திரைக்கதை பயிற்சி புத்தகம்
-
புத்தகம்- ஆக்சன் திரைக்கதை எழுதுவது எப்படி
பொதுவாக, திரைக்கதை எழுதுவது எப்படி என்று சொல்லும் புத்தகங்கள் இங்கே ஏராளம் இருக்கின்றன. ஆனால் குறிப்பிட்ட ஒரு ஜானரை (Genre) எப்படி எழுதுவது என்று பேசும் புத்தகங்கள் அதிகமில்லை. அந்த குறையைப் போக்கும் பொருட்டு William C Martell எழுதிய புத்தகம் தான் ‘The Secrets of Action Screenwriting’. புத்தகத்தின் தலைப்பு உணர்த்துவது போல இந்த புத்தகம், பிரத்தியேகமாக, ஆக்சன் கதைகள் எழுதுதலைப் பற்றி விலாவரியாக விவாதிக்கிறது. அதற்கு நாம் பின்பற்ற வேண்டிய சில உத்திகளையும் அடிகோடிட்டுக் காட்டுகிறது. Continue reading
-
ஆக்சன் திரைக்கதை எழுதுவது எப்படி-6
“எதையும் எழுதாமல் இருப்பதைவிட ஒரு மோசமான First draft எழுதிவிடுவது உத்தமம்”- Will Shetterly *** முந்தைய பகுதிகள் ஆக்சன் திரைக்கதை எழுதுவது எப்படி-1 ஆக்சன் திரைக்கதை எழுதுவது எப்படி-2 ஆக்சன் திரைக்கதை எழுதுவது எப்படி-3 ஆக்சன் திரைக்கதை எழுதுவது எப்படி-4 ஆக்சன் திரைக்கதை எழுதுவது எப்படி-5 *** எது நம்முடைய பிளாட்டின் விதையாக (Plot seed) இருக்கலாம்? நம்மை சுற்றி நடப்பதை கவனித்துக் கொண்டே இருக்க வேண்டும் என்கிறார் மார்ட்டல். எது பெருவாரியான மக்களின் கோபமாக, பயமாக, தேவையாக இருக்கிறதோ Continue reading
-
The Writer’s Journey- Christopher Vogler – சினிமா புத்தகங்கள்- 4
உலகம் முழுக்க தொன்று தொட்டு சொல்லப்பட்டுவரும் தொன்மங்கள், புராணங்கள், பழங்கதைகள் எல்லாவற்றிலும் ஒரு ஒற்றைத் தன்மை இருப்பதாக சொல்கிறார் அறிஞர் ஜோசப் கேம்பல். இதை அவர் ‘Monomyth’ என்கிறார். எல்லாக் கதைகளும் அடிப்படையில் ஒரு ஹீரோவின் பயணமாக இருப்பதால் தான் அந்த ஒற்றைத் தன்மை வெளிப்படுகிறது என்பது அவரது கூற்று. ‘Hero with thousand faces’ என்ற புத்தகத்தில் அவர் விவரித்திருக்கும் இந்த கூற்று ஒரு முக்கியமான திரைக்கதை உத்தி என்று சொல்கிறார் திரைக்கதையாசிரியர் கிறிஸ்டோபர் வாக்லர். Continue reading
-
கொஞ்சம் திரைக்கதை- e-book
நல்ல திரைக்கதைகளை கொண்ட சில அமெரிக்கத் தொலைக்காட்சி தொடர்களின் திரைக்கதை சிறப்பசங்களை பற்றி பேசும் இந்த புத்தகம், வெவ்வேறு காலகட்டங்களில் வெளியான கட்டுரைகளின் தொகுப்பு. click for kindle version Continue reading