அரவிந்த் சச்சிதானந்தம்
-
குறுங்கதை-2 – வனவாசம்
வனவாசம் அவன் சானடோரியம் சுரங்கப்பாதைக்குள் நடந்து வந்த போதே ரயில் கிளம்புவதற்கான ஒலியை எழுப்பியது. செயலியில் பயணசீட்டு வாங்கி இருந்ததால் இந்த வண்டியிலேயே ஏறிவிடலாம் என்று தோன்றியது. ஏனெனில் இன்னும் அரைமணி நேரத்தில் கிண்டியில் இருக்க வேண்டும். இண்டஸ்ட்ரியல் எஸ்டேட் உள்ளே ஒரு கம்பெனியில் நேர்காணல் இருந்தது. காலையில் திருச்சியில் இருந்து வந்த பேருந்து தாமதாகிப்போக, பெரியம்மா வீட்டிலிருந்து அவசரஅவசரமாக குளித்துவிட்டு கிளம்ப வேண்டி இருந்தது. சாப்பிட அவகாசமோ பொறுமையோ இல்லை. இந்த ட்ரைனை தவறவிட்டால் வாழ்க்கையும்… Continue reading
-
குறுங்கதை-1 – சைக்கிள் சித்தப்பா
சைக்கிள் சித்தப்பா சைக்கிள் மிதிக்கும் அளவிற்கு உடலில் தெம்பில்லை. சைக்கிளை போட்டுவிடவும் மனமில்லை. அப்பாவின் நியாபகமாக அவனிடம் இருந்த ஒரே பொருள் அது தான். அதனாலேயே சைக்கிளை தள்ளிக் கொண்டே நடந்தான். உச்சி வெயிலில் ஒவ்வொரு அடியையும் எடுத்து வைப்பது கடினமாக தான் இருந்தது. ஒரு வாய் சோறு கிடைத்தால் தேவலை.பணமில்லை. மார்க்கெட்டில் நுழைவாயில் ஒரமாக இருந்த அடிபம்ப்பில் தண்ணீரை குடித்துவிட்டு காந்தி மார்க்கெட்டினுள் நுழைந்தான். காரணமேயின்றி மார்க்கெட்டில் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. எதிரே வந்த வெள்ளை வேட்டிக்காரரை… Continue reading
-
தைப்பூசம் – சிறுகதை
ராஜேந்திர பிரசாத் சாலையில் இருந்தே வாகன நெரிசல் ஆரம்பமாகிவிட்டது. கோவில் அமைந்திருந்த தெருவுக்குள் காரை திருப்புவது என்பது தேவையில்லாத ஜம்பம். காரை ரிவர்ஸ் எடுத்து அகநானூறு தெருவில், இங்கே வாகனங்கள் நிறுத்தாதீர் என்ற பலகை மாட்டப்பட்டிருந்த வீட்டின் முன்பு காரை நிறுத்தினேன். “கொஞ்ச தூரம் நடக்கணும்…” என்றேன் தேப்தூத் ரேவிடம். “திக் ஆச்சே.. திக் ஆச்சே…” என்றவாறே உடன் நடந்தான். அவனுக்கு இரவு பன்னிரண்டு மணிக்கு தான் விமானம். கொல்கத்தாவிலிருந்து அலுவல் நிமித்தமாக வந்திருந்தான். எங்களின் அலுவலக… Continue reading
-
கடைசி நாள் – நெடுங்கதை
1 சுற்றிலும் நெருக்கமான வீடுகள். மூன்றாவது தளத்தில் வசிப்பதால் ஜன்னலை திறந்து வைத்தால் கொஞ்சம் காற்று வருகிறது. காலையில் அதே ஜன்னலில் எட்டிப்பார்க்கும் வெயில்தான் கண்விழிக்கவும் வைக்கிறது. ஏழு மணிக்கு கண்விழித்தாலும் எட்டு வரை அப்படியே படுக்கையில் கிடப்பதே வழக்கம். ஆனால் மனம் மட்டும் எதையோ அசைபோட்டுக் கொண்டே இருக்கும். எதையோ என்ன! வேலை தான். வேலை மட்டும் தான் பெரிய பிரச்சனையாகவே இருக்கிறது. வேலை இல்லாமல் திரிந்த காலங்களில் கூட இவ்வளவு மன உளைச்சல் இருந்ததில்லை.… Continue reading
-
சில புத்தகங்கள் சில அனுபவங்கள்
