ponniyin selvan drama
-
பொன்னியின் செல்வன்-மேடை நாடகம்
பொன்னியின் செல்வனை படிக்க வேண்டும் என்ற ஆசை வெகுநாட்களாக இருந்தாலும், நான்கு வருடங்களுக்கு முன் பொறியாளராக வேலை பார்த்த காலத்தில் தான் படிக்க முடிந்தது. அழுவலகத்தில் நேரம் கிடைக்கும் போதெல்லாம், ஈ-புத்தகங்கள் படிப்பது வழக்கம். ஆங்கில புத்தகங்கள் படித்தால் யாருக்கும் எதுவும் வித்தியாசமாக தெரியாது. தமிழில் எதையாவது படித்தால் கண்டுபிடித்துவிடுவார்கள். அதற்காகவே, கம்ப்யூட்டரில் பொன்னியின் செல்வன் புத்தகத்தையும், ஒரு டூல்ஸ் இன்ஜினியரிங் புத்தகத்தையும் திறந்து வைத்துக்கொண்டு, கதையை படிப்பேன். யாராவது வந்தால் பொன்னியின் செல்வன் மினிமைஸ் ஆகிவிடும். Continue reading