இலவச ஈ-புத்தகங்களும் கூகிள் ப்ளேவும்


கூகிள் ப்ளே ஸ்டோரில் பல புத்தகங்கள் இலவசமாக கிடைக்கின்றன. முதன்முதலில் புத்தகத்தை டவுன்லோட் செய்ய முற்படும் போது, கிரெடிட் அல்லது டெபிட் கார்ட் விவரங்களை தர வேண்டும். முதல் முறை மட்டும் நம் வங்கிக்கணக்கில் இருந்து ஐம்பது ரூபாய் பிடித்துக்கொள்வார்கள். ஓரிரு நாட்களில் அந்த பணம் திருப்பி தரப்பட்டுவிடும். இது நாம் அளித்த விவரங்கள் உண்மையானதா என்று சரி பார்க்க.

கூகிள், பேபால் உட்பட பல தளங்களும் இப்படிதான் இயங்குகின்றன. இது அவர்களுடைய பாலிசி. மேலும் நாம் எப்போது வேண்டுமானாலும் நம்முடைய கார்ட் விவரங்களை அழித்துவிடலாம். இதுவரை நான் நூற்றுக்கனக்கான இலவச புத்தகங்களை கூகிள் ப்ளேவில் டவுன்லோட் செய்திருக்கிறேன்.  என் அனுமதியின்றி என் வங்கிக் கணக்கில் இருந்து பணம் டெபிட் செய்யப்பட்டதில்லை.

கூகிள் ப்ளே ஸ்டோரில், என்னுடைய இலவச புத்தகங்களை முதன்முதலாக டவுண்லோட் செய்யும் போது ஐம்பது ரூபாய் டெபிட் செய்யப்படுவதாக சிலர் என்னை தொடர்புகொள்கின்றனர். என் புத்தகம் என்றில்லை, முதன்முதலில் கூகிள் ப்ளேவில் எந்த இலவச புத்தகத்தை டவுன்லோட் செய்தாலும், ஐம்பது ரூபாய் டெபிட் செய்யப்படும் சற்றுப் பொறுத்திருந்தால் அந்த பணம் திரும்பி வந்துவிடும் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.

நன்றி
அரவிந்த் சச்சிதானந்தம்

Advertisements

7 thoughts on “இலவச ஈ-புத்தகங்களும் கூகிள் ப்ளேவும்

  • உங்கள் டெபிட் கார்டு மீது ‘இன்டர்நேஷனல் டெபிட் கார்ட்’ என்று குறிப்பிடப்பட்டிருக்க வேண்டும். பொதுவாக ஐ.சி.ஐ.சி.ஐ, ஆக்ஸிஸ் பேங்க் போன்ற நியூ ஜெனரேஷன் வங்கிகள் தரும் அடிப்படையான கார்டுகள்கூட இத்தகையவையே. அரசுடைமை வங்கி என்றால் நீங்கள் கூடுதல் பணம் கொடுத்து ப்ரீமியம் கார்டு வாங்க வேண்டியிருக்கலாம். பெரும்பான்மையான அரசுடைமை வங்கிக் கார்டுகள் இந்தியாவுக்குள் மட்டும் (+நேபாளம்) பயன்படுத்தத் தக்கவையே, சர்வதேச பயன்பாட்டுக்கானவை இல்லை. இதே பிரச்னை உங்கள் கார்டை வைத்து கிண்டில் மின்புத்தகம் வாங்க முயன்றாலும் வரும். இதே தீர்வு அதற்கும் பொருந்தும்.

   Liked by 1 person

 1. நான் டெபிட் கார்டை தான் இணைத்திருக்கிறேன் நண்பரே. என்ன பிரச்சனை என்று சரி பார்த்து சொல்கிறேன்.

  Like

 2. பிளே ஸ்டோரிங் தரவிறக்கிய உங்கள் புத்தகம் விண்டோஸ் டேப்ளட்டில் (ஆன்லைன் லைப்ரரி மூலம்) சரியாகத் தெரிகிறது. ஆனால் அதே கருவியில் மெலூஹாவின் அமரர்கள் பூச்சிகளாகத்தான் தெரிகிறது–டிஸ்பிளே ஆப்ஷன்ஸில் ‘ஸ்கேன்டு பேஜஸ்’ என்று தேர்வு செய்தாலும்கூட. அப்படித் தேர்வு செய்யப்பட்டவுடன் ‘ஊப்ஸ். தேர் வாஸ் எ ப்ராப்ளம்… என்கிற அறிவிப்பு மட்டும் கூடுதலாக வருகிறது. ஆனால் அதே மெலூஹா பழைய எக்ஸ்.பி. இயங்குதளம் உள்ள மேசைக் கணினியில் சரியாகவே தெரிகிறது! டேபிளில் (விண்டோஸ் 8.1) எக்ஸ்ப்ளோரர், குரோம் இரண்டு உலவிகளிலும் பரீட்சித்துப் பார்த்துவிட்டேன். பிரய்யோனப்படவில்லை. இம்மாதிரி எழுத்துரு சிக்கலுக்கு எளிய தீர்வு ஏதேனும் இருக்கிறதா?

  Like

  • unicode பயன்படுத்தி புத்தகங்களை உருவாக்கும் போது பெரும்பாலும் எந்த பிரச்சனையும் இருப்பதில்லை. அனால் தமிழ் ஈ-புத்தக வடிவமைப்பில் இன்னும் universal format என்று எதுவும் வராதது தான் இதுபோன்ற எழுத்துரு பிரச்சனைகளுக்கு காரணம். நானும் தமிழ் எழுத்துருக்களை வெவ்வேறு ரீடர்களில் பயன்படுத்தி சரி பார்த்து வருகிறேன். ஒவ்வொரு நிறுவனங்களும் தங்களுக்கென்று பிரத்தியேக mapping format வைத்திருப்பதால் ஒரே தீர்வு எதையும் கண்டுகொள்ள முடியவில்லை. தீர்வு கிடைக்கும்போது உங்களுடன் பகிர்கிறேன்.

   Like

 3. கடைசியில் என் பிரச்னைக்குத் தீர்வு மிக எளிது! குரோம் செட்டிங்ஸ்–>அட்வான்ஸ்டு செட்டிங்கஸ் போய் ரீசெட் செட்டிங்ஸ் என்பதைக் கிளிக் செய்து, உறுதிப்படுத்தும் பெட்டியில் ஓகே கொடுத்தால் போதும்!

  உதவி- https://productforums.google.com/forum/#!topic/chromebook-central/lQlutlW7r0o

  Liked by 1 person

Comments are closed.