John lennon
-
John Lennonism
ஜான் லெனான் தான் பல்வேறு காலங்களிலும் வாழ்வின் அழுத்தங்களிலிருந்து காத்து வந்திருக்கிறார். அவர் பாடல்கள் பித்து பிடிக்காமல் பார்த்துக் கொள்ளும் என்பார்கள். விளையாட்டாக சொல்ல வேண்டுமெனில் அவர் பாடல்கள் பேய் பிடிக்காமலும் என்னைப் பார்த்துக் கொண்டது என்பேன். அது நான் பொறியாளராக வேலைப் பார்த்துக் கொண்டிருந்த காலம். இருபத்தியிரண்டு வயது. ஆசியாவிலேயே அளவில் பெரிய ஒரு ஸ்டீல் உற்பத்தி நிறுவனத்தில் வேலை. உற்பத்தி தொடங்கியிருக்காத நேரம். சோதனை முயற்சியாக இரவில் ஒரு கம்ப்ரசர் மட்டும் ஒடும். நான் Continue reading
-
அநிருத்தன் செய்த மூன்று கொலைகள்- அரங்கேற்றம்
என்னுடைய ‘அநிருத்தன் செய்த மூன்று கொலைகள்’ என்கிற சிறுகதை நேற்று (17.11.2024) Alliance Française Madras- யில் மேடை நாடகமாக அரங்கேறியது என்பதை பகிர்வதில் மகிழ்கிறேன். என்னுடைய சிறுகதைகளில் நான் முக்கியமானதாக கருதும் கதைகளில் ஒன்று ‘அநிருத்தன் செய்த மூன்று கொலைகள்’. காரணம், இது பேசும் அரசியல். வெளிப்படையாக பலரும் பேசத் தயங்கும் அரசியல்… இது வேலை, பணம் அதன் இயலாமை தரும் மனம் அழுத்தத்தை பற்றிய கதையாக தோன்றினாலும் இதன் ஆதாரம், வாய்ப்பு உள்ளவர்கள் வாய்ப்பு Continue reading