oscar 2014
-
ஆஸ்கார் 2014
நன்றி ஆழம் ஏப்ரல் 2014 ஆஸ்கார் போட்டியின் மீது ஏராளமான விமர்சனங்கள் எழுந்தாலும், ஆஸ்கார் விருதுக்கு இருக்கும் மவுசுமட்டும் குறைவதில்லை. அந்த வகையில், இந்த ஆண்டு அதிக எதிர்பார்ப்புகளுக்கிடையே நடந்து முடிந்த ஆஸ்கார் போட்டியில் எந்தெந்த படங்கள் எந்தெந்த பிரிவுகளில் விருதுகளை வென்றன என்பதை இங்கே பார்ப்போம். கிராவிட்டி இந்த ஆண்டு அதிக விருதுகளை வென்றுள்ள படம், கிராவிட்டி. சிறந்த இயக்குனர், சிறந்த ஒளிப்பதிவு, சிறந்த படத்தொகுப்பு, சிறந்த இசை உட்பட மொத்தம் ஏழு விருதுகளை இந்த Continue reading
-
கிராவிட்டியும் ஆஸ்காரும்
கடந்த ஆண்டு வெளியான லைஃப் ஆப் பை படத்திற்கும் இந்த ஆண்டு வெளியாகி வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் கிராவிட்டி படத்திற்கும் ஒரு ஒற்றுமை உண்டு. நடுக்கடலில் தன்னந்தனியாக தத்தளிக்கும் சிறுவனை பற்றிய படம் லைஃப் ஆஃப் பை. விண்வெளியில் உயிருக்கு போராடும் பெண்ணை பற்றிய சயின்ஸ் பிக்ஷன் படம், கிராவிட்டி. இரண்டு படங்களுமே, தன்னம்பிக்கை இருந்தால் எத்தகைய ஆபத்தான சூழலையும் எதிர்கொள்ளலாம் என்ற கருத்தையே முன்வைக்கின்றன. லைஃப் ஆப் பை பல ஆஸ்கார் விருதுகளை குவித்தது போல கிராவிட்டி Continue reading
-
தி குட் ரோடும் ஆஸ்காரும்
1956-ஆம் ஆண்டு தொடங்கி ஒவ்வொரு ஆண்டும் அமெரிக்க படங்கள் அல்லாத மற்ற படங்களை அங்கீகரிக்கும் வகையில் சிறந்த வெளிநாட்டு திரைப்படம் என்றொரு விருதை ஆஸ்கார் குழுவினர் வழங்கி வருகின்றனர். அந்த விருதிற்காக ஒவ்வொரு நாடும் போட்டி போட்டுக் கொண்டு ஆஸ்காருக்கு படங்களை அனுப்புவது வழக்கம். இந்த ஆண்டு அதிக சர்ச்சைகளுக்கும் பாராட்டுகளுக்குமிடையே “தி குட் ரோட்” என்கிற குஜராத்தி திரைப்படத்தை ஆஸ்காருக்கு பரிந்துரை செய்திருக்கிறது இந்திய திரைப்பட கூட்டமைப்பு. தொண்ணூறுகளின் தொடக்கத்திலேயே குஜராத் திரைத்துறை அழிவை சந்திக்க Continue reading