எதையாவது எழுதலாம்


எதையாவது எழுதலாம்
எழுதவே பிறந்தேன் எனலாம்
யாரவது பதிப்பாளரை
நட்பாக்கிக் கொள்ளலாம்
புத்தகம் வெளியிடலாம்
ராயல்டி தரமாட்டார்
சண்டை போடலாம்
விருது வாங்கிக் கொடுப்பார்
வாயை மூடிக்கொள்ளலாம்
புரட்சி என்று நினைத்து எழுதலாம்
பிரச்சனையா
புனைப்பெயர் வைத்துக் கொள்ளலாம்
எதையாவது எழுதிக் கொண்டே இருக்கலாம்
யாருக்கும் புரியாது
பரவாயில்லை
பின்நவீனத்துவம் என்று
சொல்லிகொள்ளலாம்