கதை
-
3 BHK வீடு- சிறுகதை
பிறந்ததிலிருந்து முப்பத்தி சொச்சம் ஆண்டுகளாக வாடகை வீட்டிலேயே இருந்துவிட்ட எனக்கு சொந்தமாக ஒரு வீடு வாங்கிவிட வேண்டும் என்பது தான் வாழ்வின் பெரும் கனவு. அப்பா அம்மாவின் கனவும் அது தான். எனக்கு முன்பிருந்தே அந்தக் கனவுகளை சுமந்து வருகிறார்கள் அவர்கள். கால் நூற்றாண்டுக்கு மேலாக அப்பாவுக்கு பல்லாவரத்தில் ஒரு லெதர் கம்பெனியில் தான் வேலை. அதனாலேயே பொழிச்சலூர், பம்மல் என பல்லாவரம் சுற்றியே குடியிருந்து விட்டோம். ஐம்பத்தைந்து வயதில், நுரையீரலில் பிரச்சனை வரவே வேலையிலிருந்து நின்று Continue reading
-
ராபர்ட் மெக்கீயின்‘கதை’ – 4
4 கதாபாத்திரம் Writing is easy, Just a Matter of Staring at the blank page until your forehead bleeds- Gene Fowler ஒரு திரைக்கதை, ஒரு கதைக்கருவிலிருந்து பிறக்கிறதா அல்லது கதாபாத்திரத்திலிருந்து பிறக்கிறதா என்ற கேள்விக்கு யாரும் ஒரே பதிலை சொல்லிவிட முடியாது. சில நேரங்களில் கதைக்கரு ஒரு திரைக்கதையின் ஆரம்பப்புள்ளியாக இருக்கும். சில நேரங்களில் ஒரு கதாபாத்திரம் இருக்கும். இரண்டுமே கூட ஒரு திரைக்கதை பிறப்பதற்கு காரணமாக இருக்கலாம். ஆனால் Continue reading