
புத்தகம் 20- பால்கனியுடன் கூடிய வீட்டை விரும்பும் ஒரு பெண்: குறுங்கதைகள் (2024)
இந்த குறுங்கதைகள் தொடர்ந்து பத்து இரவுகள் எழுதப்பட்டவை. இதன் கதை மாந்தர்கள் அப்பழுக்கற்றவர்கள் அல்ல. அவர்கள் மிகச் சாதாரணமானவர்கள். அன்றாட வாழ்வின் சிக்கல்களில் சிக்குண்டு தவிப்பவர்கள். சாதாரண மனிதர்களின் எளிய ஆசைகள், அதை நிறைவேற்றிக் கொள்ளும் தவிப்பு, அது நிறைவேறாமல் போகும் போது ஏற்படும் ஏமாற்றம் ஆகியவை இந்த கதைகளில் அழகாக வெளிப்பட்டிருக்கிறது. அதனாலேயே அந்த கதைமாந்தர்கள் நமக்கு நெருக்கமானவர்களாகிறார்கள்.
***
***

புத்தகம் 19- கதை: A book on Screenwriting (2023)
ராபர்ட் மெக்கீயின் ‘ஸ்டோரி’ புத்தகத்தின் வரிக்கு வரி மொழிபெயர்ப்பாகவோ, சுருக்கப்பட்ட மொழிபெயர்ப்பாகவோ அல்லாமல் அவர் சொன்ன சில முக்கிய உத்திகளை விவாதப் புள்ளியாக எடுத்துக் கொண்டு எழுதப்பட்ட இந்த கட்டுரைகள் திரைக்கதை எழுத முயல்பவர்களுக்கு நிச்சயம் பயன்படும்
அந்தாதி பதிப்பகம்
***

புத்தகம் 18- 3 BHK வீடு- சிறுகதைத் தொகுப்பு (2022)
“வாழ்க்கை அழகானது. சிதையும் ஏதோ ஒரு கனவு வாழ்வின் சமநிலையை குழைத்தாலும், வேறொரு கனவை சாத்தியப்படுத்துவதன் மூலம், வாழ்க்கை தன்னைத்தானே சமன் செய்துக் கொள்கிறது…” -சிறுகதைத் தொகுப்பிலிருந்து
அந்தாதி பதிப்பகம்
***

புத்தகம் 17: ஒரு வைரம் ஒரு காரிகை மற்றும் சில கயவர்கள்-நாவல் (2022)
விட்டிருந்தால் மணி காதல் தோல்வியில் தாடி வளர்த்து, தன் முன்னால் காதலி தீபிகாவை நினைத்து சோகப்பாடல் பாடி வாழ்க்கையை கழித்திருப்பான். ஆனால் விதி யாரை விட்டது! அவன் நண்பர்கள் ‘தோழர்’ பழமும், குரங்கு கார்த்தியும் தீபிகாவை கடத்தும்படி துர்போதனை செய்கிறார்கள். *** தீபிகாவின் வீட்டில் இருக்கும் ராசியான வைரத்தை திருடிவந்து பூஜை செய்தால் பார் போற்றும் பணக்காரனாகலாம் என்று சங்கு சாமியார் சுனில் ஜெயினிடம் சொல்ல, அவர் தன் ஆஸ்தான அடியாள் பழனியை வைரத்தை கவர்ந்து வர அனுப்புகிறார் *** சிறுசிறு கொள்ளைகளை செய்து வாழ்க்கையை ஓட்டிவந்த ‘டான் நம்பர் ஒன்’, இறுதியாக தீபிகா வீட்டில் இருக்கும் வைரத்தை கொள்ளை அடித்துக்கொண்டு வெளிநாட்டிற்கு தப்பிவிட திட்டம் தீட்டுகிறான். *** மாடல் அழகிகளை கடத்தி கொலை செய்யும் சைக்கோ கொலைகாரன் அனிருத்தின் பார்வை தீபிகாவின் மீது பட, அவன் தீபிகாவை கடத்தி வரும்படி தன் அடிமை இடும்பனுக்கு கட்டளை இடுகிறான். *** இவர்கள் எல்லோரும் ஒரு சுபயோக சுப இரவில் தீபிகாவின் வீட்டிற்குள் நுழைகிறார்கள்… -ஒரு வைரம் ஒரு காரிகை மற்றும் சில கயவர்கள்
அந்தாதி பதிப்பகம்
***

