கட்டுரை
-
Shrek- கொஞ்சம் திரைக்கதை
ஒரு சுவாரஸ்யமான கேரக்டர் ஆர்க்கை எழுதுவது எப்படி! இருபத்தையாண்டு ஆண்டுகளுக்கு முன்பு வெளியான ‘Shrek’ நமக்கு அதை மிக எளிமையாக சொல்லித்தருகிறது. ஒரு விசித்திரக் கதையாக (fairy tale) மட்டுமே நின்றுவிடாமல், திரைக்கதையின் அடுக்குகளை புரிந்துக் கொள்ள இந்த படம் பெரிதும் பயன்படுவதால் இது அதிக முக்கியத்துவம் வாய்ந்த அனிமேஷன் படமாகிறது. ஒரு நாயகனின் பயணம் தான் கதை. ஆனால் மற்ற சாகச-மாய கதைகளில் வருவது போல அந்த நாயகன் பேரழகன் அல்ல. அவன் ஒரு ராட்சதன். … Continue reading
-
21 நாட்களில் திரைக்கதை எழுதுவது எப்படி! – விக்கி கிங்
நன்றி காட்சிமொழி 21 நாட்களில் திரைக்கதை எழுதுவது எப்படி! – விக்கி கிங் அரவிந்த் சச்சிதானந்தம் 21 நாட்களில் திரைக்கதை எழுதுவது எப்படி! (How to Write a Movie in 21 Days- Viki King) இது விக்கி கிங் எழுதிய பிரபலமான புத்தகம். இப்படி ஒரு தலைப்பை கண்டதுமே அதெப்படி இருபத்தியொரு நாளில் ஒரு திரைக்கதையை எழுதிவிட முடியும் என்கிற கேள்வி எழலாம். ஆனால் எழுதுதல் என்பதை ஒரு ஒழுக்கமாக கடைப்பிடிக்கத் தொடங்கினால் எவ்வளவு… Continue reading
-
ஒரு வருடம் – 365 எழுத்தாளர்கள்
தினம் ஒரு எழுத்தாளரின் சிறுகதையை வாசிக்க வேண்டும் என்கிற விருப்பத்துடன் இந்த ஆண்டு தொடங்கியது. ஒவ்வொரு நாள் காலையும், ஒரு எழுத்தாளரின் ஒரு சிறுகதையை தேர்ந்தெடுத்து வாசிப்பது நல்லதொரு அனுபவமாக இருக்கிறது. இதற்கு முன்னர் வாசித்திராத பல புதிய எழுத்தாளர்களை இந்த முயற்சி எனக்கு அறிமுகப்படுத்தியிருக்கிறது. சில கதைகள் அதிகம் பிடித்து போக, அந்த எழுத்தாளர்களின் மற்ற படைப்புகளை வாசிக்கும் உந்துதல் பிறக்கிறது. இந்த ஆண்டின் இறுதியில் 365 எழுத்தாளர்களை, அதில் பெரும்பகுதியாக முன்பு வாசித்திராத எழுத்தாளர்களை… Continue reading
-
புதையல் தீவு-ராபர்ட் லூயிஸ் ஸ்டீவன்சன்- சிறார் நாவல் வரிசை 2
கதையின் நாயகன் ஜிம் ஹாகின்ஸ் தான் சிறுவனாக இருந்தபோது செய்த சாகச பயணத்தை விவரிப்பதாக கதைத் தொடங்குகிறது. கடலை ஒட்டி அவருடைய தந்தை ஒரு விடுதியை நடத்தி வருகிறார். அந்த விடுதியில் வந்து தங்குகிறான் கடலோடி பில்லி போன்ஸ். அவனிடம் புதையல் தீவிற்கான வரைப்படம் இருக்கிறது. அது ஜிம் ஹாகின்ஸ் கையில் எதிர்ப்பாராதா நேரத்தில் கிட்ட அந்த சிறுவன் சாகச உலகிற்குள் நுழைகிறான். ஜிம் ஹாக்கின்ஸோடு இன்னும் சிலர் இணைந்து கொள்கிறார்கள். அவர்களுக்கு தெரியாமல் சில கடற்கொள்ளையர்களும்… Continue reading
-
ஆக்சன் திரைக்கதை எழுதுவது எப்படி- மீண்டும்
ஒரு திரைக்கதையை இப்படி தான் எழுத வேண்டும் என்று யாரும் சொல்லிட முடியாது. ஆனால் திரைக்கதை எழுத வேண்டும் என்கிற அகத்தூண்டல் இருந்தும் எங்கிருந்து தொடங்குவது என்கிற தயக்கம் இருப்போருக்கு ஒரு எளிய push தேவைப்படுகிறது. பல திரைக்கதை எழுதி பயிற்சி பெற்றோருக்கு நாம் எழுதியிருப்பது சரியா என்கிற குழப்பம் வரும்போதோ, அல்லது கதையை மேற்கொண்டு எப்படி நகர்த்துவது என்கிற தடங்கல் வரும்போதோ ஒரு வழிகாட்டுதல் தேவைப்படுகிறது. இதையெல்லாம் சாத்தியப்படுத்த திரைக்கதை எழுதுதல் பற்றி எளிய மொழியில்… Continue reading
