பழைய பாடல்கள் புதிய பார்வை


திரைப்படப் பாடல்களை வெறும் கேளிக்கையாக பார்த்துவிட்டு
ஒதுக்கி ஒதுங்கிச் சென்று விடலாம். ஆனால்சற்றே உன்னிப்பாக
கவனிப்போமேயானால் அதில் பொதிந்து கிடக்கும் பல கலைத்துவ
கலாச்சாரமாற்றங்களை கண்டுக் கொண்டுவிடலாம்.

இசைப்பாடல்கள், சொல்லத் துடிக்கும் கதைகள் ஏராளம்.
இசையமைப்பாளான் ஆன்மாவை வருட முயல்கிறான்.
பாடலுக்கு உயிரளிப்பது இசையமைப்பாளனெனில்அதை
பேச வைப்பது பாடலாசிரியன்.  பாடலுக்கு பின் ஒளிந்திருக்கும்
படைப்பாளிகள் அனைவரும் , காலமாற்றத்தோடு சேர்ந்த தன்
கருத்துக்களை பதிவு செய்கிறார்கள் . அதில் அவர்களின்
குரலோடு சேர்ந்துகலாசாரத்தின் குரலும் ஒலிக்கிறது.

வருங்காலத்துவம் பேசும் படைப்பாளியாகவே இருந்தாலும்
தான் வளர்ந்த சூழ்நிலைகளைமுழுவதும் தவிர்த்து அவனால்
எதுவும் இயற்றிவிட முடியாது. ஒரு கலைஞனின் படைப்பில்
அவன் வாழும்சமுக கலாச்சார நிகழ்வுகள் பொதிந்திருக்கும்.
அவ்வாறான படைப்புகள் இதையத்திலிருந்து வெளிப்படும்போது
அது உன்னதமாகிறது.
காலத்தைக் கடந்து நிற்கின்றது…

இங்கு கலைப்படைப்புகளா கமர்சியல் படைப்புகளா என்கிற
கேள்வி அவசியமன்று.
தத்துவ பாடல்களா காப்ரேபாடல்களா என்ற ஆராய்ச்சியும்
தேவையன்று .ஏனெனில் ஒரு படைப்பின் தன்மையை காலமே
நிர்ணயிக்கிறது. முன்னாளில் ஜப்பானில்
ஒதுக்கி தள்ளப்பட்ட குரோசோவா பின்னர் உலகிலேயேதலைசிறந்த
படைப்பாளி எனப் போற்றப்படுகிறார். அவ்வாறெனில் காலத்தை
கடந்து நிற்கும் அணைத்துபடைப்புகளும் கலைப் படைப்புகளே…

ஆட்டமா தேரோட்டமா 

இப்பாடல் வெளிவந்து இருபது வருடங்கள் ஆகிவிட்டது.
இன்னும் இருபது வருடங்கள் கழிந்தாலும் இப்பாடல்சலிக்காது..
வெறும் ஐட்டம் நம்பர் பாடல்தானே என ஒதுக்கி விட முடியாது.
பெரும்பாலும்  ஐட்டம்நம்பர்  பாடல்களில் இடுப்பை மட்டுமே
க்ளோஸ் அப் ஷாட்டில் காட்டுவார்கள். ஆனால் இப்பாடலில்
நிறையஇடங்களில் முகத்தை க்ளோஸ் அப்பில் காட்டியிருப்பார்கள்.
நடிகையின் முக பாவத்திற்கு நிறையமதிப்பளிக்கப்  பட்டிருக்கும்.
இயக்குனர், படத்தொகுப்பாளர் இரண்டு பேருமே தங்கள் வேலையை
நிரம்பசெய்திருப்பார்கள். பின்னணியில் ஒலிக்கும் ட்ரம்ஸ் இசை,
தனிச் சிறப்பு .இறுதில்வரும் சில
காமெடியான நடன அசைவுகளை ஒதுக்கிவிட்டால்,
ஐட்டம் நம்பர் பாடல்களிலேயே இது ஒருகல்ட் கிளாசிக்…..

ஆண்டவன பார்க்கணும்

குடி போதையில் இருப்பவர்கள் பொய் சொல்ல மாட்டார்கள்
என்பதை கருத்தில் கொண்டு பாடலாசிரியர் எழுதியுள்ளார்.
இங்கு அவரின் சிந்தனை அபரிமிதமானது.

ஆண்டவன பார்க்கணும்

அவனுக்கும் ஊத்தணும்

அப்பநான் கேள்வி கேக்கணும்..

