அரவிந்த் சச்சிதானந்தம்
-
குறுங்கதை-6 – விட்னஸ்
சுப்பு என்றழைக்கப்பட்ட சுப்பிரமணி ஒரு பிரபலமான ‘விட்னஸ்’. கோர்ட் படி ஏறி, குற்றத்தை கண்ணால் கண்டேன் என்று சாட்சி சொல்லும் விட்னஸ் உங்கள் நினைவிற்கு வந்தால் அந்த எண்ணத்தை நீக்கி விடுங்கள். அவர் ஒரு சாதாரண ஆள். அவருக்கு போலீஸ், கோர்ட் போன்ற விசயங்கள் அலர்ஜி தரக் கூடியவை. என்ன ஆனாலும் வாழ்நாளில் போலீஸ் ஸ்டேஷன் படியை மிதித்துவிடவோ தாண்டிவிடவோ கூடாது என்கிற குறிக்கோளோடு அறுபது வயதை தொட்டுவிட்டார். மூன்று பெண்களில், கடைசி பெண்ணை இன்னும் கரை Continue reading
-
குறுங்கதை-5 – அவள், அவன் மற்றும் கடல்
அவள், அவன் மற்றும் கடல் இரவு. மெரினா கொஞ்சம்கொஞ்சமாக அடங்கிக் கொண்டிருந்த வேலை. பெரும்பாலான வியாபாரிகள் கடையை அடைத்திருந்தார்கள். மிச்சமிருந்த ஓரிரு உணவகங்கள் விளக்கை அணைத்துவிட்டு கடைசி வாடிக்கையாளர்களுக்கு உணவு பரிமாறிக் கொண்டிருந்தன. கடற்கரையை ஒட்டியிருந்த சாலையில் போலீஸ் வாகனம் சைரனை இயக்கி வியாபார நேரம் முடிந்துவிட்டதை தெரியப்படுத்திக் கொண்டிருந்தது. அவள் ஹெல்மெட்டை மணலில் போட்டுவிட்டு கடலை நோக்கி நடந்தாள். கடல், எப்போது சென்றாலும் யாரையும் வஞ்சனையின்றி வரவேற்கும். நீரில் கால் பட்டதும் காரணமேயின்றி கண்களில் நீர் Continue reading
-
குறுங்கதை-4 – பழைய நண்பன்
பழைய நண்பன் சந்தோசும் ரகுவும் ஒரே கல்லூரியில் படித்தவர்கள். இறுதி ஆண்டிலேயே கேம்பஸில் ரகுவிற்கு வேலை கிடைத்தது. சந்தோஷிற்கு கிடைக்கவில்லை. அவன் அதே கல்லூரியில் முதுகலை பொறியியல் படித்தான். அப்போதும் வேலை கிடைக்கவில்லை மீண்டும் அதே கல்லூரி ஹாஸ்டலில் பகுதி நேர வார்டானாக கொஞ்சகாலம் வேலை செய்தான். ரகு ஈ.எம். ஐயில் வீடு வாங்கினான. கார் வாங்கினான். திருமணம் செய்து இரண்டு பிள்ளைகளை பெற்றான். சந்தோஷ் நல்ல வேலையை தேடிக் கொண்டிருந்தான். ரகுவிற்கு ஒரு பிரச்சனை இருந்தது. Continue reading
-
குறுங்கதை-3 -வீடு
வீடு ராணியம்மாவிற்கு கால் தரையில் இல்லை. குடிகார கணவனை வைத்துக் கொண்டு மூன்று பிள்ளைகளை கரை சேர்த்தபோது கிடைக்காத சந்தோசம், இப்போது ஐம்பது வயதில் எட்டிப்பார்க்கிறது. பாத்திரங்களை வேகவேகமாக கழுவினாள். பிரியாணி செய்த பாத்திரம். எப்போது பிரியாணி செய்தாலும் அவளுக்கு ஒரு டிபன் அந்த வீட்டு எஜமானி கொடுத்துவிடுவாள். அதுவும் அவளாகவே அல்ல. ராணியம்மாள் பாத்திரத்தை கழுவி முடித்துவிட்டு, “என்னமா இன்னைக்கு பிரியாணியா!” என்று கேட்பாள. அந்த கேள்விக்காகவே காத்திருந்தவளாய் எஜமான பெண்மணி குஸ்காவை மட்டும் கொடுப்பாள். Continue reading
-
குறுங்கதை-2 – வனவாசம்
வனவாசம் அவன் சானடோரியம் சுரங்கப்பாதைக்குள் நடந்து வந்த போதே ரயில் கிளம்புவதற்கான ஒலியை எழுப்பியது. செயலியில் பயணசீட்டு வாங்கி இருந்ததால் இந்த வண்டியிலேயே ஏறிவிடலாம் என்று தோன்றியது. ஏனெனில் இன்னும் அரைமணி நேரத்தில் கிண்டியில் இருக்க வேண்டும். இண்டஸ்ட்ரியல் எஸ்டேட் உள்ளே ஒரு கம்பெனியில் நேர்காணல் இருந்தது. காலையில் திருச்சியில் இருந்து வந்த பேருந்து தாமதாகிப்போக, பெரியம்மா வீட்டிலிருந்து அவசரஅவசரமாக குளித்துவிட்டு கிளம்ப வேண்டி இருந்தது. சாப்பிட அவகாசமோ பொறுமையோ இல்லை. இந்த ட்ரைனை தவறவிட்டால் வாழ்க்கையும் Continue reading
