புத்தகங்கள்

Ooochu cover image

ஊச்சு (The Fear)- துப்பறியும் நாவல் 

ஜாஸ்மின், நகுல், சுமித் மற்றும் மனிஷ், நால்வரும் நெருங்கிய நண்பர்கள். ஆவணப் படம் எடுப்பதற்காக மர்மங்கள் நிறைந்த மேல்பாறை நோக்கி பயணப்படுகிறார்கள். அந்த காட்டின் அமானுஸ்யத்தை அவர்கள் முழுவதுமாக உணர்ந்துகொள்வதற்குள், ஒவ்வொருவராக காணாமல் போகிறார்கள். இன்ஸ்பெக்டர் அர்ஜுன் அவர்களைத் தேடி சென்னையிலிருந்து புறப்படுகிறார். ஒருபுறம், நண்பர்கள் தொலைந்து போனதைப் பற்றி ஊரில் ஒவ்வொருவரும் ஒரு கதை சொல்கிறார்கள். மறுபுறம், மேல்பாறை போலீசாரோ ஒத்துழைக்க மறுக்கிறார்கள். எல்லா தடைகளையும் மீறி அர்ஜுன் மர்ம முடிச்சுகளை அவிழ்க்கிறார். ஆனால் வழக்கு மேலும் சிக்கலாகிக் கொண்டே போகிறது. மேல்பாறையின் மர்மங்களை தேடிச் சென்ற யாரும் உயிருடன் திரும்பியதில்லை என்பதை அறிந்தும் அர்ஜுன் தொடர்ந்து துப்பறிகிறார். அறிவியலுக்கும் அமானுஸ்யத்திற்கும் இடையே நடக்கும் மிகப்பெரிய போராட்டத்தில் சிக்கிக்கொண்ட அர்ஜுன் பிழைப்பாரா? நண்பர்கள் உயிருடன் திரும்புவார்களா? மேல்பாறையின் மர்மத்திற்கு முற்றுப் புள்ளி வைக்கப்படுமா?

அந்தாதி பதிப்பகம்

Click to buy Kindle edition


Pirazhntha iravugal book cover 

பிறழ்ந்த இரவுகள்- குறுநாவல்கள்

பிறழ்ந்த இரவுகள் மற்றும் நண்பனின் கடிதங்கள் குறுநாவல்களின் தொகுப்பு
அந்தாதி பதிப்பகம்
Click for Kindle edition

Sithiramalai Ragasiyam cropped

சித்திரமலை ரகசியம்- சிறார் கதை

பேராசிரியர் ராகவ் தன் பேரப் பிள்ளைகளுடன், மிகவும் அத்தியவசியமானதொரு ரகசியத்தை தேடி சித்திரமலைக்கு பயணப்படுகிறார்.  நீண்ட அந்த பயணத்தில் அவர்கள் மேலும் சில ரகசியங்களை தெரிந்து கொள்கின்றனர். இது குழந்தைகளுக்காவும், குழந்தைகளுக்கு சொல்வதற்காக பெரியவர்களுக்காவும் எழுதப்பட்ட                                                            கதை.

அந்தாதி பதிப்பகம்
Click for Kindle edition

Nagaichuvaikathaigal2


நகைச்சுவைக் கதைகள்- சிறுகதைத் தொகுப்பு
நகைச்சுவைக் கதைகளின் தொகுப்பு
அந்தாதி பதிப்பகம்
Click for Kindle edition

Konjam Thiraikathai- Aravindh Sachidanandam

கொஞ்சம் திரைக்கதை

நல்ல திரைக்கதைகளை கொண்ட சில அமெரிக்கத் தொலைக்காட்சி தொடர்களின் திரைக்கதை சிறப்பம்சங்களை பற்றி பேசும் இந்த புத்தகம், வெவ்வேறு காலகட்டங்களில் வெளியான கட்டுரைகளின் தொகுப்பு.

அந்தாதி பதிப்பகம்
Click for Kindle edition

Nakulanin Naai front cover


நகுலனின் நாய்- சிறுகதைத் தொகுப்பு

மனிதனின் ஆழ்மன இச்சைகளையும், அகப் போராட்டங்களையும், மனப் பிறழ்வுகளையும் மனோதத்துவ தளத்தில் சொல்லிடும் சிறுகதைகள் அடங்கிய தொகுப்பு.

நகுலனின் நாய்- சிறுகதைத் தொகுப்பு
அந்தாதி பதிப்பகம்
Click to buy

Click for Kindle edition

Kamal_Aravindh_Sachidanandamசகலகலாவல்லவன்: கமலின் பிற பரிமாணங்கள் – ஓர் உரையாடல்

பரத்வாஜ் ரங்கன் கமலுடன் மேற்கொண்ட உரையாடல்களின் தமிழாக்கம் இது. தி ஹிந்துவில் வெளியான இந்த கட்டுரைகள் தற்போது கிழக்கு வெளியீடாக தமிழில் வந்துள்ளது.

