ஒரு திரைக்கதையை இப்படி தான் எழுத வேண்டும் என்று யாரும் சொல்லிட முடியாது. ஆனால் திரைக்கதை எழுத வேண்டும் என்கிற அகத்தூண்டல் இருந்தும் எங்கிருந்து தொடங்குவது என்கிற தயக்கம் இருப்போருக்கு ஒரு எளிய push தேவைப்படுகிறது.
பல திரைக்கதை எழுதி பயிற்சி பெற்றோருக்கு நாம் எழுதியிருப்பது சரியா என்கிற குழப்பம் வரும்போதோ, அல்லது கதையை மேற்கொண்டு எப்படி நகர்த்துவது என்கிற தடங்கல் வரும்போதோ ஒரு வழிகாட்டுதல் தேவைப்படுகிறது. இதையெல்லாம் சாத்தியப்படுத்த திரைக்கதை எழுதுதல் பற்றி எளிய மொழியில் தொடர்ந்து விவாதிக்குக் கொண்டிருப்பது அவசியமாகிறது.
அந்த நோக்கில், William C Martell எழுதிய ‘The Secrets of Action Screenwriting’ என்கிற புத்தகத்தை அடிப்படையாக கொண்டு ஒரு திரைக்கதையை அதுவும் குறிப்பாக ஒரு ஆக்சன் திரைக்கதையை எப்படி எழுதுவது என்று விவாதிக்கும் புத்தகம் தான் ‘ஆக்சன் திரைக்கதை எழுதுவது எப்படி’
ஆனால் மார்ட்டலின் புத்தகத்திற்கு வெறும் அறிமுகம் எழுதுவது போல் இல்லாமல் அவர் சொன்ன உத்திகளை பேசு பொருளாக வைத்து, தகுந்த தமிழ் படைப்புகளை உதாரணமாக கொண்டு, விலாவரியாக ஆக்சன் திரைக்கதை எழுதுவதைப் பற்றி விவாதிக்க வேண்டுமென்பதே என்னுடைய விருப்பமாக இருந்தது. அது சாத்தியமாகியிருக்கிறது என்று நம்புகிறேன்.
புதிதாக திரைக்கதை எழுத தொடங்குபவர்களுக்கும் பயன்படும் வகையில் இந்தக் கட்டுரைகள் இருக்க வேண்டுமென்ற நோக்கத்தில் இயன்றவரை எளிமையாக திரைக்கதை எழுதுதலைப் பற்றி பேசியிருக்கிறேன்.
புத்தகம் முன்னர் வெளியான போது ஆதரவு அளித்த வாசிக நண்பர்கள் அனைவருக்கும் நன்றியும் அன்பும். இப்போது இதை மேலும் சிறப்பாக பதிப்பித்து பலரிடம் கொண்டு சேர்த்திருக்கும் Zero Degree பதிப்பகத்திற்கு மனமார்ந்த நன்றிகள்.
ஆக்சன் திரைக்கதை எழுதுவது எப்படி
அரவிந்த் சச்சிதானந்தம்
#Screenwriting
The Talkie (Am imprint of Zero Degree Publishing)
புத்தகம் சென்னை புத்தக காட்சியில் Zero Degree (F19) அரங்கில் கிடைக்கும்.
நன்றியும் அன்பும்
அரவிந்த் சச்சிதானந்தம்

Leave a comment