ஒரு பேய் படமெனில் அது நம்மை பயமுறுத்த வேண்டும். சரி. அதுவே நம்மை வயிறுகுழுங்க சிரிக்கவும் வைத்தால்? அதுவே ஹாரர் காமெடி எனப்படும் genre. Scary movie series, ஹிந்தியில் கடந்த ஆண்டு வெளியான Go Goa Gone போன்ற படங்களை அதற்கு உதாரணமாக சொல்லலாம். நம்மூரில் ஹாரர் படங்களே குறைவு. இதில் எங்கிருந்து ஹாரர் காமெடி எடுப்பது !
ஆனால் அப்படி ஒரு படத்தை இப்போது எடுத்திருக்கிறார்கள். யாமிருக்க பயமே ஒரு ஹாரர் காமெடி படம்.
ஆரம்ப காட்சிகளில் படம் எந்த லட்சியமும் இன்றி நகர்கிறது. மூல கதைக்குள் நுழைவதற்க்காக நிறைய காட்சிகளை வீணடித்திருக்கிறார்கள். ஆனால் கதைக்குள் நுழைந்ததும், படம் ஆரவாரமாக நகர்கிறது. முதல் பாதி எப்படி இருந்தாலும், இரண்டாவது பாதி எங்கேஜிங்காக இருந்தால் பார்வையாளர்களை கவரந்து விடலாம் என்பதற்கு இந்த படம் மற்றொரு உதாரணம்.
கதாநாயகன் கிரணின் தந்தை இறக்கும் போது ஒரு பெரிய வீட்டை அவனுக்கு எழுதி வைத்துவிட்டு இறந்துவிடுகிறார். அவனும் நாயகியும் அதை புதுபித்து ஹோட்டலாக மாற்றுகின்றனர். அந்த ஹோட்டலில் மேனஜாராக வேலை சேர்கிறான் சரத். அவனுடைய தங்கையும் அந்த ஓட்டலில் சேர்ந்து கொள்கிறாள். ஹோட்டலில் தங்க வரும் ஒவ்வொருவரும் இறக்கின்றனர். பின் தான் தெரிய வருகிறது ஹோட்டலுக்குள் பேய் இருக்கிறதென்று. பேயிடமிருந்து எப்படி தப்பிக்கிறார்கள் என்பதே கதை.
மேனேஜராக நடித்திருக்கும் கருணாகரன் அதிக கவனத்தை ஈர்க்கிறார். நாயகன் கிருஷ்ணா சில படங்களில் தரமான நடிப்பை வெளிப்படுத்துகிறார். சில படங்களில், ஆர்யா போல், மெத்தனமாக நடிக்கிறார். இந்த படத்திலும் அப்படி தான். சில காட்சிகளில் நன்றாக நடித்திருக்கிறார், சில காட்சிகளில், சேட்டை பட ஆர்யா போல் ஏதோ பேச வேண்டுமே என்று வசனம் பேசி நடிக்கிறார். எனினும் காட்சிகள் பார்வையாளர்களை கட்டி போதும் வகையிலேயே இருக்கின்றன.
திகில் காட்சிகளை பார்த்தால் பயப்பட வேண்டுமே! ஆனால் சிரிப்பு வருகிறது. அந்த காட்சிகளில் நம்மை சிரிக்க வைக்கவே இயக்குனர் முயன்றிருக்கிறார். அதில் வெற்றியும் பெற்றுவிட்டார். சிரித்து கொண்டே இருக்கும் போது, யாரும் எதிர்ப்பார்க்காத நேரத்தில் பயமுறுத்துகிறார்கள். அதுவே படத்தின் வெற்றி. தமிழில் முதன்முதலில் ஹாரர் காமெடி படமொன்றை வெற்றிகரமாக எடுத்த இயக்குனரை பாராட்டிட வேண்டும். ஏராளமான இடங்களில் டைரக்டர் டச் இருக்கிறது. அதற்கும் பாராட்டுக்கள்.
ஹாரர் படங்களில் மிக முக்கியமானதொரு விஷயம் camera movement. ஒரு காட்சியில், பேயை காண்பித்து பார்வையாளர்களை பயமடைய செய்ய வேண்டுமெனில், அந்த காட்சியில் கேமராவும், பார்வையாளர்களும், கதாபாத்திரங்களும் ஒரே நேரத்தில் பேயை பார்க்க வேண்டும். இந்த டைமிங் கொஞ்சம் பிசகினாலும் திகிலுணர்வு ஏற்படாது. ஆனால் இங்கே, சில இடங்களில் ஒளிப்பதிவு சறுக்குகிறது. ஆங்காங்கே படத்தொகுப்பும் சறுக்குகிறது. மேலும் இரட்டை அர்த்த வசனங்கள் பல இடங்களில் எடுபடவில்லை. S.J. சூர்யாவிற்கு பின் இரட்டை அர்த்த வசனங்களை கட்சிதமாக பயன்படுத்தும் இயக்குனர்கள் நம் சினிமாவில் இல்லை. படம் வேகமாக நகர்ந்து கொண்டிருக்கையில், பாடலை வைத்து படத்தை பிடித்து நிறுத்துகிறார்கள். பாடல்களின்றி படம் எடுக்கும் காலம் வந்துவிட்டது என்பதை இயக்குனர்கள் புரிந்து கொள்ளவேண்டும். படத்தில், இத்தகைய குறைகள் இருந்தாலும், நிறைகளே மேலோங்கி நிற்கின்றன.
படத்திற்கு கொஞ்சம் ஆங்கில, தாய்லாந்து, கொரிய படங்களின் இன்ஸ்பிரேஷன் இருக்கிறது. conjuring பட தீமும் படத்தில் இழையோடுகிறது. எனினும் தமிழ் சினிமாவிற்கு இது புதிய வகை படம். ரசித்து பார்க்கலாம். பார்க்க வேண்டிய படம்.
Hey….last nighti saw on DVD…I enjoyed ur review…..tks
LikeLike
thank you
LikeLike