என்னுடைய ‘அநிருத்தன் செய்த மூன்று கொலைகள்’ என்கிற சிறுகதை நேற்று (17.11.2024) Alliance Française Madras- யில் மேடை நாடகமாக அரங்கேறியது என்பதை பகிர்வதில் மகிழ்கிறேன்.

என்னுடைய சிறுகதைகளில் நான் முக்கியமானதாக கருதும் கதைகளில் ஒன்று ‘அநிருத்தன் செய்த மூன்று கொலைகள்’. காரணம், இது பேசும் அரசியல். வெளிப்படையாக பலரும் பேசத் தயங்கும் அரசியல்…
இது வேலை, பணம் அதன் இயலாமை தரும் மனம் அழுத்தத்தை பற்றிய கதையாக தோன்றினாலும் இதன் ஆதாரம், வாய்ப்பு உள்ளவர்கள் வாய்ப்பு மறுக்கப்பட்டவர்களை ஏய்த்து பிழைப்பதை பற்றியது. அதனாலேயே இந்த அரசியல் எனக்கு முக்கியமாகபடுகிறது.
இதை சிறப்பான நாடகமாக உருவாக்கிய இயக்குனர் முருகானந்தம் மற்றும் குழுவினற்கு வாழ்த்துகளும் நன்றிகளும்.
இந்த நாடகத்திற்கு கிடைத்த வரவேற்பு புதிய நம்பிக்கையை கொடுக்கிறது
நன்றி
Leave a comment