psychological short stories
-
ஒரு நாய் சற்றே இடைவெளி விட்டு என்னைப் பின்தொடர்ந்து கொண்டே வருகிறது- சிறுகதை
ஒரு நாய் சற்றே இடைவெளி விட்டு என்னைப் பின்தொடர்ந்து கொண்டே வருகிறது. ஆம். அது ஏன் அப்படி செய்கிறது என்று நான் கேட்டதே இல்லை. முதலில் அந்த நாய் எப்படி என் பின்னே வந்தது என்று சொல்லிவிடுகிறேன். வழக்கம் போல் நான் அன்றும் நடைபயிற்சியில் ஈடுப்பட்டிருந்தேன். ஒவ்வொரு நாளும் குறைந்தது ஐந்து கிலோமீட்டர் நடக்காமல் போனால் உடல் உழைப்பே இல்லாத என் உடம்பு ஊதி நாளையே செத்துவிடுவேனோ என்ற எண்ணம் என்னுள் தலைத்தூக்கிடும். அதைத் தவிர்ப்பதற்காகவே நான் Continue reading
-
நைட் ஷிப்ட்-சிறுகதை
“Every Guilty Person is his Own hangman” “தூ நைட் ஷிப்ட் மே ஆஜா “திடீர்னு ஒருநாள் என் பாஸ் சொன்னான். பொதுவா ‘நைட் ஷிப்ட்’ யாரும் வரமாட்டாங்க. எல்லாம் கல்யாணம் ஆனவனுங்க. இத்தனைக்கும் என்னோட சின்ன பசங்க. இங்கெல்லாம் அப்படித்தான். ரொம்ப சீக்கிரம் கல்யாணம் செஞ்சுப்பாங்க. ராத்திரியில மட்டும்தான் பெண்டாளானும் யாரோ சொல்லிவச்சிட்டுச் செத்த எழுதப் படாத அந்தக் கவைக்குதவாத சட்டத்தைக் கண்மூடித்தனமா பின்பற்றுற நாட்டுல அவனுங்க ‘நைட் ஷிப்ட்’ வர மாட்டேனு சொன்னது Continue reading