புத்தகம் 16: நனவிலி சித்திரங்கள்-குறுநாவல் (2021)
“நான் நல்லாதான் இருக்கேன். சுத்தி இருக்கவங்களுக்கு தான் ஏதோ பிரச்சனை. அதனாலேயே எனக்கு யாரையும் புடிக்கல. இவங்க எல்லாத்தையும் பைத்தியக்கார ஹாஸ்ப்பிட்டல்ல சேத்துட்டு எங்கயாவது போய்டலாம்னு பாத்தேன். ஆனா அவ்ளோ பேரையும் சேர்க்க ஹாஸ்ப்பிட்டல்ல இடம் இல்ல. அப்பறம் தான் புரிஞ்சிச்சு, இந்த உலகம் தான் பெரிய பைத்தியக்கார ஹாஸ்பத்திரினு. அதான் நான் இங்க வந்து சேர்ந்துக்கிட்டு அவங்கள வெளிலயே விட்டுட்டேன்” – குறுநாவலிலிருந்து
அந்தாதி பதிப்பகம்
***

புத்தகம் 15: கொரோனா நாட்கள் (2020)
அலுவலகத்தில் நான் வேலைக்கு வந்தே ஆகவேண்டும் என்று சொல்லிவிட்டார்கள். குரோம்பேட்டையிலிருந்து செல்லும் நண்பர் எம்.வியின் வண்டியில் ஏறிக்கொள்ளலாம் என்று பார்த்தேன்.
“சோசியல் டிஸ்டன்சிங் ப்ரோ. சாரி ப்ரோ” என்று சொல்லிவிட்டார்.
“மாஸ்க் க்ளவுஸ்லாம் போட்டுகிட்டு தான் ப்ரோ வருவேன்”
அவர் சமாதானம் ஆகவில்லை.
“வீட்ல குழந்தைங்கலாம் இருக்கு ப்ரோ. எனக்கு வந்தா நான் தாங்குவேன். ஆனா என் மூலமா அவங்களுக்கு வந்திரக் கூடாது! நீங்க வேற உங்க எதிர்வீட்டுக்காரு வெளிநாட்ல இருந்து வந்திருக்காருன்னு சொல்றீங்க…” என்றார்.
“எதிர்வீட்டுகாரு வெளிநாட்ல இருந்து வரல ப்ரோ. அவர் வீட்டு காரு தான் வெளிநாட்ல இருந்து வந்திருக்கு. ஜெர்மன் கார்” என்றேன்.
கொஞ்சம் சுதாரித்துக்கொண்டு கேட்டார், “அதான். கார்ல் கொரோனா வரும்ல…!”
“இல்ல. நாலு மாசத்துக்கு முன்னாடியே அந்த காரு வந்திருச்சு ப்ரோ” என்றேன் நான்.
“கொரோனாவும் நாலு மாசத்துக்கு முன்னாடியே வெளிநாட்ல வந்திருச்சு ப்ரோ” அப்பாவியாக முகத்தை வைத்துக் கொண்டு சொன்னார்.
***
ஊரடங்கில் ஒரு சாமானியன் படும்பாட்டை நகைச்சுவையாக சொல்லும் நெடுங்கதை
கிண்டிலில் வாங்க – Click here to buy
***

புத்தகம் 14: அநிருத்தன் செய்த மூன்று கொலைகள் (2020)
“அது என்னமோ தெரில சார், இந்த பாட்ட கேட்டாலே கொலை பண்ணனும்னு தோணுது சார்”
“எதுக்கு தம்பி அந்த பாட்ட கேட்டுக்கிட்டு, கேட்காதீங்க….” கன்னியப்பன் அப்பாவியாக சொன்னார்.
“மூளைக்குள்ள கேட்டுக்கிட்டே இருக்கு சார்… “ அவன் சொல்லிவிட்டு பாடத் தொடங்கினான்.
-ஏப்ரல் இரவில், ராக் மியூசிக் இசையில்,
அநிருத்தன் செய்த மூன்று கொலைகள் கதையிலிருந்து…
*மூன்று த்ரில்லர் கதைகளின் தொகுப்பு*
அந்தாதி பதிப்பகம்
***

