Feminism

  • கைகுட்டைகளும் ட்ரான்ஸ்வெஸ்டிசமும்-சிறுகதை

     “Transvestism (also called transvestitism) is the practice of cross-dressing, which is wearing clothing traditionally associated with the opposite sex.”-Wikipedia கைக்குட்டை என்பது உங்களுக்கு வேண்டுமென்றால் ஒரு சாதாரண விடயமா இருக்கலாம். எனக்கு அதிமுக்கியமான ஓர் விடயம்.  கைகுட்டைக்கென்ன பெரிய முக்கியத்துவம் இருந்துவிடப்போகுதென்று  நீங்கள்  நினைக்கலாம். ஆனால்  கடந்த இரண்டு மாதங்களில்  நான் ஆயிரம் ரூபாய்க்குக் கைகுட்டை வாங்கிட்டேன்னு சொன்னால் , அதனுடைய முக்கியத்துவம் உங்களுக்குப் புரியும். ஒரு வருடத்திற்குச் சுமார்  ஆறாயிரம் ரூபாய் கைகுட்டைக்கே Continue reading

  • நான் ஓர் விலைமாது

    மணி பத்து ஆச்சு, இன்னும் பாஸ்கர் சாரா காணோம். பாஸ்கர் சார் யாருனு கேக்குறீங்களா ? அவருதாங்க அந்த மாடிவூட்டுக்காரர். பெரிய பாங்க் ஆபிசர். ஒன்பது மணி ஆச்சுன்னா போதும், அவரு வீட்டு வாசல்ல  வெத்தலய்ய மென்னுக்கிட்டே உக்காந்திருப்பாரு.வீட்டுலயே எவ்வளவு நேரம்தான் சும்மா ஊக்கந்திருக்குறது ! புழுக்கமா இருக்காதா ? அதான் காத்தோட்டமா அரைக்கை பனியன் ஒண்ண போட்டுக்கிட்டு, போற வறோங்க எல்லாரையும் வேடிக்கை பாத்துக்கிட்டு இருப்பாரு. அவருக்கு குல்ஃபினா ரொம்ப புடிக்கும். எனக்கு அவர ரொம்ப Continue reading

  • ஒரு பெண்ணின் கதை

    அந்த பொண்ண பத்தி என்ன சொல்றது.. நிச்சயமா கயலெழுதி வில்லெழுதிக் காரெழுதினு வர்ணிக்க முடியாது. ஏனா அவ கண்ணகி இல்லை..ஆனாலும் அவ அழகா இருந்தா.. கண்ணகியோ மாதவியோ பொண்ணு பொண்ணுதான் கண்ணெல்லாம் மை.. இரத்த சோக புடிச்சு கண்ண சுத்தி கருவளையம் வந்தா எப்படி இருக்குமோ அது மாதிரி, கண்ணெல்லாம் மை.. கண் இமைகள்ல மட்டும் மை போட்டது அந்த காலம். இப்ப இமைகள தவிர எல்லாம் எடத்துலயும் போடணும்…மைய… தலைய வலப் பக்கம் வகுடு எடுத்து இடப் பக்கம் எப்படியோ சுருட்டி ஏதோமாதிரி வாரியிருந்தா..இல்ல வாரல..எனக்கு சொல்ல தெரியுல..பொண்ணுகள ரெண்டு வகை உண்டு..ஒன்னு முடிய படிய வாருரவுங்க..இன்னொன்னு அதா விரிச்சு போட்டுக்குட்டு வழியெல்லாம் உதிர விட்டுக்கிட்டு சுத்துறவங்க..கொல்லிமலை கருப்பு சாமி கோயிலுக்கு பின்னாடி இருக்குற காடு மாதிரி இருந்தது, அவ தலமுடி .. உடம்புல அது அது இருக்க வேண்டிய இடத்துல்ல இல்ல . அதாவது தலைல போடா வேண்டிய கிளிப்ப இடுப்புல போட்டுருந்தா.. ஏதோ ஒரு கொலாய மாட்டியிருந்தா. ஜிகு ஜிகுனு ஒரு மேலாடை காத்துல ஆட நடந்து வந்தா.. நான் அந்த கடையில (தாபா) சூப்பு ஆர்டர் பண்ணிட்டு வாசல உட்கார்ந்து வேடிக்க பார்த்துக்கிட்டு இருந்தேன். உள்ள ஒரே கூட்டம். அவ திடிர்னு கைப்பேசில பேசிக்கிட்டே வெளிய வந்தா… அவ ஒரு ஹிந்திகாரி..ஹிந்தில கெட்ட கெட்ட வார்த்தைல யாரையோ திட்டிக்கிட்டுஇருந்தா..(ஹிந்தில எனக்கு கெட்ட வார்த்தைதான் அதிகம் தெரியும், எந்த மொழியா இருந்தாலும் கெட்ட வார்த்ததான் முதல கத்துக்க முடியும்) அந்த சம்பாசனை பின்வருமாறுதான் எப்படியோ இருந்துச்சு.. “இப்ப முடியாது” … “சொன்னா  புருஞ்சுக்கோ. திரும்பி உள்ள போலனா சந்தேகம் வந்திடும் “ … Continue reading