லாலாகதைகள் 2- படைப்பின் உச்சம்


“ஆஆஆஆ-வோட ‘தாபு’ நாவல படிங்க. அவரோட படைப்பின் உச்சம்” பிரபல எழுத்தாளர் ஆஆஆஆவின் தீவிர வாசகர்/பக்தர் சொன்னார். நான் அந்த நாவலை படித்திருக்கிறேன், ஆனால் அவ்வளவாக பிடிக்கவில்லை என்பதை தயங்கி தயங்கி சொன்னேன்.

“புடிக்கலயா? புரிலனு சொல்லுங்க. அதெல்லாம் ஆயிர பக்க காவியம். ஒரு வாசிப்புல புரிஞ்சிறாது. திரும்ப வாசிங்க” பதட்டமாக பேசினார்.

நான் சரி என்று தலையாட்டிவிட்டு, “உங்களுக்கு புரிஞ்சிதா?” என்றேன்.

அக்கம்பக்கம் பார்த்துவிட்டு “சபரிமலைக்கு மாலை போட்ருக்கேன். பொய் சொல்லக்கூடாது” என்று சொன்னார்.

நான் புரியாமல் “என்ன ப்ரோ” என்றேன்.

“நான் இன்னும் அந்த நாவலை படிக்கல ப்ரோ” என்றார்.

“படைப்பின் உச்சம்னு சொன்னீங்களே!” அதிர்ச்சியாக கேட்டேன்.

“அப்டித்தான் ஆஆஆஆ சொல்லுவாரு” என்றார். நான் எதுவும் பேசாமல் நகர்ந்தேன். அவர் அப்படியே எதையோ யோசித்துக் கொண்டு நின்றார்.

அறையை விட்டு வெளியே வருகையில் அவர் யாரிடமோ பேசிக்கொண்டிருந்தது காதில் விழுந்தது, “தமிழ்லயே பெஸ்ட் நாவல் ப்ரோ. அவ்ளோ சீக்கிரம் புரியாது. ரெண்டு மூணு முறை படிங்க. படைப்பின் உச்சம்”