என்னுடைய ‘3BHK வீடு’ என்கிற சிறுகதை திரு. அருண் விஷ்வா அவர்களின் தயாரிப்பில்,
திரு. ஶ்ரீ கணேஷ் அவர்களின் எழுத்து-இயக்கத்தில் திரைப்படமாகி இருக்கிறது என்பதை பகிர்வதில் பெருமகிழ்ச்சி அடைகிறேன்.
‘3BHK வீடு’ ஒரு எளிய குடும்பத்தின் முக்கிய பிரச்சினையை, கனவை உணர்வுபூர்வமாக பேசும் கதை. தினமணி சிவசங்கரி போட்டியில் இரண்டாவது பரிசு பெற்ற கதை என்பதில் கூடுதல் சந்தோஷம்.
சமகால இளைஞர் ஒருவரால் எழுதப்பட்ட சிறுகதை, அதே காலத்தில் ஒரு சமகால இளைஞரால் தழுவப்பட்டு வெள்ளித்திரையை அடைவது என்பதை
புனைவு எழுத்தாளன்-வாசகன் என்கிற முறையிலும், சினிமா ரசிகன் என்கிற முறையிலும் ஒரு முக்கிய நிகழ்வாக பார்க்கிறேன்.
வெவ்வேறு நல்ல தமிழ் சிறுகதைகள் நல்ல திரைப்படங்களாக உருவெடுக்க 3BHK திரைப்படம் வழிவகுக்கும் என்று பெரிதும் நம்புகிறேன்.
திரைப்பட குழுவிற்கு அன்பும் வாழ்த்துகளும்.
என்னை தொடர்ந்து ஊக்குவித்து வரும் வாசகர்களுக்கு அன்பும் நன்றியும்.
நன்றி
அரவிந்த் சச்சிதானந்தம்
Leave a comment