writer

  • நான் ஒரு கதைசொல்லி

    நான் ஒரு கதை சொல்லி ஆழ் கடல் பொங்கி உயிர்களை விழுங்கி உலகம்  எரிந்து உறவுகள் பிரிந்து நாகரிக உலகம்- பின்நோக்கி சுழன்று சமகால  மனிதன் நிர்வாண மனிதனாய்- மீண்டும் உருமாறி நரமாமிசம்  தின்று அக்றிணை உயர்திணை  அனைத்தும் அழிந்து,வெந்து போனாலும் எனக்கு மரணமில்லை ஏனெனில் நான் ஒரு கதை சொல்லி காலங்கள்  மாறலாம் காட்சிகள் மாறலாம் கதைகள் மாறிடா ! கதை சொல்லியின் புகழ் அழிந்திடா ! கதைகளே  உலகியலுக்கு அடிப்படை. கடவுளர் கதை காதலர் Continue reading

  • தமிழ் எழுத்தாளனின் மரணம்

    அந்த தமிழ் எழுத்தாளன் மாண்டுவிட்டான் அழுவதற்கு யாருமில்லை சாகும்வரை பலஆயிரம் பக்கங்களை சில நூறுப் பேர்களுக்காக  மட்டும் எழுதியவன் மாண்டுவிட்டான் தமிழ்நாட்டில் தமிழில் எழுதும் கீழ்த்தரமான செயலை இறுதிவரை செய்தவன் மாண்டுவிட்டான் நீசன் எனக்கூறி பலர் அவனை ஒதுக்கிவிட்டனர் சபையில் ஆபாசம் பேசுகிறான் எனக்கூறி அறிவிலிகள் பலர் ஒதுங்கிநின்றனர் ஒதுக்கியவர்களாலோ ஒதுங்கியவர்களாலோ ஒடுக்கமுடியவில்லை அவனை இறுதிவரை வளையா முதுகெலும்புடன் எழுதியவன் மாண்டுவிட்டான் பக்கத்துக்கு பக்கம் சார்த்தர் பாரதி என பிதற்றினான்-அவனுக்காக அழுவதற்கு சார்த்தரோ பாரதியோ இல்லை அழ நினைத்த நண்பர்களோ-ஏனோ Continue reading