காலை எத்தி எத்தி
வெளியே வர துடிக்கிறது
குழந்தை
இருள் கவிந்த
கர்பப் பையினிலிருந்து
பேரொளி நோக்கி
பல கனவுகளுடன்
தலையை
வெளியே நீட்டியது,
அதன் கண் கூசிற்று .
மருத்துவன் ஓர்
தாதியை உரச,
இன்னொரு தாதி
அதை வன்மமாய் பார்க்க
உதவியாளன் செவிலியர்களை
கண்களாலே காமுற
குழந்தையின் உளம் கூசிற்று .
பேரொளியா இது !
பேரிருள்
என் தாயின்க ருவறையே சாந்தி
சூனியம்
சுவர்க்கம்.
இழுத்துக் கொண்டது
தலையை
மீண்டும் உள்ளே.
வெளிவர மறுக்கும்
குழந்தையை வெளியே எடுக்க
முயற்சி செய்துக்கொண்டிருந்தனர்
மருத்துவர்கள்,
கருவிலேயே
ஞானம்பெற்ற போதிசத்துவர் அவன்.
நிச்சயம் வெளிவரப் போவதில்லை.
பேரொளி காண நினைத்துப் பேரிருள் சூழ்ந்த கதை கவிதையில் நன்றாக வந்திருக்கிறது. இன்னும் எழுதுங்கள்
-ஏகாந்தன்
http://aekaanthan.wordpress.com
LikeLike