புத்தகம் 13: இரண்டு கலர் கோடுகள்- குறுநாவல் (2019)
சோபியா. வயது இருபத்தியைந்து. மென்பொருள் நிறுவன வேலை, நட்பு, குடும்பம் என எல்லாம் அவளுக்கு அமைதியான வாழ்க்கையை தந்திருந்தது. ஒருநாள், அந்த அமைதியை குலைக்கும் விதமாக அவளுடைய pregnancy Test ரிப்போர்ட் வந்தது. அவர் கருவுற்றிருந்தாள். ஆனால் அவள் அதை விரும்பவில்லை. காரணம், அவளுக்கு திருமணம் ஆகியிருக்கவில்லை. சமூகம் தன் ஆயுதங்களை அவள்மேல் எறிய தயாராக இருந்தது. தன்னைக் காத்துக் கொள்வது அவளுக்கு அவ்வளவு எளிதாக இருக்கப் போவதில்லை.
அந்தாதி பதிப்பகம்
***

புத்தகம் 12: ஆக்சன் திரைக்கதை எழுதுவது எப்படி- திரைக்கதை புத்தகம் (2019)
வில்லியம் மார்ட்டல் எழுதிய ‘தி சீக்ரெட்ஸ் ஆப் ஆக்சன் ஸ்க்ரீன்ரைட்டிங்’ என்ற புத்தகத்தை மையப்படுத்தி ‘ஆக்சன் கதைகள் எழுதுவது எப்படி’ என்பதைப் பற்றி இந்த புத்தகம் பேசுகிறது. ஆனால் மார்ட்டலின் புத்தகத்திற்கு வெறும் அறிமுகம் போல் இல்லாமல் அவர் சொன்ன உத்திகளை பேசு பொருளாக வைத்து, தகுந்த தமிழ் படங்களை உதாரணமாக எடுத்துக்கொண்டு, விலாவரியாக ஆக்சன் திரைக்கதை எழுதுவதைப் பற்றி இந்த புத்தகத்தில் விவாதிக்கப்பட்டுள்ளது. புதிதாக திரைக்கதை எழுத தொடங்குபவர்களுக்கும் பயன்படும் வகையில் எளிமையாக (ஆக்சன்) திரைக்கதை எழுதுதலைப் பற்றி பேசியிருப்பது இந்த புத்தகத்தின் சிறப்பு.
அந்தாதி பதிப்பகம்
***

புத்தகம் 11: ஊச்சு (The Fear)- துப்பறியும் நாவல் (2018)
ஜாஸ்மின், நகுல், சுமித் மற்றும் மனிஷ், நால்வரும் நெருங்கிய நண்பர்கள். ஆவணப் படம் எடுப்பதற்காக மர்மங்கள் நிறைந்த மேல்பாறை நோக்கி பயணப்படுகிறார்கள். அந்த காட்டின் அமானுஸ்யத்தை அவர்கள் முழுவதுமாக உணர்ந்துகொள்வதற்குள், ஒவ்வொருவராக காணாமல் போகிறார்கள். இன்ஸ்பெக்டர் அர்ஜுன் அவர்களைத் தேடி சென்னையிலிருந்து புறப்படுகிறார். ஒருபுறம், நண்பர்கள் தொலைந்து போனதைப் பற்றி ஊரில் ஒவ்வொருவரும் ஒரு கதை சொல்கிறார்கள். மறுபுறம், மேல்பாறை போலீசாரோ ஒத்துழைக்க மறுக்கிறார்கள். எல்லா தடைகளையும் மீறி அர்ஜுன் மர்ம முடிச்சுகளை அவிழ்க்கிறார். ஆனால் வழக்கு மேலும் சிக்கலாகிக் கொண்டே போகிறது. மேல்பாறையின் மர்மங்களை தேடிச் சென்ற யாரும் உயிருடன் திரும்பியதில்லை என்பதை அறிந்தும் அர்ஜுன் தொடர்ந்து துப்பறிகிறார். அறிவியலுக்கும் அமானுஸ்யத்திற்கும் இடையே நடக்கும் மிகப்பெரிய போராட்டத்தில் சிக்கிக்கொண்ட அர்ஜுன் பிழைப்பாரா? நண்பர்கள் உயிருடன் திரும்புவார்களா? மேல்பாறையின் மர்மத்திற்கு முற்றுப் புள்ளி வைக்கப்படுமா?
அந்தாதி பதிப்பகம்
***
புத்தகம் 10: பிறழ்ந்த இரவுகள்- குறுநாவல்கள் (2018)
பிறழ்ந்த இரவுகள் மற்றும் நண்பனின் கடிதங்கள் குறுநாவல்களின் தொகுப்பு
அந்தாதி பதிப்பகம்
Click for Kindle edition
***

