tamil stories

  • ஒரு பெண்ணின் கதை

    அந்த பொண்ண பத்தி என்ன சொல்றது.. நிச்சயமா கயலெழுதி வில்லெழுதிக் காரெழுதினு வர்ணிக்க முடியாது. ஏனா அவ கண்ணகி இல்லை..ஆனாலும் அவ அழகா இருந்தா.. கண்ணகியோ மாதவியோ பொண்ணு பொண்ணுதான் கண்ணெல்லாம் மை.. இரத்த சோக புடிச்சு கண்ண சுத்தி கருவளையம் வந்தா எப்படி இருக்குமோ அது மாதிரி, கண்ணெல்லாம் மை.. கண் இமைகள்ல மட்டும் மை போட்டது அந்த காலம். இப்ப இமைகள தவிர எல்லாம் எடத்துலயும் போடணும்…மைய… தலைய வலப் பக்கம் வகுடு எடுத்து இடப் பக்கம் எப்படியோ சுருட்டி ஏதோமாதிரி வாரியிருந்தா..இல்ல வாரல..எனக்கு சொல்ல தெரியுல..பொண்ணுகள ரெண்டு வகை உண்டு..ஒன்னு முடிய படிய வாருரவுங்க..இன்னொன்னு அதா விரிச்சு போட்டுக்குட்டு வழியெல்லாம் உதிர விட்டுக்கிட்டு சுத்துறவங்க..கொல்லிமலை கருப்பு சாமி கோயிலுக்கு பின்னாடி இருக்குற காடு மாதிரி இருந்தது, அவ தலமுடி .. உடம்புல அது அது இருக்க வேண்டிய இடத்துல்ல இல்ல . அதாவது தலைல போடா வேண்டிய கிளிப்ப இடுப்புல போட்டுருந்தா.. ஏதோ ஒரு கொலாய மாட்டியிருந்தா. ஜிகு ஜிகுனு ஒரு மேலாடை காத்துல ஆட நடந்து வந்தா.. நான் அந்த கடையில (தாபா) சூப்பு ஆர்டர் பண்ணிட்டு வாசல உட்கார்ந்து வேடிக்க பார்த்துக்கிட்டு இருந்தேன். உள்ள ஒரே கூட்டம். அவ திடிர்னு கைப்பேசில பேசிக்கிட்டே வெளிய வந்தா… அவ ஒரு ஹிந்திகாரி..ஹிந்தில கெட்ட கெட்ட வார்த்தைல யாரையோ திட்டிக்கிட்டுஇருந்தா..(ஹிந்தில எனக்கு கெட்ட வார்த்தைதான் அதிகம் தெரியும், எந்த மொழியா இருந்தாலும் கெட்ட வார்த்ததான் முதல கத்துக்க முடியும்) அந்த சம்பாசனை பின்வருமாறுதான் எப்படியோ இருந்துச்சு.. “இப்ப முடியாது” … “சொன்னா  புருஞ்சுக்கோ. திரும்பி உள்ள போலனா சந்தேகம் வந்திடும் “ … Continue reading