
இன்று இந்த இணையதளம் தன்னுடைய பதின்மூன்றாம் ஆண்டை நிறைவு செய்கிறது என்பதை பகிர்வதில் மகிழ்கிறேன். Consistency தான் ஒரு படைப்பாளிக்கு இருக்க வேண்டிய முக்கிய quality என்று நினைக்கிறேன். அந்த வகையில் தொடர்ந்து பதிமூன்று ஆண்டுகள் இந்த தளத்தில் இயங்க முடிந்திருக்கிறது, எழுத முடிந்திருக்கிறது என்பதில் கூடுதல் மகிழ்ச்சி.
எழுத தொடங்கிய ஆரம்ப காலகட்டங்களில் முக்கியமாகப்பட்ட பல விஷயங்கள் பின்னாளில் முக்கியமற்று போய்விட்டன. பிடித்ததை தொடர்ந்து எழுத முடிகிறது என்பதே இப்பொதெல்லாம் முக்கியமான விஷயமாக இருக்கிறது.
சொல்வதற்கு இன்னும் நிறைய கதைகள் இருக்கின்றன என்பதை தவிர ஒரு கதைச் சொல்லிக்கு வேறு என்ன சந்தோஷம் இருந்துவிட முடியும்!
ஆதரவு அளித்துவரும் அனைவருக்கும் நன்றி.
அன்புடன்
அரவிந்த் சச்சிதானந்தம்
aravindhskumar.com
Leave a comment