என்னிடம் காசில்லை
இதுவா கவிதை
என்ன செய்ய
செத்துமடி
எவ்வளவு செலவாகும்
இதுதான் கவிதை
விருது வேண்டும்
எவ்வளவு கொடுப்பாய்
***
புத்தகம் பதிப்பிக்கனும்
எழுத்தாளர் ரா.கு. படிச்சிருக்கியா?
இதுவரை இல்ல
அவரையே இன்னும் படிக்கலையா? நீயெல்லாம் எப்படி எழுதுவ?
கையில தான்.
***
தம்பி என்ன வேலை பண்ணுது?
கதை எழுதுறேனுங்க
அது சரி, பொழப்புக்கு என்ன பண்றீங்க?
கதை எழுதுறதுதாங்க என் வேலை பொழப்பு எல்லாம்
மாசம் கைக்கு என்ன வரும்
வலி வரும்.
***
நினைவு பிறழ்கிறது
மரணம் வந்துவிட்டதா?
உனக்கு அவ்வளவு எளிதாக விடுதலை கிடையாது
***
வேலைக்கு செல்ல விருப்பமில்லை
ஐயோ ஊர் என்ன பேசும்!
வேலைக்கு சென்றுவிட்டேன்
திருமணம் செய்ய விருப்பமில்லை
ஐயோ ஊர் என்ன பேசும்!
திருமணம் செய்து கொண்டேன்
தற்கொலை செய்துகொள்ள தோன்றுகிறது
ஐயோ ஊர் என்ன பேசும்!
வாழ்ந்துவிட்டு போகிறேன்.