேண்டிய அவசியமில்லை. எனக்காக தான் வாசித்தார். நான் தாத்தாவிற்காக அவர் ஆசைப்பட்ட வரலாற்று நாவல் ஒன்றை இந்த வாழ்நாளில் எழுதிவிடுவேன். இன்று தாத்தாவின் பத்தாவது நினைவு நாள். *** #தாத்தாவின்கதை Continue reading
-
லக்கி பாஸ்கர் – கொஞ்சம் திரைக்கதை
குடும்பத் தேவைகளை பூர்த்தி செய்வதற்காக தவறான வழியில் பணம் ஈட்ட நினைக்கும் ஒரு சாதாரணன், பேராசையால் ஆட்கொள்ளப்பட்டு ஒருகட்டத்தில் பணம் ஈட்டுவதை மட்டுமே தன் நோக்கமாக மாற்றிக் கொள்கிறான். இது பிரேக்கிங் பேட்டின் ஒன்லைன். லக்கி பாஸ்கர் படத்தின் ஒன் லைன்னும் இதுவே. பிரேக்கிங் பேட்டின் வால்ட்டர் வைட், தன் திறமைக்கான அங்கீகாரம் தனக்கு கிட்டவில்லை என்கிற ஆதங்ககத்திலேயே வாழ்பவன். ஒரு தருணத்தில் அந்த ஆதங்கம் கோபமாக மாற, தன் திறமையை தவறான வழியில் செலுத்தி பணம் Continue reading
