
Pic courtesy: Sven Vee
இன்று இந்த இணையதளம் தன்னுடைய பன்னிரண்டாம் ஆண்டை நிறைவு செய்கிறது என்பதை பகிர்வதில் மகிழ்கிறேன்.
என்னுடைய முதல் பிளாக்கை 2007-யில் கல்லூரி இரண்டாமாண்டு படிக்கும்போது தொடங்கினேன். விளையாட்டாக ஏதேதோ எழுத ஆரம்பித்து, பின் சிறுகதை எழுத இயலும் என்ற நம்பிக்கை வந்தபோது இந்த தளம் தொடங்கப்பட்டது. 2011-யில் இதே நாளில் இந்த தளத்திற்காகவே ஒரு சிறுகதையை எழுதி பதிவிட்ட போது இருந்த அதே மகிழ்சசி இத்தனை ஆண்டுகளில் ஒவ்வொரு பதிவை பதிவேற்றும்போதும் மாறாமல் இருக்கிறது.
சிறுகதைகள், நெடுங்கதைகள், கட்டுரைகள் என இந்த தளமே என்னை வெவ்வேறு வகைகளை எழுத வைக்கிறது. எனக்கு பெரும் சந்தோசமளிக்கும் ‘எழுத்து’ என்கிற process இந்த தளத்தாலும் இதன் வாசகர்களாலும் மட்டுமே தொடர்ந்து சாத்தியமாகிறது.
ஆதரவு அளித்துவரும் அனைவருக்கும் நன்றி.
அன்புடன்
அரவிந்த் சச்சிதானந்தம்
aravindhskumar.com
Leave a reply to Aravindh Sachidanandam Cancel reply