aazham
-
ஆஸ்கார் 2014
நன்றி ஆழம் ஏப்ரல் 2014 ஆஸ்கார் போட்டியின் மீது ஏராளமான விமர்சனங்கள் எழுந்தாலும், ஆஸ்கார் விருதுக்கு இருக்கும் மவுசுமட்டும் குறைவதில்லை. அந்த வகையில், இந்த ஆண்டு அதிக எதிர்பார்ப்புகளுக்கிடையே நடந்து முடிந்த ஆஸ்கார் போட்டியில் எந்தெந்த படங்கள் எந்தெந்த பிரிவுகளில் விருதுகளை வென்றன என்பதை இங்கே பார்ப்போம். கிராவிட்டி இந்த ஆண்டு அதிக விருதுகளை வென்றுள்ள படம், கிராவிட்டி. சிறந்த இயக்குனர், சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த படத்தொகுப்பு, சிறந்த இசை உட்பட மொத்தம் ஏழு விருதுகளை இந்த Continue reading
-
கிராவிட்டியும் ஆஸ்காரும்
கடந்த ஆண்டு வெளியான லைஃப் ஆப் பை படத்திற்கும் இந்த ஆண்டு வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் கிராவிட்டி படத்திற்கும் ஒரு ஒற்றுமை உண்டு. நடுக்கடலில் தன்னந்தனியாக தத்தளிக்கும் சிறுவனை பற்றிய படம் லைஃப் ஆஃப் பை. விண்வெளியில் உயிருக்கு போராடும் பெண்ணை பற்றிய சயின்ஸ் பிக்ஷன் படம், கிராவிட்டி. இரண்டு படங்களுமே, தன்னம்பிக்கை இருந்தால் எத்தகைய ஆபத்தான சூழலையும் எதிர்கொள்ளலாம் என்ற கருத்தையே முன்வைக்கின்றன. லைஃப் ஆப் பை பல ஆஸ்கார் விருதுகளை குவித்தது போல கிராவிட்டி Continue reading
-
தி காஞ்ஜூரிங்
நன்றி ஆழம் உண்மை சம்பவங்களை அடிப்படையாக கொண்டு எடுக்கப்படும் பேய் படங்களுக்கு எப்பொழுதுமே மவுசு அதிகம். அந்த வகையில், அமெரிக்காவில் நடந்த ஒரு உண்மை சம்பவத்தின் திரை வடிவமே, அண்மையில் வெளியான, தி காஞ்ஜூரிங். உலகளவில் பெரும் வரவேற்ப்பை பெற்றுவரும் இந்த படத்தில் அப்படி என்ன தான் இருக்கிறது என்று பார்த்துவிடுவோம். பெரோன் தம்பதியர், தங்கள் ஐந்து மகள்களுடன் புது வீட்டிற்கு குடி புகுகிறார்கள். ஆனால் அவர்களின் செல்ல நாய் மட்டும் வீட்டிற்குள் காலடி எடுத்து வைக்க Continue reading
-
ஆழம் கட்டுரைகள்
ஆழம் இதழில் எழுதிய கட்டுரைகள். http://www.aazham.in/?author=96 நன்றி Continue reading
-
சினிமா மேட் இன் சீனா
உலகிலேயே அதிக படங்கள் தயாரிக்கும் நாடுகளின் பட்டியலில் மூன்றாவது இடத்தில் இருக்கும் நாடு சீனா. அமெரிக்காவும் இந்தியாவும் முறையே முதல் மற்றும் இரண்டாம் இடத்தில் இருக்கின்றன. சீனாவில் படைப்பு சுதந்திரம் குறைவு என்பதால், சீன ரசிகர்களின் எதிர்பார்ப்பை சீன படைப்பாளிகளால் பூர்த்திசெய்ய முடியவில்லை. அதனால் சீனர்கள் ஹாலிவுட்டை ஆதரிக்கத் தொடங்கிவிட்டனர். விளைவு, சீனாவில் ஆண்டுக்கு பல நூறு படங்கள் தயாரிக்கப்பட்டாலும், சீனா அதிகம் கல்லாக் கட்டுவது ஹாலிவுட் படங்களின் மூலமே.. 1960-களில் சீனாவில் நடந்த கலாச்சார புரட்சியின் Continue reading