என்னுடைய அடுத்த நாவல், லட்சியம் நோக்கி ஓடும் இளைஞன், லட்சியம் தொலைத்து midlife crisis-யில் சிக்கிக்கொள்ளும் நடுத்தரவயது மனிதன் இருவரின் வாழ்க்கை, காதல், அவர்களை
மீட்டெடுக்கும் பெண்களைப் பற்றியது.
இழந்த ஒவ்வொன்றையும் வாழ்க்கை வேறு வடிவில் தரும் என்ற தீம் தான் நாவலின் அடிநாதம். பெருநகர வாழ்வின் அழுத்தங்களை பின்னணியாக கொண்ட
நல்ல (காதல்) நாவலாக வந்திருக்கிறது என்கிறான் என்னுள் உள்ள வாசகன். ஒருநாள் நல்ல படமாகலாம்.
அதன் பாத்திரங்களுக்கு
AI பொருத்தமான முகங்களை கொடுத்திருக்கிறது.
நாவலின் மாந்தர்களின் வாழ்வு போல், வரும் நாட்கள் இனிதாக இருக்கும் என்று நம்பிக்கை பிறக்கிறது. எல்லோருக்கும் அப்படியே இருக்க பிராத்திக்கிறேன்.
இனிய தீபாவளி நல்வாழ்த்துகள்
அரவிந்த் சச்சிதானந்தம்
20.10.2025


முதல் படம் Chatgpt தந்தது
அடுத்த படம் Gemini தந்தது
Leave a comment