ஒரு பெண்ணின் கதை

அந்த பொண்ண பத்தி என்ன சொல்றது..
நிச்சயமா கயலெழுதி வில்லெழுதிக் காரெழுதினு வர்ணிக்க முடியாது.
ஏனா அவ கண்ணகி இல்லை..ஆனாலும் அவ அழகா இருந்தா..
கண்ணகியோ மாதவியோ பொண்ணு பொண்ணுதான்

கண்ணெல்லாம் மை..
இரத்த சோக புடிச்சு கண்ண சுத்தி கருவளையம் வந்தா
எப்படி இருக்குமோ அது
மாதிரி, கண்ணெல்லாம் மை..
கண் இமைகள்ல மட்டும் மை போட்டது அந்த காலம். இப்ப
இமைகள தவிர எல்லாம் எடத்துலயும்
போடணும்…மைய…
தலைய வலப் பக்கம் வகுடு எடுத்து இடப் பக்கம் எப்படியோ
சுருட்டி ஏதோமாதிரி
வாரியிருந்தா..இல்ல வாரல..எனக்கு சொல்ல
தெரியுல..பொண்ணுகள ரெண்டு வகை உண்டு..ஒன்னு முடிய
படிய வாருரவுங்க..இன்னொன்னு
அதா விரிச்சு போட்டுக்குட்டு வழியெல்லாம் உதிர விட்டுக்கிட்டு
சுத்துறவங்க..கொல்லிமலை கருப்பு சாமி கோயிலுக்கு
பின்னாடி இருக்குற காடு மாதிரி இருந்தது, அவ தலமுடி ..
உடம்புல அது அது இருக்க வேண்டிய இடத்துல்ல இல்ல .
அதாவது தலைல போடா வேண்டிய
கிளிப்ப இடுப்புல போட்டுருந்தா.. ஏதோ ஒரு கொலாய
மாட்டியிருந்தா. ஜிகு ஜிகுனு
ஒரு மேலாடை காத்துல ஆட நடந்து வந்தா..

நான் அந்த கடையில (தாபா) சூப்பு ஆர்டர் பண்ணிட்டு வாசல
உட்கார்ந்து வேடிக்க
பார்த்துக்கிட்டு இருந்தேன். உள்ள ஒரே கூட்டம். அவ
திடிர்னு கைப்பேசில பேசிக்கிட்டே
வெளிய வந்தா…

அவ ஒரு ஹிந்திகாரி..ஹிந்தில கெட்ட கெட்ட வார்த்தைல
யாரையோ திட்டிக்கிட்டுஇருந்தா..(ஹிந்தில எனக்கு கெட்ட வார்த்தைதான் அதிகம் தெரியும், எந்த மொழியா இருந்தாலும் கெட்ட வார்த்ததான் முதல கத்துக்க முடியும்)

அந்த சம்பாசனை பின்வருமாறுதான் எப்படியோ இருந்துச்சு..

“இப்ப முடியாது”

“சொன்னா  புருஞ்சுக்கோ. திரும்பி உள்ள போலனா சந்தேகம்
வந்திடும் “

“இங்க ஒருத்தன் என்னைய பார்த்துக்கிட்டே இருக்குறான்…
நான் உள்ள போறேன்

பின் நிறைய கேட்ட வார்த்தைகள். என்னதான் திட்டுறாலோனு
எனக்கு சந்தேகம்
வந்துச்சு..ஒரு வேளை என்ன திட்றமாதிரி அவனையோ ,
இல்ல அவன திட்றமாதிரி என்னையோ திட்டி இருக்கலாம்.
திடிர்னு ரோட்ட நோக்கி வேகமா
ஓடுனா ..கார் உள்ள இருந்த ஒருத்தன பார்த்து சிரிச்சா
கை கொடுத்தா..இதெல்லாம் ஒரு
நொடியிலயே நடந்திருச்சு..திரும்பி கடை உள்ள போயிட்டா.
அவன் கார வேகமா கிளப்பிக்கிட்டு
போய்ட்டான். அவன் கூட தான் அவ பேசிகிட்டு இருந்தா போல !

நான் தாபா உள்ள எட்டி பார்த்தேன். அவ அமைதியா உக்காந்து
சாப்பிட்டுக்கிருந்தா.
அவ கூட ஒரு வயசான ஆள் உட்கார்ந்து இருந்தான்.

நான் அவள பார்த்துக்கிட்டு இருக்கும்  போதே பின்னாடி இருந்து

ஒரு குரல், “சார் சூப் ரெடி”

நான் அத வாங்கிகிட்டு வீட்டுக்கு வந்துட்டேன்.  சூப்ப குடிச்சதும் ஒரே
பசி..வீட்ல இருந்த தீனி எல்லாத்தையும் தின்னுக் கிட்டே
யோசிச்சேன்.
‘அந்த ஆள் யாரா இருக்கும்’..
யூகிக்க முடியல. ஒருவேலை  அவளோட அப்பாவா கூட
இருக்கலாம் ! ஆனா அந்த பொண்ணு
கழுத்துல தாலி இருந்துச்சு..

தாலிங்கிறது வெறும் கயிறு…அது என்ன மாற்றத்த
ஏற்படுத்த போது..தாலி இருந்தாலும்
இல்லனாலும், உடம்போட நிறம் கருப்பா இருந்தாலும்
செவப்பா இருந்தாலும், முடிய
வாரியிருந்தாலும், விருச்சுப்போட்டு இருந்தாலும் உடம்புல
சுரக்குற ஹார்மோன்
ஒண்ணுதான். அத யாரால கட்டுப் படுத்த முடியும்…

‘அந்த ஆள் யாரா இருக்கும்’..யாரா இருந்தா எனக்கு என்ன…
யூகிக்க
விரும்பல…தூக்கம் வந்துச்சு..அப்படியே படுத்து
தூங்கிட்டேன்…

அதுக்கப்புறம் பல முறை அந்த தாபாக்கு போனேன்.
அவள பாக்கவே முடியல…

ஏனோ தெரியல அந்த பொண்ண பார்த்த ஒரே ஒரு கேள்வி தான் கேக்கனும்னு தோணுது .

“என் கூட வரியா ? “