சகலகலாவல்லவன்: கமலின் பிற பரிமாணங்கள் – ஓர் உரையாடல் -பரத்வாஜ் ரங்கன்
தமிழில்: அரவிந்த் சச்சிதானந்தம்
கிழக்கு பதிப்பகம்
Click to buy

ThatpamThavir_frontcover

தட்பம் தவிர்- க்ரைம் நாவல்

சென்னையில், ஒரு பிரபலமான அரசு பொறியியல் கல்லூரியில் பேராசிரியர் ஒருவர் கொடூரமான முறையில் கொல்லப்படுகிறார். இன்ஸ்பெக்டரான கதாநாயகன் விசாரணையில் ஈடுபடுகிறான். போலீசின் கவனம் முழுக்க கல்லூரியின் மீதிருக்க, கோயம்புத்தூரில் இன்னொரு கொலை நடக்கிறது. கொலைகாரன் வேண்டுமென்றே இன்ஸ்பெக்டருக்கு துப்பு கொடுத்துவிட்டு செல்ல, முதல் கொலை நடந்த கல்லூரியில், மாணவனொருவன் தற்கொலைக்கு முயல்கிறான். அவன்தான் முதல் கொலையின் விட்னெஸ். கல்லூரி நிர்வாகத்தால், தான் மனரீதியான சித்ரவதைக்கு ஆளானதால் தற்கொலைக்கு முயன்றதாக மாணவன் சொல்ல, இன்ஸ்பெக்டருக்கு உண்மைகள் புரியத் தொடங்குகின்றன. கல்லூரியில் ரகசிய விசாரணை மேற்கொள்கிறார். பொறியியல் கல்லூரிகளில் மாணவர்கள் எந்த அளவிற்கு கொடுமை படுத்தப்படுகிறார்கள் என்பதை அறிந்து திடுக்கிடுகிறார். விசாரணையில், கல்லூரியின் முன்னாள் மாணவன்தான் கொலைகாரன் என்று தெரியவருகிறது. மனநிலை பாதிக்கப்பட்ட அவனை கைது செய்கிறார் இன்ஸ்பெக்டர். ஆனால் கொலைகள் தொடர்கின்றன. பின் ஏராளமான திருப்பங்கள் நிகழ்கின்றன. உண்மையான கொலைகாரன் யார்? தப்பு செய்தவர்கள் தண்டிக்கப் படுவார்களா? மிகப்பெரிய மனோதத்துவ விளையாட்டில் சிக்கிக்கொண்ட இன்ஸ்பெக்டர் பிழைப்பாரா?

தட்பம் தவிர்- க்ரைம் நாவல்- e-book

அரவிந்த் சச்சிதானந்தம்
அந்தாதி பதிப்பகம்
Click for Kindle edition
Click to buy PDF

Thodarum_frontcover

தொடரும் சினிமா- சினிமா கட்டுரைகள்- free e-book

பல்வேறு நேரங்களில் பல்வேறு களங்களில் வெளியான திரைக் கட்டுரைகளின்  தொகுப்பு இது.

தொடரும் சினிமா- சினிமா கட்டுரைகள்-  free e-book

அரவிந்த் சச்சிதானந்தம்

ஸ்பார்க் க்ரூஸ் பப்ளிக்கேஷன்ஸ்

To download PDF click here
To download in google play click here

maniratnam_wrapper

மணிரத்னம் படைப்புகள் ஓர் உரையாடல்

மணிரத்னம் படைப்புகள் ஓர் உரையாடல்- பரத்வாஜ் ரங்கன்

தமிழில்: அரவிந்த் சச்சிதானந்தம்

கிழக்கு பதிப்பகம்
Click to buy

Bothidharmar muthal jamesbond varai

போதிதர்மர் முதல் ஜேம்ஸ்பாண்ட் வரை- free e-book

இவை வெறும் திரைப்பட விமர்சனங்களன்று. உலகத் திரைப்படங்களைப் பற்றி ஆழ்ந்த புரிதல் கொண்ட ஒரு ரசிகனின் கருத்துக்கள். விமர்சனங்களினூடே திரைக்கதை உத்திகள், சினிமாவைப் பற்றி ஒரு சராசரி ரசிகனுக்கு இருக்க வேண்டிய புரிதல்கள், எந்த வகையான சினிமாவை ஏற்றுக்கொள்வது, எந்த வகையான சினிமாவை நிராகரிப்பது போன்ற கருத்துக்கள், என பல்வேறு விடையங்கள் இதில் விவாதிக்கப்பட்டுள்ளன .பல்வேறு நேரங்களில் பல்வேறு களங்களில் வெளியான திரைக் கட்டுரைகளின்  தொகுப்பு இது. படியுங்கள். பகிருங்கள்.

போதிதர்மர் முதல் ஜேம்ஸ்பாண்ட் வரை- free e-book
அரவிந்த் சச்சிதானந்தம்
ஸ்பார்க் க்ரூஸ் பப்ளிக்கேஷன்ஸ்
To download PDF click here
To download in google play click here

 

Advertisements