கடந்த ஆண்டு (2023), வாசிப்பிற்கான ஆண்டாக இருந்திருக்கிறது. புனைவுகள், அபுனைவுகள் மற்றும் ஆலோசனை சொல்வதற்காக வாசித்த திரைக்கதைகள் என நிறைய வாசிக்க முடிந்தது. குறிப்பாக பல சிறுகதைத் (நெடுங்கதை) தொகுப்புகளை தொடர்ந்து வாசித்தது தனியொரு அனுபவம். சில தொகுப்புகளில் சில கதைகள் பெரிதும் பாதித்தன. சல்மாவின் ‘விளிம்பு’ (தொகுப்பு: சாபம்), ஜா. தீபாவின் ‘குருபீடம்’ (தொகுப்பு: நீலம் பூக்கும் திருமடம்) , அழகியபெரியவனின் ‘அம்மா உழைப்பதை நிறுத்திக் கொண்டார்’ ‘ தன்னுள்ளே சஞ்சரிப்பவள்’ (தொகுப்பு:’அம்மா உழைப்பதை நிறுத்திக்… Continue reading
-
திரைக்கதையின் முக்கிய தருணங்கள்- Todd Klick-சினிமா புத்தகங்கள்- 6
Beat By Beat- Todd Klick-சினிமா புத்தகங்கள்- 6 திரைக்கதையில் குறிப்பிடத்தகுந்த மாற்றங்களை சாத்தியப்படுத்தும் தருணங்களை (Moments) ‘பீட்(கள்)’ (Beat)’ என்பார்கள். திரைக்கதையை பீட்களாக அணுகியதில் முக்கியமானவர் ப்ளேக் ஸ்னைடர். அவர் தன்னுடைய ‘Save the cat’ புத்தகத்தில், ஒரு திரைக்கதையில் பதினைந்து முக்கியமான ‘பீட்’கள் இருக்க வேண்டும் என்று குறிப்பிட்டு, அதற்காக Beat Sheet என்கிற டெம்பிளேட்டையும் உருவாக்கி இருப்பார். பீட் பை பீட் புத்தகத்தில், இதன் ஆசிரியர் டாட் க்ளிக் இன்னும் ஒரு படி… Continue reading
-
குவிகம் குறும்புதினம்
குவிகம் குறும் புதினம் அக்டோபர் மாத (2023) இதழில் என்னுடைய ‘இரண்டு கலர் கோடுகள்’ குறுநாவல் வெளியாகி இருக்கிறது. நன்றி குவிகம் குழு Continue reading
-
திரைக்கதை எனும் நெடும்பயணம் -4
4 “Screenplay writing is not an art form. It’s a skill; it’s carpentry; it’s structure”– WIlliam Goldman கட்டமைப்பு (Structure) கதை, கதாபாத்திரம் மற்றும் கான்ப்ளிக்ட் பற்றி அறிந்துகொண்டோம். இப்போது நம்மால் நேரடியாக திரைக்கதை எழுதிட முடியும் தான். ஆனால் அது மட்டும் போதுமா! நாம் என்னென்ன எழுத வேண்டும், அவை எல்லாம் எப்படி கோர்வையாக தொகுக்க வேண்டும் என்கிற கேள்வி எழுகிறது அல்லவா? இதற்கு நாம் ‘Structure’ பற்றி புரிந்து… Continue reading
-
பன்னிரண்டு ஆண்டு பயணம்
Pic courtesy: Sven Vee இன்று இந்த இணையதளம் தன்னுடைய பன்னிரண்டாம் ஆண்டை நிறைவு செய்கிறது என்பதை பகிர்வதில் மகிழ்கிறேன். என்னுடைய முதல் பிளாக்கை 2007-யில் கல்லூரி இரண்டாமாண்டு படிக்கும்போது தொடங்கினேன். விளையாட்டாக ஏதேதோ எழுத ஆரம்பித்து, பின் சிறுகதை எழுத இயலும் என்ற நம்பிக்கை வந்தபோது இந்த தளம் தொடங்கப்பட்டது. 2011-யில் இதே நாளில் இந்த தளத்திற்காகவே ஒரு சிறுகதையை எழுதி பதிவிட்ட போது இருந்த அதே மகிழ்சசி இத்தனை ஆண்டுகளில் ஒவ்வொரு பதிவை பதிவேற்றும்போதும்… Continue reading
-
திரைக்கதை எனும் நெடும்பயணம் -3
3 All drama is conflict. Without conflict, there is no action. Without action, there is no character. Without character, there is no story. And without story, there is no screenplay.- Syd Field முரண் ஒரு திரைக்கதை ‘கதை’யிலிருந்து (Concept) உருவாகலாம் என்றோம். அல்லது கதாபாத்திரத்திலிருந்து (Character) உருவாகலாம் என்றோம். ஆனால் உண்மையில் கதை, கதாபாத்திரம் இரண்டுமே ஒன்றோடொன்று பின்னிப்பிணைந்தவை. கதையின்றி கதாபாத்திரம் இல்லை. கதாபாத்திரமின்றி… Continue reading