புத்தகம் 9: சித்திரமலை ரகசியம்- சிறார் கதை (2017)
பேராசிரியர் ராகவ் தன் பேரப் பிள்ளைகளுடன், மிகவும் அத்தியவசியமானதொரு ரகசியத்தை தேடி சித்திரமலைக்கு பயணப்படுகிறார். நீண்ட அந்த பயணத்தில் அவர்கள் மேலும் சில ரகசியங்களை தெரிந்து கொள்கின்றனர். இது குழந்தைகளுக்காவும், குழந்தைகளுக்கு சொல்வதற்காக பெரியவர்களுக்காவும் எழுதப்பட்ட கதை.
அந்தாதி பதிப்பகம்
Click for Kindle edition
***

புத்தகம் 8: நகைச்சுவைக் கதைகள்- சிறுகதைத் தொகுப்பு (2017)
நகைச்சுவைக் கதைகளின் தொகுப்பு
அந்தாதி பதிப்பகம்
Click for Kindle edition
***

புத்தகம் 7: கொஞ்சம் திரைக்கதை (2017)
நல்ல திரைக்கதைகளை கொண்ட சில அமெரிக்கத் தொலைக்காட்சி தொடர்களின் திரைக்கதை சிறப்பம்சங்களை பற்றி பேசும் இந்த புத்தகம், வெவ்வேறு காலகட்டங்களில் வெளியான கட்டுரைகளின் தொகுப்பு.
அந்தாதி பதிப்பகம்
***
புத்தகம் 6: நகுலனின் நாய்- சிறுகதைத் தொகுப்பு (2015)
மனிதனின் ஆழ்மன இச்சைகளையும், அகப் போராட்டங்களையும், மனப் பிறழ்வுகளையும் மனோதத்துவ தளத்தில் சொல்லிடும் சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு.
நகுலனின் நாய்- சிறுகதைத் தொகுப்பு
அந்தாதி பதிப்பகம்
Click to buy
***
புத்தகம் 5: சகலகலாவல்லவன்: கமலின் பிற பரிமாணங்கள் – ஓர் உரையாடல் (2015)
பரத்வாஜ் ரங்கன் கமலுடன் மேற்கொண்ட உரையாடல்களின் தமிழாக்கம் இது. தி ஹிந்துவில் வெளியான இந்த கட்டுரைகள் தற்போது கிழக்கு வெளியீடாக தமிழில் வந்துள்ளது.
சகலகலாவல்லவன்: கமலின் பிற பரிமாணங்கள் – ஓர் உரையாடல் -பரத்வாஜ் ரங்கன்
தமிழில்: அரவிந்த் சச்சிதானந்தம்
கிழக்கு பதிப்பகம்
***
புத்தகம் 4: தட்பம் தவிர்- க்ரைம் நாவல் (2014)
சென்னையில், ஒரு பிரபலமான அரசு பொறியியல் கல்லூரியில் பேராசிரியர் ஒருவர் கொடூரமான முறையில் கொல்லப்படுகிறார். இன்ஸ்பெக்டரான கதாநாயகன் விசாரணையில் ஈடுபடுகிறான். போலீசின் கவனம் முழுக்க கல்லூரியின் மீதிருக்க, கோயம்புத்தூரில் இன்னொரு கொலை நடக்கிறது. கொலைகாரன் வேண்டுமென்றே இன்ஸ்பெக்டருக்கு துப்பு கொடுத்துவிட்டு செல்ல, முதல் கொலை நடந்த கல்லூரியில், மாணவனொருவன் தற்கொலைக்கு