தினம் ஒரு எழுத்தாளரின் சிறுகதையை வாசிக்க வேண்டும் என்கிற விருப்பத்துடன் இந்த ஆண்டு தொடங்கியது. ஒவ்வொரு நாள் காலையும், ஒரு எழுத்தாளரின் ஒரு சிறுகதையை தேர்ந்தெடுத்து வாசிப்பது நல்லதொரு அனுபவமாக இருக்கிறது.
இதற்கு முன்னர் வாசித்திராத பல புதிய எழுத்தாளர்களை இந்த முயற்சி எனக்கு அறிமுகப்படுத்தியிருக்கிறது. சில கதைகள் அதிகம் பிடித்து போக, அந்த எழுத்தாளர்களின் மற்ற படைப்புகளை வாசிக்கும் உந்துதல் பிறக்கிறது. இந்த ஆண்டின் இறுதியில் 365 எழுத்தாளர்களை, அதில் பெரும்பகுதியாக முன்பு வாசித்திராத எழுத்தாளர்களை வாசித்துவிடுவது திண்ணம்.
மாத இறுதியில் அந்த பட்டியலை இங்கே பகிரலாம் என்று இருக்கிறேன். எங்கோ யாருக்கோ, பல எழுத்தாளர்களும் அவர்களை வாசிக்க ஆரம்ப புள்ளியாக அவர்களின் ஏதோ ஒரு படைப்பும் அறிமுகமானால் ஒரு வாசகனாக அதிக சந்தோஷம் கொள்வேன்.
கீழே இணைத்திருப்பது ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதத்தில் வாசித்த கதைகள்.


இதில் பல கதைகள் நல்ல வாசிப்பனுபவத்தை தந்திருந்தாலும், அதிகம் பாதித்த சில கதைகள் பின்வருபவை.
உலக இலக்கியம்
1.The Elephant- Raymond Carver
2.Bullet in the brain-Tobias Wolff
3.Boys and Girls-Alice Munroe
தமிழ்
1. பைத்தியக்காரப் பிள்ளை-எம் வீ வெங்கட்ராம்
2.விசேஷம்-ஐயப்பன் மகாராஜன்
3.தாழ்பால்களின் அவசியம்-அ முத்துலிங்கம்
4.தாச்சி – தெரிசை சிவா
5.நீலி-கறுத்தடையான்
6.மூன்று காலங்களுக்கு புறப்பட்டு சென்ற மூன்று ரயில்கள்- தூயன்
7.சோற்றுக்கணக்கு -ஜெயமோகன்
8.அப்பா -திருச்செந்தாழை
9.பொய்மை -அ பாலமுரளி
10.கனமதுரம் -சித்துராஜ் பொன்ராஜ்
11.பால்க்கட்டு -அமரந்தா
12.கூப்பிய கரம் -லோகேஷ் ரகுராமன்
13.தந்தை சொல்மிக்க-கோவர்த்தனா
14.அவனுடன் பொதுவாக யாரும் பேசுவதில்லை – ராம்
15.நாடகம் -அரிசங்கர்
16.அவனை எனக்குத் தெரியாது-தெய்வீகன்
17.மாய வாழ்க்கை- ஜெ.பாஸ்கரன்
18.சில வித்தியாசங்கள்- ஷிந்துஜா
19.கோணல் வடிவங்கள்- இராசேந்திர சோழன்
20. அனாகத நாதம் செந்தில் ஜெகந்நாதன்
நன்றி
அரவிந்த் சச்சிதானந்தம்
Leave a comment