ஆண்டவனுக்கு ஊத்திக் கொடுக்கும் போது கேள்வி கேக்க
விரும்பிகிறார் கவிஞர்…
அவர் நினைத்திருந்தால்

“சர்வேச, என்னை நீ ஏன் படைத்தாய்…

வீதியில் ஏன் விடுத்தாய்”
என மெட்டுகேற்றார் போல் எழுதி இருக்கலாம்.. ஆனால்
அவர் அவ்வாறனநம்பிக்கை யற்ற வரிகளை எழுதாமல்,
சற்றே நம்பிக்கையுடன் வாழ்வின் துன்பங்களிலிருந்து
தப்பிசெல்வதற்கான வழியை ஆண்டவனிடம் வினவுகிறார்..

“தலையெழுத் தென்ன மொழியடா

தப்பிக்க என்ன வழியடா ”

பாடல் முழுவதும் தத்துவங்கள் நிரம்பி இருக்கும்…

இது ஓர் தனித்துவமான தத்துவ
பாடல்…


மரத்த வச்சவன்

தமிழ் பாடல்களில், பார்வையாளர்களை நோக்கி கருத்துக்களை
வைக்கும் பாணியை திரு.பட்டுகோட்டைகலியாண சுந்தரம்
தொடங்கி வைத்தார். பின் அந்த பாணியை எம்.ஜி.ஆர் தொடர்ந்து
பின்பற்றினார்.  எம்.ஜி.ஆருக்கு பின் அவ்வகையான பாடல்கள்
குறைந்தது. தொண்ணுறுகளில் ரஜினி காந்த் மீண்டும் அந்த
பாணியை தொடங்கி வைத்தார். ஆனால் அதற்க்கு முன் அதே
பாணியில் வந்த ஒரு சில பாடல்களில்குறிப்பிட வேண்டிய
பாடல் இது ..

உதவி யின்றி துடிப்பவர்க்கு உதவிடவே நீ படிப்பாய்
உணவு யின்றி தவிப்பவர்க்கு உணவு தர நீ படிப்பாய்

நிவேதா

திரைப்படங்களை உருவாக்கும் முறையில் இயக்குனர்.வசந்த்
புதுமைகள் செய்து கொண்டிருந்தநேரமது.அந்நேரத்தில்,
பல நூறு ஷாட்களை கொண்டு எடுக்க பட்ட இந்த பாடல்
மிகவும் புதுமையாக கருதப்பட்டது. அதுவரை ஒரு பாடலை இந்த
மாதிரி விசுவலைசேஷன் யாரும் செய்ததில்லை. பாடலில்
‘நிவேதா’ என்ற ஒரே வரியே மீண்டும் மீண்டும் ஒளித்திருக்கும்.
அதை பாடிய விதம் பாடலுக்கு
மேலும் மெருகூட்டியிருக்கும். தமிழ் சினிமா வராலாற்றிலேயே
புதுமையான விசுவலைசேஷனுக்கு முன்னோடியாக கருதப்படும் பாடலிது .

கத்திரிக்காய் கத்திரிக்காய் 

பெண்களை வர்ணித்து பல நூறு பாடல்கள் எழுதப்பட்டுவிட்டது.
ஆனால் ஓர் பெண், ஆணை வர்ணிப்பது போன்று எழுதப்பெற்ற
ஒரே தமிழ் பாடலிது. ஓர் தேர்ந்த இயக்குனரின் படங்களிலேயே
அவ்வாறான காட்சிகள் அமையப்பெரும் என்பதற்க்கு சிறந்த
உதாரணமிது. பாடலை எழுதியதும் தேர்ந்த கவிஞர் என்பதாலோ,
பாடலில் கேலி கிண்டலைத் தவிர்த்து, ஹெடோனிச வரிகள்
இலையோடும்.அது பெண்ணின் வரிகளாக வெளியாகியிருப்பது
பாடலின் தனி சிறப்பு.

கொழு கொழு தேகத்தில் கொடிப் போல பிண்ணட்டா
குழிவிழும் கன்னத்தில் குடுத்தனம் பண்ணட்டா….
அழகனே எனக்கு மூச்சு மூட்டனும்….

முதன் முதலில் பார்த்தேன்

தொண்ணூறுகளின் இறுதியில் தூர்தர்ஷன் ஒளியும் ஒலியும்
நிகழ்ச்சியில் சக்கை போடு போட்ட பாடல் இது. ஹிந்தி பாடல்
ஒன்றை அப்படியே தமிழில் தந்திருந்தாலும், பாடலின்
கவித்துவமான வரிகள் பாடலை பெரிதும் பேசவைத்தது.
பாடலில் எதுவுமே அறிந்த முகங்களன்று எனினும் பாடல்
பிரபலமானதற்க்கு காரணம், கண்ணுக்கு குளிர்ச்சி அளிக்கும்
வகையில் அமைந்த ஒளிப்பதிவு. எத்தனை முறை பார்த்தாலும்
கேட்டாலும் சலிக்காத பாடலிது…

விவாதிக்க இன்னும் பல நூறு பாடல்களுண்டு.
அவை பின்னொருநாள்….

Advertisements