உதிரிப்பூக்கள், cape Fear, கடல்- இந்த மூன்று படத்த்திருக்கும் ஒரு ஒற்றுமை உண்டு. கதையில் அல்ல….
உதிரிப்பூக்கள் ‘விஜயன்’, Cape fear ‘Robert De Niro’ , கடல் ‘அர்ஜுன்’-இந்த மூன்று கதாப்பாதிரமும் ஒரே மாதிரியாக வடிக்கப்பட்டவை. இறுதி வரை தான் பிடித்த பிடியில் உறுதியாக இருக்கும் கதாப்பாத்திரங்கள் இவை மூன்றும். கெட்டவனாக இருப்பதே எளிது என எண்ணிக் கொண்டு மற்றவர்களை கேலியாக பார்க்கும் கதாபாத்திரங்கள் இவை…
உதிரிப்பூகளில் விஜயன் தனித்து தெரிந்ததை போல் இதில் அர்ஜுன் தனித்து நிற்கிறார். அவருடன் போட்டி போட்டுக்கொண்டு நடிக்கிறார் அரவிந்த்சாமி. வருங்கால தமிழ் சினிமாவிற்கு இரண்டு திறமையான நடிகர்கள் கிடைத்துவிட்டனர்…
நன்மையையும் தீமைக்கும் நடக்கும் போராட்டமே கடல். அதை ஒரு அழகான நாவல் வடிவத்தில் சொல்லி இருக்கிறார்கள். கதை நகரும் பாணி நாவல் வடிவத்தில் இருப்பதன் விளைவு, பலர் இதை Slow-Screenplay என்கிறார்கள்.
ஒரு கதை வேகமாக நகர்வது கதை மாந்தர்களை பொறுத்தே இருக்கிறது. இதில் வரும் கதை மாந்தர்கள் சாதரணமானவர்கள். அவர்களின் வாழ்க்கை சாதரனமானனவை. அவர்கள் வாழ்கையின் சாதரணமான நிகழ்வுகளே இப்படத்தின் திரைக்கதை. ஆனால் கதைக்கு தேவையுடைய காட்சிகள் மட்டுமே படத்தில் உண்டு, ஒவ்வொன்றும் Distinct-ஆன காட்சிகள். அதனால் இதை சோடை போன திரைக்கதை என்பது உசிதமன்று. திரைக்கதை கதைக்கானது, அதை இப்படத்தில் சரியாகவே செய்திருக்கின்றனர்.
ஒரே நெருடல், வழக்கமான தமிழ் படங்களை போல் கதாநாயகியை பாடலுக்காக மட்டும் பயன் படுத்திவிட்டனர். முக்கியமான கதாபாத்திரமாக உருவெடுத்திருக்கவேண்டிய கதாநாயகி கதாப்பாத்திரம், சற்று அழுத்தமற்று போய்விட்டது…
இது ஒரு வித்தியாசமான கதை இல்லைதான். ஆனால் இப்படத்தில் இழையோடும் உட்கருத்துக்களும், இதில் நடித்தவர்களின் திறமையான நடிப்பும் படத்திற்கு வலு சேர்த்திருக்கிறது. அனைவரும் தங்கள் கதாப்பாத்திரத்தை உணர்ந்து செவ்வன நடித்திருக்கின்றனர்..
ஒருவன் நல்லவனாகே இருக்க முயன்று தோற்கிறான். ஒருவன் தீயவானாக் இருந்துக் கொண்டு தான் ஜெயித்து விட்டதாக எண்ணிக்கொள்கிறான். நல்லவனாக இருப்பதா, கெட்டவனாக இருப்பதா என குழம்பும் ஒருவன் காலம் ஏற்ப்படுத்திக் கொடுக்கும் வாய்ப்பை நம்பிக்கையுடன் இறுகப் பற்றிக்கொண்டு பக்குவமடைகிறான். இங்கு நம்பிக்கையே உண்மையான கதாநாயகன். இதுவே கடல் படத்தின் சாராம்சம்..
Director touch ஒரு புறம் இருக்க Writer’s touch இந்த படத்தில் நிறைய உண்டு. கதாப்பாத்திரங்களை சிறப்பாக வார்த்தெடுத்த பெருமை, கதாசிரியரையே சேரும். காட்சியை கவித்துவமாக படம்பிடித்திருக்கிறார் ஒளிப்பதிவாளர். ஒவ்வொரு கோணமும் ஒரு கலைப்படைப்பாக அமைந்துள்ளது. அதற்க்கு பலம் சேர்த்துள்ளது ஆரவாரமற்ற பின்னணி இசை. மணிரத்னத்தின் டச் இந்த படத்தில் இல்லை என்கிறார்கள். நாயகன், அக்னி நட்சத்திரம், பாம்பே போன்ற படங்களை எடுத்த மணிரத்னத்தை இதில் தேடினால் அவர் கிடைக்கமாட்டார். இந்த கதைக்கு அவர் தேவைப்படவில்லை. புதிய முயற்சிகளை செய்ய வேண்டியது ஒரு படைப்பாளியின் கடமை, அதை அவர் செய்திருக்கிறார். இதில் இலக்கியத்தை திரையில் இலக்கியமாகவே கொணர மணி முயன்றிருக்கிறார். அதில் வெற்றியும் பெற்றிருக்கிறார். மற்றப்படி மணிரத்னம் படங்களுக்கே உரித்தான வண்ணங்கள், துண்டு வசனங்கள் இந்த படத்திலும் உண்டு. தன் மற்றப் படங்களை போல் இதிலும் தான் சொல்ல வந்ததை சுருங்க-விளங்க சொல்லியிருக்கிறார்.
கடல் ஒரு தரமான பொழுதுபோக்கு படம். மணிரத்தினம் என்ற கலைஞனின் மீது மிரட்சியும் எதிர்ப்பார்ப்பும் வைத்துக் கொண்டு ‘கடல்’ படத்திற்கு போனால் நிச்சயம் கடல் ஆழமற்று தோன்றலாம். எந்த எதிர்பார்ப்புமின்றி பார்ப்போர்க்கு, கடல் ஒரு அழகான நாவலாக தோன்றும்.வெறும் ‘Racy Entertainer’ எதிர்பார்போர்க்கு பிடிப்பதற்கு வாய்ப்பில்லை..
Good one. Even i felt the somewhat the same way. I too liked the movie. He should have given some importance to the song “Adiye”.
LikeLike