முயல்கிறான். அவன்தான் முதல் கொலையின் விட்னெஸ். கல்லூரி நிர்வாகத்தால், தான் மனரீதியான சித்ரவதைக்கு ஆளானதால் தற்கொலைக்கு முயன்றதாக மாணவன் சொல்ல, இன்ஸ்பெக்டருக்கு உண்மைகள் புரியத் தொடங்குகின்றன. கல்லூரியில் ரகசிய விசாரணை மேற்கொள்கிறார். பொறியியல் கல்லூரிகளில் மாணவர்கள் எந்த அளவிற்கு கொடுமை படுத்தப்படுகிறார்கள் என்பதை அறிந்து திடுக்கிடுகிறார். விசாரணையில், கல்லூரியின் முன்னாள் மாணவன்தான் கொலைகாரன் என்று தெரியவருகிறது. மனநிலை பாதிக்கப்பட்ட அவனை கைது செய்கிறார் இன்ஸ்பெக்டர். ஆனால் கொலைகள் தொடர்கின்றன. பின் ஏராளமான திருப்பங்கள் நிகழ்கின்றன. உண்மையான கொலைகாரன் யார்? தப்பு செய்தவர்கள் தண்டிக்கப் படுவார்களா? மிகப்பெரிய மனோதத்துவ விளையாட்டில் சிக்கிக்கொண்ட இன்ஸ்பெக்டர் பிழைப்பாரா?
தட்பம் தவிர்- க்ரைம் நாவல்
அரவிந்த் சச்சிதானந்தம்
அந்தாதி பதிப்பகம்
Click to buy Paperback
Click for Kindle edition
***
புத்தகம் 3: தொடரும் சினிமா- சினிமா கட்டுரைகள்- free e-book (2014)
பல்வேறு நேரங்களில் பல்வேறு களங்களில் வெளியான திரைக் கட்டுரைகளின் தொகுப்பு இது.
தொடரும் சினிமா- சினிமா கட்டுரைகள்
அரவிந்த் சச்சிதானந்தம்
ஸ்பார்க் க்ரூஸ் பப்ளிக்கேஷன்ஸ்
***
புத்தகம் 2: மணிரத்னம் படைப்புகள் ஓர் உரையாடல் (2013)
மணிரத்னம் படைப்புகள் ஓர் உரையாடல்- பரத்வாஜ் ரங்கன்
தமிழில்: அரவிந்த் சச்சிதானந்தம்
கிழக்கு பதிப்பகம்
Click to buy
***
புத்தகம் 1: போதிதர்மர் முதல் ஜேம்ஸ்பாண்ட் வரை- free e-book (2012)
இவை வெறும் திரைப்பட விமர்சனங்களன்று. உலகத் திரைப்படங்களைப் பற்றி ஆழ்ந்த புரிதல் கொண்ட ஒரு ரசிகனின் கருத்துக்கள். விமர்சனங்களினூடே திரைக்கதை உத்திகள், சினிமாவைப் பற்றி ஒரு சராசரி ரசிகனுக்கு இருக்க வேண்டிய புரிதல்கள், எந்த வகையான சினிமாவை ஏற்றுக்கொள்வது, எந்த வகையான சினிமாவை நிராகரிப்பது போன்ற கருத்துக்கள், என பல்வேறு விடையங்கள் இதில் விவாதிக்கப்பட்டுள்ளன .பல்வேறு நேரங்களில் பல்வேறு களங்களில் வெளியான திரைக் கட்டுரைகளின் தொகுப்பு இது. படியுங்கள். பகிருங்கள்.
போதிதர்மர் முதல் ஜேம்ஸ்பாண்ட் வரை
அரவிந்த் சச்சிதானந்தம்
ஸ்பார்க் க்ரூஸ் பப்ளிக்கேஷன்ஸ்