-
குறுங்கதை-1 – சைக்கிள் சித்தப்பா
சைக்கிள் சித்தப்பா சைக்கிள் மிதிக்கும் அளவிற்கு உடலில் தெம்பில்லை. சைக்கிளை போட்டுவிடவும் மனமில்லை. அப்பாவின் நியாபகமாக அவனிடம் இருந்த ஒரே பொருள் அது தான். அதனாலேயே சைக்கிளை தள்ளிக் கொண்டே நடந்தான். உச்சி வெயிலில் ஒவ்வொரு அடியையும் எடுத்து வைப்பது கடினமாக தான் இருந்தது. ஒரு வாய் சோறு கிடைத்தால் தேவலை.பணமில்லை. மார்க்கெட்டில் நுழைவாயில் ஒரமாக இருந்த அடிபம்ப்பில் தண்ணீரை குடித்துவிட்டு காந்தி மார்க்கெட்டினுள் நுழைந்தான். காரணமேயின்றி மார்க்கெட்டில் கடைகள் அடைக்கப்பட்டிருந்தன. எதிரே வந்த வெள்ளை வேட்டிக்காரரை Continue reading
-
சில புத்தகங்கள் சில அனுபவங்கள்
கடந்த ஆண்டு (2023), வாசிப்பிற்கான ஆண்டாக இருந்திருக்கிறது. புனைவுகள், அபுனைவுகள் மற்றும் ஆலோசனை சொல்வதற்காக வாசித்த திரைக்கதைகள் என நிறைய வாசிக்க முடிந்தது. குறிப்பாக பல சிறுகதைத் (நெடுங்கதை) தொகுப்புகளை தொடர்ந்து வாசித்தது தனியொரு அனுபவம். சில தொகுப்புகளில் சில கதைகள் பெரிதும் பாதித்தன. சல்மாவின் ‘விளிம்பு’ (தொகுப்பு: சாபம்), ஜா. தீபாவின் ‘குருபீடம்’ (தொகுப்பு: நீலம் பூக்கும் திருமடம்) , அழகியபெரியவனின் ‘அம்மா உழைப்பதை நிறுத்திக் கொண்டார்’ ‘ தன்னுள்ளே சஞ்சரிப்பவள்’ (தொகுப்பு:’அம்மா உழைப்பதை நிறுத்திக் Continue reading
-
திரைக்கதை எனும் நெடும்பயணம் -4
4 “Screenplay writing is not an art form. It’s a skill; it’s carpentry; it’s structure”– WIlliam Goldman கட்டமைப்பு (Structure) கதை, கதாபாத்திரம் மற்றும் கான்ப்ளிக்ட் பற்றி அறிந்துகொண்டோம். இப்போது நம்மால் நேரடியாக திரைக்கதை எழுதிட முடியும் தான். ஆனால் அது மட்டும் போதுமா! நாம் என்னென்ன எழுத வேண்டும், அவை எல்லாம் எப்படி கோர்வையாக தொகுக்க வேண்டும் என்கிற கேள்வி எழுகிறது அல்லவா? இதற்கு நாம் ‘Structure’ பற்றி புரிந்து Continue reading
-
பன்னிரண்டு ஆண்டு பயணம்
Pic courtesy: Sven Vee இன்று இந்த இணையதளம் தன்னுடைய பன்னிரண்டாம் ஆண்டை நிறைவு செய்கிறது என்பதை பகிர்வதில் மகிழ்கிறேன். என்னுடைய முதல் பிளாக்கை 2007-யில் கல்லூரி இரண்டாமாண்டு படிக்கும்போது தொடங்கினேன். விளையாட்டாக ஏதேதோ எழுத ஆரம்பித்து, பின் சிறுகதை எழுத இயலும் என்ற நம்பிக்கை வந்தபோது இந்த தளம் தொடங்கப்பட்டது. 2011-யில் இதே நாளில் இந்த தளத்திற்காகவே ஒரு சிறுகதையை எழுதி பதிவிட்ட போது இருந்த அதே மகிழ்சசி இத்தனை ஆண்டுகளில் ஒவ்வொரு பதிவை பதிவேற்றும்போதும் Continue reading
-
திரைக்கதை எனும் நெடும்பயணம் -3
3 All drama is conflict. Without conflict, there is no action. Without action, there is no character. Without character, there is no story. And without story, there is no screenplay.- Syd Field முரண் ஒரு திரைக்கதை ‘கதை’யிலிருந்து (Concept) உருவாகலாம் என்றோம். அல்லது கதாபாத்திரத்திலிருந்து (Character) உருவாகலாம் என்றோம். ஆனால் உண்மையில் கதை, கதாபாத்திரம் இரண்டுமே ஒன்றோடொன்று பின்னிப்பிணைந்தவை. கதையின்றி கதாபாத்திரம் இல்லை. கதாபாத்திரமின்றி Continue reading