தாத்தா எப்போதுமே என் மீது பெரிய நம்பிக்கை வைத்திருந்தார். முயற்சிகள் எல்லாமுமே ஜெயமாகும் என்பார். மணிரத்னம் படைப்புகளை முழுவதுமாக வாசித்துவிட்டு ‘நல்லா பண்ணிருக்க’ என்றார். தொண்ணூற்றி ஐந்து வயதில் அவர் அதை வாசித்திருக்க வேண்டிய அவசியமில்லை. எனக்காக தான் வாசித்தார். நான் தாத்தாவிற்காக அவர் ஆசைப்பட்ட வரலாற்று நாவல் ஒன்றை இந்த வாழ்நாளில் எழுதிவிடுவேன்.
இன்று தாத்தாவின் பத்தாவது நினைவு நாள்.
***
#தாத்தாவின்கதை
Leave a comment