-
பனிமனிதன் – ஜெயமோகன்-சிறார் நாவல் வரிசை 1
கடந்த ஆண்டு வாசித்ததில் மிக நல்லதொரு அனுபவத்தை தந்த புத்தகம் இது. பல ஆண்டுகளுக்கு முன்பு கல்லூரி காலத்தில் தி நகரில் ஒரு கடையில் பனிமனிதனின் அட்டைப் படம் ஈர்த்தது. பெரிய பனி குரங்கைப் போன்ற ஒரு உருவத்தை பார்த்ததுமே மனதினுள்ளிருந்த குழந்தை வெளியே வந்திருக்க வேண்டும். வாங்கி வந்த அன்றே முழுவதுமாக படித்து முடித்த நியாபகம். பின்னர் குஜராத்தில் ஒரு தமிழ் நண்பரிடம் அந்த புத்த்தகத்தின் சாராம்சத்தை சொன்னேன். குறிப்பாக அதில் வண்டுகள் எல்லாம் கூட்டு… Continue reading
-
காட்சி மொழி – திரைக்கதை கட்டுரை
காட்சி மொழி ஜனவரி 2026 இதழில், என்னுடைய கட்டுரை ஒன்று வெளியாகியுள்ளது என்பதை பகிர்வதில் மகிழ்கிறேன். விக்கி கிங்கின் How to write a movie in 21 days என்கிற புத்தகத்தை மையப்படுத்தி எழுதப்பட்ட திரைக்கதை கட்டுரை. நன்றி காட்சிமொழி Continue reading
-
முதல் பிரசுரம்
பதிமூன்று ஆண்டுகளுக்கு முன்பு இதே நாளில் தான் முதல் கட்டுரை அச்சில் வெளியானது. இத்தனை ஆண்டுகளில் புனைவு, அபுனைவு அனைத்திலும் எழுதும் ‘Process’ தான் மிகவும் மகிழ்ச்சி தருவதாக இருக்கிறது. அது சென்றடையும் தூரத்தை காலம் பார்த்துக் கொள்ளட்டும். இந்த ஆண்டு ஒரு நாவலையும், ஒரு துப்பறியும் குறுநாவலையும் எழுதி முடித்துள்ளேன். அடுத்து chritsopher vougler- யின் Writer’s Journey-ஐ மையப்படுத்தி கட்டுரைகள் எழுத தொடங்கி இருக்கிறேன். வாழ்வின் அழுத்தங்களுக்கிடையே,பிடித்த ஒன்றை தொடர்ந்து செய்துகொண்டுருப்பதை விட சந்தோஷம்… Continue reading
-
John Lennonism
ஜான் லெனான் தான் பல்வேறு காலங்களிலும் வாழ்வின் அழுத்தங்களிலிருந்து காத்து வந்திருக்கிறார். அவர் பாடல்கள் பித்து பிடிக்காமல் பார்த்துக் கொள்ளும் என்பார்கள். விளையாட்டாக சொல்ல வேண்டுமெனில் அவர் பாடல்கள் பேய் பிடிக்காமலும் என்னைப் பார்த்துக் கொண்டது என்பேன். அது நான் பொறியாளராக வேலைப் பார்த்துக் கொண்டிருந்த காலம். இருபத்தியிரண்டு வயது. ஆசியாவிலேயே அளவில் பெரிய ஒரு ஸ்டீல் உற்பத்தி நிறுவனத்தில் வேலை. உற்பத்தி தொடங்கியிருக்காத நேரம். சோதனை முயற்சியாக இரவில் ஒரு கம்ப்ரசர் மட்டும் ஒடும். நான்… Continue reading
-
சினிமா புத்தகங்கள் – நிழல் இதழில்
இந்த மாதம் (மார்ச் 2025) நிழல் இதழில் என்னுடைய கட்டுரை ஒன்று வெளியாகி இருக்கிறது என்பதை பகிர்வதில் மகிழ்கிறேன். சில முக்கிய சினிமா (திரைக்கதை மற்றும் இயக்கம்) புத்தகங்கள் பற்றிய அறிமுகங்கள் கொண்ட கட்டுரை. நன்றி நிழல். Continue reading