கவிதை
-
தமிழ் எழுத்தாளனின் மரணம்
அந்த தமிழ் எழுத்தாளன் மாண்டுவிட்டான் அழுவதற்கு யாருமில்லை சாகும்வரை பலஆயிரம் பக்கங்களை சில நூறுப் பேர்களுக்காக மட்டும் எழுதியவன் மாண்டுவிட்டான் தமிழ்நாட்டில் தமிழில் எழுதும் கீழ்த்தரமான செயலை இறுதிவரை செய்தவன் மாண்டுவிட்டான் நீசன் எனக்கூறி பலர் அவனை ஒதுக்கிவிட்டனர் சபையில் ஆபாசம் பேசுகிறான் எனக்கூறி அறிவிலிகள் பலர் ஒதுங்கிநின்றனர் ஒதுக்கியவர்களாலோ ஒதுங்கியவர்களாலோ ஒடுக்கமுடியவில்லை அவனை இறுதிவரை வளையா முதுகெலும்புடன் எழுதியவன் மாண்டுவிட்டான் பக்கத்துக்கு பக்கம் சார்த்தர் பாரதி என பிதற்றினான்-அவனுக்காக அழுவதற்கு சார்த்தரோ பாரதியோ இல்லை அழ நினைத்த நண்பர்களோ-ஏனோ Continue reading
-
பிணம் தின்னி
பிணம் தின்னி அவள் சிரித்துக் கொண்டிருக்கிறாள் அது பெரும் சிரிப்பு பேருவகைச் சிரிப்பு மனமெல்லாம் ஆனந்த களிப்பு கண்களில் சாதித்த வெறி கைகளை தட்டி தட்டி அவள் சிரித்துக் கொண்டிருக்கிறாள் அவள் கை தட்டளுக்கிடயே சிக்குண்டு செத்தது என் இனம் அவள் பெரும் குரல் எழுப்பிச் சிரிக்கிறாள் அதில் ஒழிந்து போகிறது, என் மீனவனின் கதறல் ஒலி ஒடுக்கப்பட்ட ஓர் இனத்தின் வலி… இழவு வீட்டில் வந்து சிரித்துவிட்டு , அவர்கள் சுகமாகத்தான் உள்ளார்கள் என கூறி கூறி Continue reading